(Reading time: 26 - 51 minutes)

உள்ளே வந்த அழ்குநிலாவை மாதேஷ் தான் உட்கார்ந்திருந்த டேபிளின் முன் உள்ள சேரை காண்பித்து உட்காருங்க மிஸ் அழகு...நிலா... என்று அவளது பெயரை உச்சரிக்கும் போது அழகு என்ற வார்த்தையில் அழுத்தத்தையும் நிலா என்ற வார்த்தையை ரசனையுடனும் சொன்னான்.

ஏனோ அபீசியலாகத் தான் முதல்முதலில் பேசவந்தபோது அவள் எதிர்பார்த்த பாஸ் என்ற தோரனையை விட்டு, மாறுபட்டு ஒலித்த அவனின் குரலே அவளுக்கு ஓர் எச்சரிக்கை ஓசையை கொடுத்தது.

எனவே அவளது மலர்ந்த முகம் சற்று கடுமையை பூசிக்கொண்டது அது என்னை விட்டு தள்ளியே நில் என்ற எச்சரிக்கையை மாதேசுக்கு வழங்கியது.

அவளின் முகக்குறிப்பை கண்ட மாதேசுக்கு வசந்த் சொன்ன உசார் பார்டி என்ற வார்த்தை அசரீரியாய் ஞாபகம் வந்தது. எனவே உன்னை உன் வழியிலேயே சென்று மடக்கிகாட்டுறேன் என்று சவாலாக நினைத்து, தன்னை பாஸ் என்ற தோரணைக்கு உடனே மாற்றிக்கொண்டான் மாதேஷ். .

இன்னும் உட்காராமல் நின்று கொண்டே இருந்த அழ்குநிலாவை, நான் உங்களை உட்காரச்சென்னேன் என்று அழுத்தமாக கூறியதும் வேகமாக இருக்கையில் உட்கார்ந்தாள் அழகுநிலா.

நானே உங்களை கூப்பிடனும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே நீங்க பார்க்க வந்திட்டீங்க. “குட்” ஆக்டிவாக இருந்தால்தான் எனக்கு பிடிக்கும். .என்னிடம் வேலைசெய்யும் போதும் இதேபோல் இருந்தால் ஓகே, இப்போ நம்ம வேலையை பற்றி பேசலாமா அழகுநிலா என்றான் மாதேஷ்.

பாஸ் வேலையை பற்றி பேசுவதுக்கு முன் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்றால் அழகுநிலா

அவள் கூறவும் யோசனையுடன் ம்...சொல்லுங்க என்றான்.

இல்ல... என்று தயக்கத்துடன் ஆரம்பித்த அழகுநிலா, பட்டென்று என்னால் நீங்க எனக்கு கொடுத்திருக்கும் இந்த செக்ரட்ரி வேலையை ஏத்துக்க முடியாது பாஸ் என சொல்லிவிட்டாள்.

அவள் கூறியதைக் கேட்டு வாட்? என்று கோபத்துடன் கத்திவிட்டான் மாதேஷ். அவனின் கத்தலில் பயந்தபடி உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்துவிட்டாள் அழகுநிலா.

அவள் அவ்வாறு மறுப்புக் கூறுவாள் என்று எதிர்பார்க்காத வசந்த், “என்ன இப்படி சொல்றீங்க அழகுநிலா” நீங்க இப்படி சொல்வீங்க என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மேலும் நீங்க நான் சொல்கிற இந்த கம்பெனி வேலையே செய்வதற்கான ஒருவருட ஒப்பந்த்தின் அடிப்படியில் உங்களின் சம்மதத்தோடு வேலையில் சேர்த்திருக்கிறோம். அதென்ன இப்போ கொடுத்த வேலையே செய்யமுடியாதென்று மறுத்து பேசறது. இட்ஸ் நாட் குட் அழகுநிலா, என்றான் .

அவன் அவ்வாறு கூறியதும், பாஸ்... என்னால் ப்ரோகிராமிங் மட்டும்தான் பண்ணமுடியும். செக்ரட்டரி என்றால் அதற்கு நல்ல கம்யூனிகேசன் ஸ்கில் இருக்கனும். என்னால் மேனேஜ் பன்னமுடியுமோனு பயமாக இருக்கிறது என்று குறைந்த சத்தத்தில் பயந்தபடி சொன்னாள்.

இப்போ எங்களிடம் நீங்க மனதில் உள்ளதை பேசலையா? நீங்க உங்க டீம்மோட இருக்கும் போது நான் இங்கே இருந்து பார்த்துக்கிட்டு தானே இருக்கிறேன். இப்படி முடியாது என்று சொல்வது இதுவே லாஸ்ட் ஆக இருக்கட்டும். மேலும் இந்த போஸ்டிங்குக்கு புதுசா செக்ரட்டரியை தேர்வு செய்து அவங்களுக்கு நம் ஆக்டிவிட்டி பற்றி தெளிவுபடுத்த எல்லாம் இப்போ நேரம் இல்லை. சோ.... நீங்கதான் இப்போதைக்கு .என்று கடுமயான முகத்துடன் சொல்லிமுடித்தான் வசந்தன்.

வசந்த் பேசும்போதே தன கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்த மாதேஷ் அழகுநிலாவை பார்த்து, நம்ம கம்பெனியை நியூ பில்டிங்கில் கட்டுவதற்கு மூன்று காண்ட்ராக்டர்களிடம் கொட்டேசன் கேட்டிருந்தோம், இன்னும் ஒன் ஹவர் கழித்து உங்க அபீஸ் மெயில் ஐடிக்கு அதை சென்ட் செய்திருப்பார்கள். அந்த டீடைல்சை உடனே இன்பார்ம் பண்ணுங்க. யாரிடம் நம்ம கன்ஸ்ட்ரக்சன் வொர்க்கை கொடுக்கலாம் என்று நாளைக்கு முடிவு பண்ணும் என்று கூறிய மாதேஷ், அழ்குநிலாவிடம் நீங்க வெளியில் உட்கார்ந்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் உங்களை கூப்பிட்டுக்கொண்டே இருக்க முடியாது. சோ! உங்களுக்கு இந்த ரூமிலேயே டேபிள் அரேஞ் பண்ணிடுவாங்க நாளைக்கு! என்று அதிகாரமாய் சொல்லியவன், ம்.. நீங்க இப்போ உங்க சீட்டுக்கு போகலாம் என்று சொன்னான்.

அழகுநிலாவால் அதற்குமேல் மறுத்து எதுவும் கூறமுடியவில்லை. இப்பொழுது நாளைக்கு லீவ் கேட்டால் அது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் போனதால் கேட்காமலே இருந்துவிடுவது பெட்டர் என நினைத்து ஓகே பாஸ் என்றபடி எழுந்து தன டேபிளுக்கு வந்தாள் அழகுநிலா.

சுமதி அழ்குநிலாவிடம் வந்து, ஏய் உன் போனை ஆப் பண்ணி வச்சுருக்கேன்னு எனக்கு விசு போன் பண்ணினான். இந்தா பேசு என்றாள். அதனை வாங்கி காதில் வைத்தவள் ரொம்ப சந்தோசம் விசு ம்...கூம் எனக்கு நாளைக்கு லீவ் கிடைக்கல நான் ஆபீஸ் முடிந்ததும் சாயங்காலம் வருகிறேன் சரி பை என்றவள் போனை சுமதியிடம் கொடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.