(Reading time: 26 - 51 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 08 - தீபாஸ்

oten

மீட்டிங் முடிந்து வெளியில் வந்ததும் மதியம் சாப்பிட சுமதியுடன் இணைந்து கொண்ட அழகுநிலா,

அவளிடம், என்னடீ இப்படி திடீர்னு என்னை போய் அசிஸ்டண்ட் போஸ்டில் போட்டிருக்கிறார்கள். என்னைவிட டேலண்ட் ஆன ஸ்டாப் இருக்கும் போது நான் எப்படி? எனக்கு பயமாக இருக்கிறது, என்னால் முடியாது என சொல்லப்போறேன் என்றாள்.

அவள் சொல்வதை கேட்ட சுமதியின் மனதிற்குள்ளேயும் இதே கருத்து இருந்தாலும் அவள் அழ்குநிலாவை பார்த்து, லூசாடி நீ! உனக்கு கிடைத்திருக்கும் இந்த சான்சை பார்த்து ஒவ்வொருத்தியும் உன்னை பொறாமையுடன் பார்க்கும் இந்த நேரத்தில் இதை வேண்டாம் என்று சொல்கிறாயே! உன்னை தத்தினு தான் சொல்லனும் என்றாள்

நான் தத்தியாகவே இருந்துட்டுப் போறேன். நான் பார்க்க வந்தது இஞ்சினியர் வேலைக்கு. என்னை போய் செக்ரட்டரியாக வேலை பார்க்கச் சொன்னால் உடனே ஒத்துக்கொள்ளனுமாக்கும்.

நானே இப்போதான் தட்டுத் தடுமாறி ஒருவழியா இங்கிலீசில் சரளமாக பேச ஆரம்பிச்சிருகிறேன். நாம டீமா இருப்பதினால் எப்படியோ சமாளிச்சுடுறேன். இதுல ஏதோ வில்லங்கம் இருக்குது சுமதி. ப்ரோகிராமிங் பண்ணுவது என்றால் அது என்னால் முடியும். ஆனால் செக்ரட்டரியாக கம்யூனிகேசனில் எச்ஸ்பெர்ட்டா இருந்தால்தான் முடியும், எனக்கு இது செட்டாகாது என்றாள்.

அவள் கூறியதை கேட்ட சுமதி உன்னால் முடியும் அழகி. முதலில் இந்த பில்டிங் உள்ளே வரவே பயந்த. இப்போ எப்படி அழகா வேலையில் பிட் ஆகிவிட்ட. அதேபோல் இந்த வேலையையும் உன்னால் பிக்கப்செய்ய முடியும். மேலும், செக்ரட்டரியாக செலக்ட் பன்ற ஆட்கள் அழகாக இருக்கனும் என்றுதான் நினைப்பார்கள். உன்னிடம் தான் அழகு கொட்டிக்கிடகுதே நானெல்லாம் என்னை அழகாக காட்டுவதுபோல் ட்ரெஸ் உடுத்துவேன். ஆனா நீ எந்த ட்ரெஸ் போட்டாலும் உன் அழகு அந்த உடையும் அழகாககாட்டிவிடும். . நம்ம ஆபீஸ் பியுட்டி குயீன் நீ. சோ! உன்னை அவர்கள் தேர்ந்தெடுத்ததில் தப்பே இல்லை என்றாள்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொது அவர்களின் புறம் வந்த அவர்களின் டீம் லீடர் ரமணி, வாழ்த்துக்கள் அழகுநிலா... உங்களுக்கு முக்கியமான பொறுப்பு கொடுத்திருகிறார்கள் சேலரியும் டபுள்ஆகப் போகுது! எங்களுக்கு ட்ரீட் எப்ப கொடுக்கப் போகிறீங்க? என்று கேட்டார்

பார்ப்போம்! பார்ப்போம்! முதலில் என்னால் அந்த வேலையில் செட் ஆக முடியுதா? என்று பாப்போம். பின்பு ட்ரீட் கொடுப்பதை பற்றி பேசுவோம் என்று சொன்னாள்.

அப்பொழுது சுமதி, ரமணி எனக்கு இன்னைக்கு மூன்றுமணிக்கு மேலேயும் நாளைக்கும் லீவ் வேண்டும். எனக்கு நாளை மேரேஜ் பிக்ஸ் பண்ண போறாங்க என்றாள். .

அவள் கூறியதை கேட்டதும் சூப்பர். அதுதான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிறீங்களா? நிறைய வேலை இருக்கே சுமதி, நாளை மட்டும் தான் லீவ் தருவேன், சுமதி சாரிப்பா.... இந்த ப்ரொஜெக்டை சீக்கிரம் முடிகச்சொல்லி ஆர்டர் வந்துருக்கு, சரி நீங்களாவது உங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆனதுக்கு ட்ரீட் கொடுப்பீங்களா? என கேட்டார்

அதற்கு அழகுநிலா ரமணியிடம், கண்டிப்பா ட்ரீட் வாங்காம விட்டுடுவோமா! என்று கூறிவிட்டு எனக்கும் லீவ் நாளைக்கு வேணும் என்றாள்.

அவள் கூறியதை கேட்ட ரமணி, அதையேன் என்னிடம் கேட்கிறீங்க, அதுதான் இப்போ நீங்க என் டீமிலேயே இல்லையே.... உங்க வேலையும் சேர்த்து என்தலையில் தானே விழுந்திருக்கு. நீங்க இனி லீவ் வேண்டுமானால் நம்ம பாஸிடம் தான் கேட்கணும் என்றார்.

சந்த தன்னுடைய அறையில் மாதேஷுடன் விவாதித்துக்கொண்டு இருந்தான், நீ நினைக்கிறமாதிரி அழகுநிலா கிடையாது. அவள் இந்த ஆபீசில் சேர்ந்த இந்த ஆறுமாதத்தில் அவளை நான் கவனித்ததினால்த்தான் சொல்றேன்.

உன்னிடம் சொல்வதற்கென்ன! உனக்கே தெரியும். நான் பெண்கள் விசயத்தில் ஒதுங்கித்தான் இருப்பேன். ஆனால் எனக்கே அவள் அழகை பார்த்ததில் இருந்து கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். கொஞ்சம் பழகிப்பார்கலாம் என முயற்சியும் செய்தேன். ம்..கூம் முடியல. படு உசார் பார்ட்டி. எல்லாரோடையும் ஜோவியலா பேசுரமாதிரி தெரிஞ்சாலும் ஓர் லிமிட்டுக்கு மேல அவ யாரையும் கிட்டக் கூட சேர்கறது இல்லை என்றான்.

அவன் சொன்னதை கேட்டு மாதேஷ், உன்னால் முடியலைன்னு சொல்லு. அதற்கெல்லாம் ஓர் முகராசிவேனும். முதலில் கூட அவட்ட கொஞ்சம் நெருங்கிப் பழகி அவளுக்கு நம்பிக்கையானவனா காட்டி, அந்த ‘போனை’ ஹெல்ப் பண்றேன் என்று கேட்டு வாங்க மட்டும் செய்யலாம் என நினைத்தேன். ஆனா இப்போ இந்த மீட்டிங்கில் அவளை பக்கத்தில் பார்த்தபிறகுதான் தெரிஞ்சது, நரேன் ஏன் தொட்டுப்பார்கனும் என்று ரிஸ்க் எடுத்தான் என்று. ஷி இஸ் நேச்சுரல் பியூட்டி மடக்கிறனும் என்று முடிவே... பண்ணிட்டேன் என்றான். .

அவன் சொன்னதை கேட்ட வசந்த், டேய்.. அப்படியெல்லாம் செஞ்சுராத. நம்ம கிட்ட வேலை பார்க்கிற பொண்ணுகிட்ட நாமே வாலாடினா நம்ம பிஸ்னஸ் பாதிச்சிடப் போகுத்து, தானே மேல வந்து விழுந்தா அது பிரச்சனை இல்லை. ஆனா நாம ஏமாத்தி கைவச்சா பிரச்சனையாகி, நேம் கெட்டுடும் என்றான்.

அதற்கு பதில் சொல்ல வாய்திறந்த நேரத்தில் அழகுநிலா அவர்களின் ரூமின் வெளியில் இருந்து கதவை தட்டி மே ஐ கம் இன் என்று கேட்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு, எஸ் கம் இன் என்றனர். .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.