(Reading time: 26 - 51 minutes)

அந்த பக்கம் அதற்க்கு அவன் என்ன கூறினானோ? உடனே, சரிப்பா உங்க வீட்டு ஆட்களுக்கு முன்னாடிவேனா நீ சொன்னது போல் உன்ன கூப்பிடுறேன். இப்போ ஒகே வா! நீ வா... நான் அர்ஜெண்டா முடிக்க வேண்டிய வேலையை என் டீம் லீடரிடம் கேட்டு முடித்துவிட்டு இன்னைக்கு மதியமும் நாளைக்கும் லீவ் சொல்லிடுறேன் என்னை ஒரு மூன்றுமணிக்கு மேல் வந்து பிக்கப் பண்ணிகோ, அப்போ நீ நம் அழகுநிலாவை நேரிலேயே இன்வைட் பண்ணு நான் வச்சுடுறேன் என்று இணைப்பை துண்டித்தாள் சுமதி .

அவள் பேசும்போதே ஓர் அளவு யூகித்துவிட்ட அழகுநிலா எப்படிடீ? இரண்டுபக்கமும் கிரீன் சிக்னல் கிடைச்சாச்சு போல என தானும் அவர்களது மகிழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள் அழகி .

ஆமா அழகி! வீட்டிற்கு அம்மா, அப்பா வந்து என்னை விசாரிக்க ஆரம்பித்ததுமே நான் முதலில் கோபப்படுட்டு எதுவும் பேசிடுவாங்களோ? என்று தான் பயந்தேன். ஆனா! அப்பா தான், யார் அந்த பையன் என்று கேட்டதும் நான் விசுதான் பா! என்று சொன்னேன். ஏற்கனவே காலேஜ் படிக்கும் போதே அப்பாகிட்ட நம்ம ப்ரன்ட் என்ற முறையில் அவனை அறிமுகப்படுத்தியிருந்ததால் அப்பாவிற்கு விசுவை அடையாளம் தெரிந்து கொண்டார். பயபுள்ள அப்பவே ஓவராக்ட் கொடுத்து அப்பாகிட்ட நல்லபிள்ளைனு சர்டிபிகேட் வாங்கிட்டான் .

ஆனால், அவங்க வீட்டிலும் சரின்னு ஒத்துக்கொண்டால்தான் இரண்டுபேருக்கும் கல்யாணம் செய்துவைப்பேன் என்று அப்பா சொல்லிடாருடீ. விசு வீட்டில் தான் முதலில் ஒத்துக்கல வேறு ஜாதின்னு தெரிஞ்சதும் ரொம்ப யோசித்தாங்க போல! ஆனா என் விசு கல்யாணம் செய்தால் என்னைமட்டும் தான் என்று உறுதியா சொல்லிவிட்டதால் அவங்கள் வேறு வழியில்லாமல் ஒத்துக்கிட்டாங்க. ஆனா அவங்க எதிர்பார்த்த டவுரியை விட அப்பாவிற்கு விசுவை பிடித்துப்போனதால் அதிகம் போடுவதாக அப்பா சொல்ல, இப்போ அவங்க வீட்டிலேயும் முழு சம்மதத்தோடு ஒத்துகிட்டாங்க. நாளைக்கு பூ வச்சு கல்யாணத்தை உறுதிபடுத்த போறாங்கடீ அழகி. நீ கண்டிப்பா நாளைக்கு முழுவதுவும் என் கூடவே இருக்கனும் இப்போவே லீவ் சொல்லிடு என்றாள் சுமதி மகிழ்ச்சியுடன்.

தனது பிரச்னையை தற்போது சொல்லி அவர்களின் சந்தோசத்தை கெடுக்கவேண்டாம் என அவள் முடிவெடுத்து, வெளியில் சிரித்து நான் இல்லாமல் என் ப்ரண்ஸ் கல்யாண ஏற்பாடு நடந்திடுமா?, நான் வந்து இரண்டு பேரையும் கலாய்த்து உங்கள் நிச்சய விழாவை சிறப்பிக்காவிட்டால் எப்படி? என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர்களின் டீம் லீடர் எல்லோரையும் அவசரமாக அழைக்க இருவரும் விரைந்தனர்.

அங்கு மதியம் பதினோருமணிக்கு அவசரமான முக்கியமான மீட்டிங் இருப்பதால் அதற்குள் அவர்களின் ப்ராஜெக்ட் பற்றிய பெர்பார்மன்ஸ் ரிப்போர்டை சமர்பிப்பதற்கான் நோட்ஸ் அனைவரும் விரைந்து தயாரிக்க ஆரம்பித்தனர்.

ரமேஸ் வேலை செய்துகொண்டு இருந்தாலும் பார்வை என்னவோ அழ்குநிலாவையே சுற்றிசுற்றி வந்தது. அன்று மாலுக்கு போன அழ்குநிலாவிற்கு பிரச்சனை எதுவும் இல்லையே என விசாரிப்பதற்கு நேரம் பார்த்தபடி இருந்தான். அதை தற்செயலாக் கவனித்த அழகுநிலா என்ன என்று தன புருவத்தை வில்லாக வளைத்து பாவனையில் கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டபின்புதான், இதுஎன்ன அந்த ஹன்ட்சம் ஹீரோ மாதிரி நானும் புருவம் உயர்த்தி கேட்கிறேன். ஒரு இரண்டுதடவை சந்திப்பிலேயே அந்த ஆதித்தின் அசைவுகள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? இது நல்லதுக்கில்லையே.... என மனம் எச்சரிக்க,

மற்றொரு மனமோ அவன் உனக்கு ஆபத்தில் உதவியவன். அதனால், மனதில் ஹீரோவாக அவனின் பிம்பம் பதிந்துவிட்டது. மேலும் அவனுக்கு அழகான காதலிவேறு இருக்கிறாள். பிறர் மனை நோக்காதே என்ற பழமொழி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தான் என்றது.

அவனின் உயரம் என்ன...? அழகு என்ன..? நம்மையெல்லாம் அவன் திரும்பியே பார்க்க மாட்டான், அவன் திரும்பி பார்க்காமல் இருப்பது சரி. ஒரு ஆணை இவ்வாறாக நினைத்தேன் என்று என் ஆத்தாளுக்கு தெரிந்தால் என்னை உப்புக்கண்டமாக்கி விடுவாள். இந்த மாதிரி நினைப்பெல்லாம் இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் என அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.

அழகா இருக்கிறான், ஆபத்தில் உதவியிருக்கிறான், அந்த எல்லையோடு பழகினால் போச்சு என்று தன்னை தயார்படுத்திக்கொண்டாள்.

அவள் அவ்வளவு யோசனையில் இருந்ததால் ரமேஷ் பக்கத்தில் வந்து நின்றதோ? அழகுநிலா என்று திரும்பத்திரும்ப கூப்பிட்டதோ? காதில் ஏறவில்லை. அவள் அவ்வாறு இருப்பதை பார்த்து அச்சோ பிரச்சனை பெரிதாகி போய்விட்டது போல அதனால்தான் இப்படி அப்சட் ஆகி உட்கார்ந்திருக்கிறாள் போல என நினைத்து, நீ எதற்கும் கவலை படாத அழகுநிலா நானும் ஏதாவது உதவமுடிந்தால் உதவுகிறேன் என்னவென்று சொல்லு எனக் கேட்டான்

அவன் கேள்விகேட்கும் போதே தன்னிலை அடைந்தவள், அவன் கேட்டு முடித்ததும், மால் செல்கிறேன் என்று இவனிடம் சொலிவிட்டு போய்விட்டேன். அதனால்தான் இவனும் டெண்சனா இருக்கிறான் என்பதை உணர்ந்தவள், அச்சோ! அதெல்லாம் நான் சமாளித்துக் கொள்வேன் ரமேஷ், எனக்கு உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக உங்களிடம் கேட்கிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.