(Reading time: 22 - 44 minutes)

சரி அருண் நாங்க கிளம்புறோம் ரொம்ப லேட் ஆய்டுச்சு..

.கே கார்த்திக் ரெண்டு பேரும் ஒரு நாள் வீட்டுக்கு வாங்க புது ஜோடிக்கு விருந்து போட்டு அசத்திடுவோம்..

அதுவர நீங்க இருந்தா வரோம்..என்றவள் அருணிண் பார்வை கூர்மையடைவதை கண்டு இல்ல நீங்க வெளியூர்க்கு அடிக்கடி போவீங்கநு சிவா சொல்லிருக்கான் அத சொன்னேன் சரி வரோம் என நமட்டுச் சிரிப்பு சிரித்து காருக்குள் ஏற அருணிண் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது..

என்ன சஹிம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு அவன சிக்க வச்சுருக்கோம் ஒரு செகண்ட்ல அவனுக்கு க்ளு குடுத்துருப்ப..

சாரி மாமா என்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ணவே முடில..ஆளும் அவனும்.விட்டா இப்போவே கொன்னுருப்பேன்..

சஹி..ரிலக்ஸ்டா..

வீட்டிற்கு வந்தவன் யோசனையிலேயே இருக்க வேலையாள் பயந்தவாறே கையில் போனோடு சென்று அவன் அருகில் நின்றான்..

ஐயா..

என்ன முத்து என்ன விஷயம்..

உங்க சிநேகிதர் மெட்ராஸ்ல இருக்காகளே அவுக போன் பாண்ணிருக்காக..

என் மொபைல்க்கு பண்ணாம எதுக்கு வீட்டுக்கு பண்ணீருக்கான் என்றவாறே அருண் போனை கையில் வாங்கிக் கொள்ள வேலையாள் உள்ளே ஓடிவிட்டான்..

சொல்லு ரவி ஏன் வீட்டுக்கு கால் பண்ணிருக்க??

உன் மொபைல்க்கு பண்ணிட்டேயிருந்தேன் நீ எடுக்கல அதான் இங்க பண்றேன்..

வேகமாய் சட்டையை தடவியவன்,ஓ கார்லயே விட்டுட்டு வந்துட்டேன்டா சரி சொல்லு என்ன விஷயம்..

அந்த வள்ளி விஷயமா கோர்ட்ல கேஸ் பைல் பண்ணிருக்காங்க கன்பார்ம்ட் நியூஸ்..

வக்கீல் யாரு சிவா வா????

அது யாரு அவன்லா இல்லடா??பப்ளிக் ப்ராசிக்யூட்டர்  அவரு பேரு கூட ஆங்ங் கணபதி..ரொம்ப நேர்மையான ஆளு..அவரு இது வரை ஆஜரானதுல பாதிக்கு மேல கேஸ் பொதுநல வழக்குதான்..எதுக்கும் அசராத ஆளூ..என்ன பண்ண போற???

ம்ம் இப்போதான் என்கூட கண்ணாமூச்சிஆட்ற ஆள்மேல சைல்ட்டா டவுட் வந்துருக்கு கன்பார்ம் ஆச்சு அதுக்கப்பறம் இந்த கேஸ் கோர்ட்க்கே வராது..சரி அப்பப்போ என்ன நடக்குதுநு அப்டேட் குடுத்துட்டே யிரு..

சஹானாவின் பேச்சும் அந்த ஏளன சிரிப்பும் அவன் கண்முன் வந்துகொண்டேயிருந்தது..முதல் தடவையிலிருந்தே அவளுக்கு அருணை பிடீக்கவில்லை என்பதை அப்பட்டமாய் முகத்தில் காட்டிக் கொண்டுதான் இருந்தாள்..ஆனால் அதற்கான காரணம் என்னவாய் இருக்கும் என எத்தனை முறை யோசித்தாலும் அவனுக்கு தெரியவில்லை..இருந்தா வரோம்நு சொன்னாளே அதுக்கு என்ன அர்த்தம் எதனால அப்படி சொன்னா??ஒரு வேளை அந்த வள்ளியை இவ தான் எங்கேயாவது வச்சுருப்பாளோ??

கல்யாணம் முடிஞ்ச கையோட எல்லோரும் பாரின் ட்ரிப் இல்ல வேற ஸ்டேட் எங்கேயாவைது போவாங்க இதுங்க எதுக்காக இந்த கிராமத்துக்கு வந்துருக்குங்க??சரியில்லையே..

டேய் முத்து..

ஐயா.

வெளில நம்ம பசங்க எவனிருக்கானோ வர சொல்லு..

கூப்பிட்ட வேகத்தில் ஒரு தடியன் உள்ளே ஓடிவந்தான்..ஐயா சொல்லுங்க..

டேய் அந்த வள்ளி இந்த ஊரைவிட்டு போறதுக்கு முன்னாடி யாரைப் போய் பாத்தா என்னனு விசாரிச்சுட்டு வா யாருக்கும் சந்தேகம் வராதபடி விசாரிச்சுட்டு வா புரியுதா..

சரி ஐயா இதோ இப்போவே போறேன்..

ங்கு கார்த்திக் சிந்தனையில் இருந்தான் ஏனோ அவனின் உள்மனது குழப்பத்திலேயே இருந்தது..அருண் அவர்களை கண்டுபிடித்துவிட்டானோ என்று யோசித்து கொண்டேயிருந்தான்..

மாமா என்னாச்சு ஏன் என்னவோ போலயிருக்க??

ஒண்ணும் இல்ல சஹிம்மா சும்மா யோசிச்சுட்டு இருந்தேன்..

அந்த அருணைபத்தியா???

கார்த்திக் ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான்..

நா பண்ணது தப்புதான் மாமா..ஆனா பரவால்ல எப்படியிருந்தாலும் என்னைக்கோ ஒருநாள் நடக்கப் போற விஷயம்தான..சீக்கிரமா நடக்குதுநு நினைச்சுக்கோ..வந்த வேலையை சீக்கிரமா முடிச்சுட்டு ஊருக்கு போலாம் மாமா எனக்கு எல்லாரையும் தேடுது..வீணா மனச போட்டு குழப்பிக்காத..என்றவள் எழுந்து சென்றுவிட

கார்த்திக் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..தேவிகா அருணாச்சலத்தின் முடிவை நெருங்கிவிட்டாள் என்று தோன்றியது..எனவே வரும் நாட்களில் ஏது வேண்டுமானாலும் நடக்கலாம்..சஹானாவின் மேல் அவன் கவனம் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.