(Reading time: 22 - 44 minutes)

தங்கள் தோட்டத்தின் வெளியிலேயே காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டமும் நடையுமாய் சென்றான்..அவன் சென்ற வேகத்தில் பம்ப் செட் அருகிலிருந்த ஏதோ நீருக்குள் விழ இருந்த பதட்டத்தில் எதையும் கவனிக்காமல் முன்னேறிச் சென்றான்..எத்தனை ஆட்கள் ஆயுதம் இருக்கும் எப்படி சமாளிப்பது என மனதில் எண்ணியவாறே அந்த வீட்டின் கதவை தட்ட ஒருவன் கதவை திறந்தான்..உள்ளே அந்த அருணும் இன்னொருவனும் மட்டுமே இருந்தனர்..படபடப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சஹானாவைப் பார்க்க அவள் அப்போதும் இதழோரச் சிரிப்போடு கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தாள்..

அருண் பிரச்சனை உனக்கும் எனக்கும்தான அவளை விட்டுரு..

அது எப்படி முடியும் ஆரம்பமே இவதான..ஆமா தெரியாமதான் கேக்குறேன் அவதான் லூசுதனமா உளறானா நீயும் அவ கைபொம்மையாட்டும் ஆடிட்டு இருக்க..அவஅவனுக்கு இந்த ஜென்மத்துல நடக்குறதே மறந்துருது இதுல இவ போன ஜென்மம் பத்தி பேசிட்டு இருக்கா..சரி விடு அது உன் ப்ரச்சனை உன் பொண்டாட்டி ப்ரச்சினை நடுவுல என்ன ஏன்டா இழுக்குறீங்க.??நா நினைச்சா கார்த்திக் சஹானாங்கிற ரெண்டு பேரை இருந்த இடம் தெரியாம அழிக்க முடியும் பாக்குறியா..ஏதோ கொஞ்சநாள் பழகித் தொலைச்சுட்டேனேநு பாக்குறேன்..ஒழுங்கா அந்த கழுத அவ பேரு என்ன ஆங்ங் வள்ளி அவளை கூப்ட்டு கேஸை வாபஸ் வாங்க சொல்ற அது நடந்தா மட்டும்தான் உன் பொண்டாட்டி இந்த இடத்தைவிட்டு வெளியே வருவா அப்பறம் உன் இஷ்டம் என தோளை குலுக்கியவாறு சென்று அங்கிருந்த நாற்காலியால் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான்..

கார்த்திக் ஏதோ கூற வாயெடுக்க அதற்குள் சஹானா அவனிடம் நீ ஏன் மாமா டென்ஷன் ஆகுற என்ன நடக்க போகுதுனு தெரிஞ்சும் நீ ஏன் கவலபட்ற..அனைய போற விளக்கு பிரகாசமாதான் எரியும் நீ ரிலாக்ஸ்டா இரு..

கார்த்திக்கிற்கோ எப்படியாவது அவனை உயிரோடு போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உழன்று கொண்டேயிருந்தது..எந்த சூழ்நிலையிலும் பொறுமையிழந்து விட கூடாது என தனக்குத்தானே கூறிக் கொண்டேயிருந்தான்..சிவாவை இங்கு வரவிடாமல் தடுத்ததற்கு முக்கிய காரணமே அதுதான்..இப்போது சஹானா பேசுவதை கேட்கும்போது இன்னமும் பதட்டமாய் இருந்தது..

இங்க பாரு அருண் நா உன் நல்லதுக்காக தான் சொல்றேன் புரிஞ்சுக்கோ ஒழுங்கா நீயே போய் போலீஸ்ல சரண்டர் ஆய்டு அதான் உனக்கு நல்லது..உன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுநு தான் நா இவ்ளோ தூரம் சொல்றேன்..அதவிட உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் என் லைப்ப கெடுத்துக்க நா தயாராயில்ல..

கார்த்திக் முடிப்பதற்குள் அருண் பலமாய் சிரிக்க ஆரம்பித்தான்..நீ ..என்ன..கொல்ல போறியா??நல்ல ஜோக் பட் அத என்ஜாய் பண்ற மூட்ல நாயில்ல ஒழுங்கா நா சொன்னத செய்.இல்ல இவ நிலைமை என்னாகும்நு எனக்கு தெரியாது என்றவாறு அவள் முடியை கொத்தாய் கையில் பிடிக்க கார்த்திக் அடுத்த நொடி அருணின் சட்டையை பிடித்திருந்தான்..

என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே அருண் பல அடிகளை வாங்கியிருக்க கார்த்திக் தடுக்க வந்த அவன் ஆட்களை பிய்த்தெடுத்துக் கொண்டிருந்தான்..அதற்குள் கண்கள் தெளிவாக எழுந்து நின்றவன் கட்டியிருந்த சஹானாவின் கையைப் பிடித்து இழுத்தவாறு வாசலை நோக்கிச் சென்றான்..

தப்பு பண்ணிட்ட கார்த்திக் இனி நீயே நினைச்சாலும் உன் பொண்டாட்டிய பாக்க முடியாது..இந்த அருண் யாருநு அப்போ தெரியும் உனக்கு. என்றவாறே வெளியே செல்ல சஹானா முகத்தில் சிறு கலக்கம்கூட இருக்கவில்லை புன்னகைமாறாமல் அப்படியே நிர்மலமாய் இருந்த முகத்தை கண்டவனுக்கு முதன்முறையாய் பயம் வந்தது..இருப்பினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் காரின் அருகில் செல்ல அதற்குள் கார்த்திக் அவர்களை நெருங்கியிருந்தான்..

மறுபடியும் இருவருக்கும் சண்டை அதிகமாகஓரளவுக்குமேல் தாங்கமாட்டாமல் அருண் ஓட ஆரம்பித்திருந்தான்..எதற்காக அடிக்கிறோம் என்பதே மறந்துபோகும் அளவிற்கு சஹானாவையும் மறந்து வெறிபிடித்தவனாய் அவனை துரத்த ஆரம்பிருந்தான் கார்த்திக்..வயல்களின் நடுவில் ஓடி தோட்டத்தை கடந்து சஹானாவின் தோட்டப்பகுதிக்கு வந்தவன் அதற்கு மேல் முடியாமல் கால் இடறி கீழேவிழ அங்கிருந்த கல்லில் தலைப்பட்டு மயங்கி சரிந்தான்..அவன் விழுந்ததை பார்த்தவனுக்கு தானாய் வேகம் குறைய சஹானாவின் நினைவு வந்து திரும்பினான்..

அவள் மெதுவாய் அவனருகில் வந்து மாமா உனக்கு ஒண்ணுமில்லயே எனும்போதே அவன் கண்களுக்கு மேல் லேசாய் உரசி ரத்தம் வெளிவர ஐயோ மாமா..என தன் துப்பட்டாவால் துடைக்க எரிச்சலின் காரணமாய் முகம் சுளித்தவன் ஒண்ணுமில்ல சஹிம்மா..நீ கைய காட்டு கட்டை கழட்டிவிடுறேன்..அஎன்று அவள் நலனை உறுதிப்படுத்திவிட்டு ஒரு நிமிஷம் சஹிம்மா ஒன் அவர் மேல ஆச்சு கண்டிப்பா மணி அண்ணா போலீஸ்ல இன்பார்ம் பண்ணிருப்பாரு நா அவனுக்கு என்னாச்சுநு பாக்குறேன் என்றவாறு அவனருகில் சென்றான்..அவன் மயக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியவன் அவனை மெதுவாய் இழுத்து பம்ப்செட் அருகில் சாய்ந்தவாறு அமர வைத்து கயிற்றால் அவன் கால்களை கட்டினான்..அதற்குள் மணி போலீசோடு அங்கு வர போலீஸாரிடம் நடந்ததை விளக்கினான்..

ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல மிஸ்டர் கார்த்திக் ஏற்கனவே இவன்மேல நிறைய கம்ப்ளைண்ட்ஸ் இருக்கு அதிகாரம் இருந்தும் எந்த ஆதாரமும் இல்லாததால இவன எங்களால ஒண்ணும் பண்ணமுடில..விடுங்க நாங்க பாத்துக்குறோம் என்றார் இன்ஸ்பெக்டர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.