(Reading time: 22 - 44 minutes)

ஆனால் அருணின் மொத்த குறியும் சஹானாவின் மேல்தான் இருந்தது..அதற்கேற்றாற் போல வள்ளியைப் பற்றி விசாரிக்கச் சென்றவனும் இறுதியாய் பேசியது மணியிடம் என்று கூற மொத்த சந்தேகமும் அவளை நோக்கியே செல்ல வைத்தது..அடுத்ததாய் சென்னையில் சிவாவை கவனிக்க ஆள் ஏற்பாடு செய்தான்..கணபதியோடு அவன் பேசுவது உறுதியானது..ஆக அனைத்தையும் ஆரம்பித்தவள் சஹானா..ஆனால் இவை அனைத்திற்கும் காரணம் தெரியவில்லை..பெரிய பெரிய க்ரிமினல் வேலைகளையெல்லாம் ஒண்ணுமில்லாமல் ஆக்கிய தன்னை ஒரு பெண் விஷயத்தில் சிக்க வைத்து விட்டாளே..அப்படி என்ன வன்மம் என்று தெரிந்தே ஆக வேண்டும் என முடிவிற்கு வந்தவனாய் சஹானாவிற்கான வலையை விரிக்க சிந்திக்கத் தொடங்கினான்..

றுநாள் அவரவர் வேலைகள் வழக்கம்போல் நடந்துகொண்டிருக்க பதினோரு மணியளவில் மணிக்கு ஒரு அழைப்பு வந்தது..பேசி முடித்தவர் கண்ணீரும் கவலையுமாய் கார்த்திக்கிடம் வந்தார்..

தம்பி கௌரி காலேஜ்ல மயக்கம் போட்டு விழுந்துட்டாளாம் இப்போதான் போன் வந்தது..என்னாச்சுன்னே தெரிலப்பா இப்படி நடந்ததே இல்ல..நா போய்ட்டு வந்துரேன் உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்..

அண்ணா கவலபடாதீங்க ஒண்ணுமிருக்காது..நீங்க ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுரீங்க..சரி வாங்க நானே கூட்டிட்டு போறேன்..கார்ல 20 மினிட்ஸ்ல போய்டலாம் சஹானா கார் சாவி எடுத்துட்டு வா..நீ பத்திரமா உள்ளே இரு சஹி நாங்க என்னனு பாத்துட்டு வந்துரோம்..

சஹானா மென்சிரிப்போடு அவர்களிடம் ஒண்ணும் இருக்காது கவலபடாம போங்க என்று கூற இருந்த பதட்டத்தையும் மீறி இருவரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

தைரியமா போய்ட்டு வா மாமா..என அவனை அனுப்பிவிட்டு இதழோர சிரிப்பு மாறாமல் ஹாலில் அமர்ந்தாள்..

அங்கு கல்லூரிக்குச் சென்று ஆபீஸ் ரூமில் விசாரிக்க அடுத்த பத்தாவது நிமிடம் கௌரி வந்து நின்றாள்..அப்பா அண்ணா என்னாச்சு என்ன இப்போ வந்துருக்கீங்க..

கார்த்திக்கிற்கு ஒரு நிமிடம் இதயம் நின்றுவிட்டது..மணி அண்ணாஎன அவர் கையைப் பற்ற

தம்பி தேவிகா!!!!என அவரும் உறைந்து நிற்க இருவருமாய் காரை நோக்கி ஓடினர்..ச்சச்ச எப்படி அண்ணா மறந்தேன்..நா அங்க இருந்துருக்கனும்ண்ணா..அவ பேச்சுல வித்யாசம் தெரியுதேநு நினைச்சேன்..கடவுளே என்ன நடக்கப் போகுதுநு தெரிலயே..

தம்பி பயப்படாதீங்க..என ஆறுதல் கூற நினைத்தாலும் அவரே பயந்துபோய்தான் இருந்தார்..இருந்த பயத்தில் எப்படி வந்தான் என்பதை கடவுளே அறிவார்..பயந்ததற்கு ஏற்றாற்போல வீட்டின் கதவு திறந்திருக்க உள்ளே சஹானாவை காணவில்லை..வீடு முழுவதும் தேடி கார்த்திக் ஓய்ந்துபோய் ஹாலில் அமர்ந்துவிட்டான்..

தம்பி தம்பி தைரியமாயிருங்க ஒண்ணும் நடக்காது நா பக்கத்துல யார்ட்டயாவது விசாரிச்சுட்டு வரேன்..என மணி வாசலை நோக்கி ஓடினார்

கார்த்திக்கின் எண்ணமோ வேறாய் இருந்தது..நிச்சயமாய் சஹானாவை கட்டாயப்படுத்தி இங்கிருந்து அழைத்துச் சென்றிருக்க முடியாது..அக்கம்பக்கத்தில் ஆள்நடமாட்டம் அதிகம்..ஏமாற்றி அழைத்து செல்வதற்கும் வாய்ப்புகள் குறைவு..சோ சஹானா அவளாவே தான் போய்ருக்கா அதுவும் தேவிகாவின் உதவியோடு..அந்த அருண் அவளை எங்கு வர வைத்திருப்பான் என்பது மட்டுமே தற்போது தெரிய வேண்டிய ஒன்று..

யோசிக்கும்போதே மணி ஓடிவந்தார்..தம்பி அந்த அருணோட ஆட்கள் தான் வந்துருக்காக ஆனா சஹானாம்மா நீங்களும் அங்கதான் வருவீங்க நா முன்னாடி போறேன்னு சொல்லிருக்காங்க..

நினைச்சேன் அண்ணா..எல்லாமே சஹானாவும் தேவிகாவும் சேர்ந்து எடுக்கு றமுடிவுதான் நாம ஒண்ணும் பண்ணிருக்க முடியாதுண்ணாநாம வெளியே போறப்போ அவ சிரிச்சதோட அர்த்தம் இதுதான்..இப்போ அவளை எங்க கூட்டிட்டு போய்ருப்பாங்கநுதான் யோசிச்சுட்டு இருக்கேன்..எனும்போதே அழைப்பு வர போனை பார்த்தவன் அவசரமாய் அட்டெண்ட் செய்ய மறுபுறம் அருண் பலமாய் சிரித்தான்..

என்ன ஆடிட்டரே பொண்டாட்டிய தேடாம இப்டி வீட்ல உக்காந்துட்டு இருக்க??ஏன்டா அவதான் ஏதோ போன ஜென்மம் முந்தின ஜென்மம்நு கதை விட்டுட்டு இருக்கானா நீயும் அத கேட்டுட்டு ஏன்டா என்கிட்ட மோதுற???எவ்ளோ பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி காத்துட்டு இருக்கேன்..கேவலம் ஒரு பொண்ணு கேஸ்ல என்ன உள்ள தூக்கி போட பாக்குறியா???சரியா உனக்கு 15 நிமிஷம் டைம் அதுக்குள்ள என் தோட்டத்து வீட்டுக்கு நீ மட்டும் வர்ற..எதாவது எடாகூடம் பண்ண நினைச்ச அப்பறம் உன் பொண்டாட்டி உயிருக்கு நா உத்திரவாதமில்ல..என அழைப்பை துண்டித்துவிட்டான்..

தம்பி வாங்க போலாம்..

வேண்டாம்ண்ணா நா மட்டும் போறேன்..ஒரு மணிநேரத்துக்குள்ள நா உங்கள கான்டாக்ட் பண்ணலனா நீங்க போலீஸ்ட்ட இன்பார்ம் பண்ணிடுங்க..என வேகமாய் காரைக் கிளபப்பிக் கொண்டு சென்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.