(Reading time: 22 - 44 minutes)

22. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்

பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்

என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்

ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்

என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

 

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்

என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்

நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்

என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

 

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி

மின்னலில் சங்கதி புரிகின்றதே

தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்

புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

 

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்

பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்

காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

ரண்டு நாட்கள் மின்னலாய் கடந்திருக்க கார்த்திக்கும் சிவாவும் ஓரளவு அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்தனர்.இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நீதிமன்றத்திலிருந்து அழைப்பு வந்துவிடும் அதற்கு அவன் எப்படி தயாராகப் போகிறான் என்ன செய்வான்..தாங்கள் இதில் தலையிட்டு இருப்பதை எப்படி மறைப்பது என அனைத்து விதங்களிலும் பாதுகாப்பாய் திட்டமிட்டு கொண்டனர்..இரண்டு நாட்கள் அவ்வளவு ப்ரச்சனைகள் வேலைகள் இருந்தும் சஹானாவை கண்டு கொள்ளாமல் ஒரு நிமிடம்கூட கார்த்திக் இருக்கவில்லை..அவ்வப்போது அவளை சீண்டுவதும் பேச்சு வளர்ப்பதுமாய் தன்னருகிலேயே வைத்து கொண்டான்..சஹானாவிற்கு தன்னவனின் இந்த காதலே அவனுக்கு தன்னால் ஆன அனைத்தையும் பண்ண வேண்டும் என்ற உறுதியை விதைத்திருந்தது..அதுவும் அந்த அருண் விஷயத்தில் செய்ய நேர்ந்தால் அவள் மனம் நிறைந்துவிடும் என்று தோன்றியது..அதற்கான தக்க சமயத்தையும் பார்த்து காத்திருந்தாள்..அவன் இதை விரும்பமாட்டான் எனினும் நிச்சயம் இதில் அவள் பங்கு இருக்க வேண்டுமென உறுதி கொண்டிருந்தாள்..அதற்காகவே கார்த்திக்கிடம் அவர்களின் அத்தனை திட்டத்தையும் கேட்டு தெரிந்தும் கொண்டாள்..

இரண்டு நாட்களுக்குப்பின் ஓரளவு ஓய்வாய் இருப்பதாய் தோன்ற சஹானாவோடு வெளியே சென்று வர முடிவெடுத்து கிளம்பினான்..வானிலை இதமாய் இருக்க தோட்டத்துக்கு சென்று வரலாம் என முடிவெடுத்து சென்றனர்..கடந்த வாரம் தான் வேலைகள் முடிந்திருக்க இன்று அவ்வளவாய் ஆட்கள் இருக்கவில்லை..பம்பு செட்அருகில் அமரலாம் என முடிவு செய்து அமர கார்த்திக் ஆர்வம் தாங்காமல் நீருக்குள் இறங்கிவிட்டான்..

ஹே மாமா வேற ட்ரெஸ் கூட எடுத்துட்டு வரல என்ன பண்ற நீ??

பரவால்ல சஹி இந்த இடத்தை பாத்துட்டு அமைதியாலா வீட்டுக்கு போக முடியாது..என்ன ப்லேஸ் இல்ல..ஒவ்வொண்ணும் கடவுள் பாத்து செதுக்கினாமாதிரி இருக்கு..

ம்ம் என்றவாறு அவனை புன்னகையோடு பார்த்திருந்தாள்..ஒரு வழியாய் அவனை வெளியே வர வைத்து தலைதுடைத்து அமர வைத்தாள்..மாமா நீ என்ன விட மோசமா இருப்ப போல இருக்கே.இப்படி ஆட்டம் போடுற??

சஹி நிஜத்துல என்னமாதிரி சைலண்டா இருக்குறவங்க தான் சான்ஸ் கிடைச்சா செமயா என்ஜாய் பண்ணுவாங்க தெரியுமா..அப்பறம் நீயெல்லாம் என் பக்கத்துலகூட நிக்க முடியாது..

ஆமா ஆமா அதான் இவ்ளோ நேரம் நீ படுத்துறதுலயே தெரியுதே..சரி வா மாமா அங்கபோய் இளநீர் சாப்டலாம் யாராவாது இருந்தா பறிச்சு போட சொல்லலாம்..

காவல்காரரிடம் கூறி இளநீர் பறித்து பருகி தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்புகையில் தூரத்தில் தெரிந்த வீட்டை சுட்டிகாட்டியவள் அதான் மாமா வள்ளியோட வீடு அதோ அங்க ஒரு பெரிய மரம் தெரியுதே அதுக்கு பின்னாடிதான் அந்த அருணோட தோட்டம்..என்றவாறே கார் அருகில் வந்தவளுக்கு முகம் மாற தற்செயலாய் அதை கவனித்தவன் அவள் பார்வை சென்ற திசையை பார்க்க அங்கே அருண் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்..

வாழ்த்துக்கள் புது மாப்பிள்ளை சார்..எப்படியிருக்கீங்க???

நல்லாயிருக்கேன் நீங்க எப்டியிருக்கீங்க..

எனக்கென்ன ஆடிட்டர் சார் எப்பவும் போல அமோகமா இருக்கேன்..உங்க மிஸஸ் என்ன இவ்ளோ சைலண்டா இருக்காங்க..ரொம்ப பேசமாட்டாங்களோ??என ஓர் மார்க்கமாய் அவளை பார்க்க,

தேவையில்லாம பேசுறதில்ல என சட்டென கூறியவள் கார்த்திக் அவள் கையை பற்றியதை உணர்ந்து போலியாய் ஒரு சிரிப்பை உதட்டில் ஒட்டிக் கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.