(Reading time: 26 - 51 minutes)

நான் ஒன்னும் ஸ்டூடன்ட் இல்லை பா! நான் சாப்ட்வேர் இன்ஜினியராகும். இங்க வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி வேலை பாகிறேன் ஆண்டி. என ஊர் குட்டலாம்பட்டி என்றும், அவள் தங்கியிருக்கிற ஹாஸ்டலிலன் பெயரையும் கூறினாள் அழகுநிலா.

அவள் ஊரின் பேரை சொன்னதுமே ஜானகிக்கு தான் சிறு வயதில் தந்தையின் ஊரான வாடிப்பட்டிக்கு அருகில் இருந்த குட்லாடம்பட்டிக்கு அவரின் நண்பரின் வீட்டு விசேசத்திற்கு குடும்பத்துடன் சென்ற போது அருவிக்குச் சென்று குளித்த நியாபகம் வந்தது.

அவள் கூறியதை கேட்ட ஜானகி, உங்க ஊரின் பேரிலேயே அங்க அருவி இருக்குள்ள! நான் சிறுபிள்ளயாக இருந்த போது அங்கு சென்று குளித்த நினைவு இருக்கு என்று கூறியதும் அழ்குநிலாவிற்கு உற்சாகம் வந்துவிட்டது.

உங்களுக்கு என் ஊரைத் தெரியுமா! அங்க யாரு வீட்டிற்கு வந்தீங்க சொல்லுங்க.... சொல்லுங்க..... என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள்.

அவளின் உற்சாகம் கண்டு சிரிப்புடன் ஜானகி கூறினாள், நான் சிறுவயதில் இருக்கும் போது அங்கு வந்தது அதற்கு பின் வீட்டிற்குகு வந்த சில மாதங்களிலேயே அப்பா தவறியதால் அம்மாவுடம் தொண்டாமுத்தூருக்கு மாமா வீட்டுடன் வந்துவிட்டேன் அதற்குப்பின் வாடிபட்டிக்கும் எனக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது அப்பாவின் நண்பரின் பேரும் எனக்கு நியாபகம் இல்லை என்று கூறியவள் அழ்குநிலாவை பார்த்து ஆனாலும் நீண்ட காலத்திற்குப் பின் என் அப்பாவின் சொந்த ஊரின் அருகில் இருக்கும் உன்னை பார்த்தது எனக்கு சந்தோசமாக இருக்கிறது, சரி உங்க ஊரில் உன் வீட்டில் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என கேட்டதும்

அழகுநிலா தனது அம்மா ராசாத்தி பற்றியும் அவரின் அடாவடித்தனமான அன்பான அடக்குமுறை பற்றியும் அதில் இருந்து காக்கும் தனது பாசமிகு அண்ணன் குமரேசனை பற்றியும் தனது செல்ல மருமகனான அண்ணன் மகன் மற்றும் மதினி பற்றியும் கூறியதோடு நில்லாமல் அவர்களில் காடு பற்றியும் அதில் இருக்கும் பம்புசெட்டு குளியலின் சுகத்தை பற்றியும் குட்லாடம்படி அருவியின் அழகு பற்றியும் மேலும் வாய் ஓயாமல் பேசுவதை பார்த்த ஜானகிக்கு அவளின் கொட்டும் அறிவிபோன்ற தன்மையால் ஈர்க்கப்பட்டாள் அவளுடன் பேசும்போது உற்சாக அலை அருகில் உள்ளவர்களையும் தொற்றிக்கொள்வதை உணர்ந்தாள், தன மகனின் இருக்கமான மனநிலையை இவளால் இயல்பாக மாற்றிவிடமுடியும் என எண்ணினாள்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அழகுநிலாவின் ஹாஸ்டலுக்குமுன்பு ஆதித் காரை நிறுத்தினான் விடுதியின் முன் கார் நின்றதும் உங்கள் மகனுக்கும் உங்களுக்கும் நன்றிthanks ஆண்டி நான் வருகிறேன் என்றாள் அழகுநிலா.

அழகுநிலா உன் போன் நம்பர் கொடு அடுத்தவாரம் சனிக்கிழமை என் மகனின் பிறந்த நாளுக்கு என் வீட்டிற்கு நீ கண்டிப்பா வரனும் முதல் நாள் உனககு போன் செய்து நியாபகப் படுத்தனும் என்றால் ஜானகி .

ஆதித் அதற்கு ஜானகியிடம் “அம்மா, ஏன்மா அவளுக்கு ஆயிரம் ஜோலி இருக்கும் என் பிறந்தநாளுக்கு எல்லாம் புதுசா என்ன ஆட்களை கூப்பிடும் பழக்கம்” என்றான்

நான் பல வருஷம் கழித்து என் அப்பா ஊருகார பெண்னை பார்கிறேன் மேலும் நீ எனக்கு அறிமுகப்படுத்தியது எல்லாம் உன் தொழில் சம்மந்தமானவர்கள் இவள் ஒருத்திதான் அதற்கு விதிவிலக்கு மேலும் எனக்கு இவளை நிரம்ப பிடித்து விட்டது என்றவள்.

அழகி, நீ கண்டிப்பா எனக்காக என் மகனின் பிறந்த நாளுக்கு என் வீட்டிற்கு வந்துதான் ஆகணும் இவனிடம் உன் மொபைல் நம்பர் கேட்டால் ஏதாவது சாக்கு சொல்லி கொடுக்காமல் தவிர்த்துவிடுவான் உன் நம்பர் சொல் என்று கேட்டாள். ஏனோ அழ்குநிலாவால் அவளிடம் அதற்கு மேலேயும் மறுக்க முடியவில்லை எனவே தனது மொபைல் நம்பரை அவளிடம் கூறியவள் விடை பெற்று இரங்கி விடுதி காம்பவ்ன்டுக்குள் நுழைந்தாள்

அவள் இரங்கி சென்றதை பார்த்துக்கொண்டே தனது காரை ஸ்டார்ட் பண்ண பார்த்த ஆதித் டேஸ் போர்டின் மேல் இருந்த அவளின் வளையலை பார்த்து அவளிடம் கொடுப்பதற்காக “ஒரு நிமிஷம் மா” என்றவன் அதை எடுத்துக்கொண்டு வேகமாக இரங்கி அவனும் காம்பவ்ன்டுக்குள் வந்து அவள் அந்த பில்டிங்கிற்குள் நுழையும் முன் வேகமாக இரண்டு எட்டில் அவளிடம் வந்தவன் “ஏய் இந்தா உன் வளையல்” என்றான்.

அவள் தன முன் ஏய் என்ற படி வந்த ஆதித்தை பாத்து அவன் கையில் உள்ள வளையலை பார்த்தவள், கொஞ்சம் இருங்க நான் என் ரூமிற்கு போய் இந்த ட்ரெஸ்சிற்கு உண்டான பணத்தை எடுத்துவந்து உங்களிடம் கொடுத்துவிட்டு என் வளையலை வாங்கிகொள்கிறேன் என்றாள்.

திரும்பவும்,ஆதித் அவளிடம் ஏய் என்னால எல்லாம் இங்க நின்னுட்டு இருக்க முடியாது முதல உன் வளையலை பிடி என்றவன் அவளின் கையை பற்றி அவளின் வளையலை அதில் திணிக்கப் பார்க்கும் போது அவளின் கையில் இருந்த அந்த நரேனின் மொபைலை பார்த்தவன் யோசனையுடன் நின்றான்

அவன் தன்னை ஏய் ஏய் என்று கூறியதிலேயே கோபப்பட்டிருந்த அழகுநிலா இப்பொழுது அவன் தன கையை பிடித்தபடி நின்றதை பார்த்ததும் முதல்ல கையை விடுங்க அதென்ன உதவி செய்தவரே என்று நினைத்தால் ரொம்ப ஓவராத்தான் போறீங்க இந்த ஏய் என்று கூப்பிடுறது இப்படி கை பிடித்து பேசுறது எல்லாம் என்னிடம் வச்சுக்காதீங்க என்று பட பட என பொரிந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.