(Reading time: 26 - 51 minutes)

அவனின் கோபத்தை பார்த்து யோசனையுடன், நீங்க நினைக்கிறமாதிரி என்னால் நேரடியாக இதை கையாளமுடியாது. மேலும் இதில் உள்ள வீடியோ டெலிட் ஆனால் தான் என்னால் நிம்மதியாக் மூச்சு விடமுடியும்.

ரமேஷ் என் வீட்டில் என்னை வேலைக்கு அனுப்பியதே பெரிய விசயம். மேலும் என்னை வேலைக்கு அனுப்பியதையே குற்றமாக பேசும் என் ஊரு மக்களுக்கு நான் பிரச்சனையில் மாட்டியிருப்பது தெரிந்தால் கண்,காது,மூக்கு வச்சு பேசி ஊருக்குள் என் குடும்பத்தை தலை நிமிர்ந்து நடக்கவிடமாட்டாங்க அதற்குத்தான் நான் பயப்படுகிறேன். அந்த மிரட்டல் ஆசாமிக்கு பயந்து இல்லை என்றாள்.

அவள் சொன்னதும் யோசனையுடன் என் ப்ரண்ட் அண்ணன் இன்ஸ்பெக்டராக இருக்கிறான், அவரிடம் நான் ஆலோசனை கேட்கிறேன் என்று சொன்ன ரமேஷ் அவளின் முன்பே டயல் செய்தான், சத்யா அண்ணா என் தோழி அழகுநிலாவிற்கு பிரச்சனை, அதில் இருந்து எப்படி தப்பிக்க என்று ஆலோசனை சொல்லமுடியுமா? எனக் கேட்டான்.

அதற்கு என்ன பிரச்சனை? என்று கேட்டதும் இதோ அவளிடமே போனை கொடுக்கிறேன் அவளே பிரச்சனைபற்றி சொல்வாள் என்று கூறி அழகியிடம் போனை கொடுத்தான்.

அழகுநிலாவும் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு அவளுக்கு ஹோட்டலில் நடந்ததை மேலோட்டமாக சொல்லிவிட்டு அதன் பின் அந்த மினிஸ்டரின் மகன் நரேன் தன்னை மிரட்டியதையும் அதன்பின் மாலில் அவனிடம் போனை கொடுக்க போனதும் அங்குநடந்த அசம்பாவிதத்தையும் மேலோட்டமாக சொன்னவள் தன பேரும் வீடியோவும் வெளிவராமல், தான் எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற என்று கேட்டாள் அழகுநிலா.

அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் சத்யன் சிறிது யோசித்து இந்த போன் மேட்டரை நீங்க கம்ப்ளைன்ட் ஆக எழுதி வேப்பேரியில் இருக்கிற கமிஷினர் ஆபிசில் உள்ள சைபர் கிரைமில் நாளைக்கு ஈவினிங் ஒரு ஐந்து முப்பதுக்கு வந்து கொடுங்க. நானும் அங்க வந்துடுறேன் என்ன செய்யலாம் என்று பார்த்துவிடுகிறேன் என்று கூறினார் சத்யன்

உடனே ரொம்ப தாங்க்ஸ் சார் நாங்க நாளைக்கு கம்ளைன்ட் கொடுக்க அங்க வந்துடுறோம் என்று சொல்லி போனை ரமேசிடம் கொடுத்தாள்.

பின் ரமேசிடம், நாளைக்கு சுமதியின் நிச்சயத்திற்கு உங்களையும் அழைத்து இருப்பாள். ஆபீஸ் முடிந்ததும் என் கூட வேப்பேரியில் இருக்கிற கமிஷினர் ஆபீசில் இருக்கிற சைபர் கிரைம் டிப்பார்ட்மென்ட்க்கு என் கூட வருகிறீர்களா? அங்கு போய் கம்ளைன்ட் கொடுத்துட்டு அப்படியே இரண்டுபேரும் சுமதி நிச்சயத்திற்கு போவோம் என்றாள் அழகுநிலா.

அதற்கு ரமேசும், சரி என தலையாட்ட அதற்குள் இருவரும் பேசிக்கொண்டே அலுவலகத்தைவிட்டு வெளிவந்து இருந்தனர். ரமேஷ் அழ்குநிலாகாக அங்கு சென்றுகொண்டிருந்த ஆட்டோவை கைகாண்பித்து நிப்பாட்டி அதில் அழ்குநிலாவை அனுப்பிவைத்து தானும் தன பைக்கை எடுத்து தோழிக்கு தன்னால் உதவமுடிந்த மன நிம்மதியுடன் வீட்டிற்கு விரைந்தான்.

இன்ஸ்பெக்டர் சத்தியன் மினிஸ்டர் காந்தனின் கைக்கூலி. அவனுக்கு அரசாங்கம் கொடுக்கும் சம்பளப்பணத்தைவிட நரேனின் அப்பா மினிஸ்டர் காந்தனின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம். எனவே அவனது விசுவாசத்தை இப்பொழுது மினிஸ்டருக்கு கண்பிக்க நினைத்து அவரது பெர்சனல் நம்பரை அழுத்தினான்.

ஆனால் அவர் சத்தியனின் நம்பரை பார்த்தவுடன், டிப்பார்ட்மெண்டில் நமக்கு விசுவாசமா இருக்கிற நாயா... இவன தக்கவச்சுக்க எழும்புத்துண்ட போட்டா, கவ்விட்டுபோகாம எப்பப்பாரு ஏதாவது கேட்டு நச்சரிக்கிறானே.... இந்த இன்ஸ்பெக்டர் விக்ரம் என்று எரிச்சலுடன் போனை சைலண்டில் போட்டுவைத்தார் மினிஸ்டர் காந்தன்.

இருதடவை முயற்ச்சிசெய்த இன்ஸ்பெக்டர் விக்ரம் அதை மினிஸ்டர் எடுக்கவில்லை என்றதும் நரேனின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டான் .

அதை நரேன் எடுத்ததும் ஒரு விஷயம் உங்க காதில போடனுமே தம்பி என்றான் விக்ரம் .

சொல்றதுக்குதானே போன் பண்றே என்னனு சொலலுங்க இன்ஸ்பெக்டர் சத்யன் என்றான் நரேன்.

இல்ல தம்பி.... இந்த விஷயம் உங்களுக்கு ரொம்ப முக்கியமானது அதனால விஷயம் சொன்னதும் கொஞ்சம் நம்மள கவனிக்கணும் என்றான்.

அவனின் பேச்சில் காண்டான நரேன் முதலில் விசயத்த சொல்லு இன்ஸ்பெக்டர், பிறகு தான் எப்படி கவனிக்கணும்னு முடிவெடுக்கமுடியும் என்றான்.

உங்களுக்கு அழ்குநிலானு யாரையும் தெரியுமா தம்பி? அதுகிட்ட உங்க போன் ஏதாவது மாட்டிகிட்டதா? என்று கேட்டான்

அழ்குநிலாவின் பெயரைக்கேட்டதும் அலார்ட் ஆன நரேன், உனக்கு எப்படி போன் விபரம் தெரிந்தது? விசயத்த இழுவையா இழுக்காம முழுசா சொல்லு இன்ஸ்பெக்டர் என்று குரலில் கடுமையைக் கூட்டி கேட்டான்.

இல்ல அந்த பிள்ள சைபர் கிரைம் ஆபீஸ் பற்றி என்கிட்ட விசாரிச்சுச்சு அதுட்ட எதோ போன் இருக்காம் , உங்களை பற்றி எதோ கம்ளைண்டுடன் நாளைக்கு சாயங்காலம் ஐந்துமணிக்கு கொண்டுபோய் கொடுக்கனும் என்றும் அதுக்கு என்னையும் துணைக்கு வரச்சொல்லி என்னுடைய தம்பியின் நண்பன் ரமேஸ் கேட்டான், விஷயம் உங்களை பற்றியதுனு தெரிந்ததும் அவனிடம் வருகிறேன் என்று பிட்டப்போட்டுட்டு உங்க காதிலையும் விசயத்த சொலிட்டேன் என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.