(Reading time: 26 - 51 minutes)

என்னடி அழகி, பாஸ் உனக்கு நாளைக்கு லீவ் கொடுக்கலையா என்று வருத்தத்துடன் கேட்டவள், என்ன செய்றது... சரி சாயங்காலம் கண்டிப்பா வந்துடனும் என சொல்லியவள், எனக்கு வொர்க் இருக்கு நான் இங்க நின்னுட்டு இருக்கிறது ரமணி பார்த்துட்டா ஒருவழி செஞ்சுரும் என்றவள் தனது இடம் சென்று அமர்ந்து கொண்டாள்.

அழகுநிலா யோசனையுடன் தனது சிஸ்டத்தை இயக்கவும் அவளுக்கு மெயில் வந்திருபதற்கான இன்டிமேசனை பார்த்தவள் அதனை ஓபன் செய்து பார்க்கையில் மூன்று கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிகளில் இருந்து கொட்டேசன்கள் வந்திருந்தது அதில் ஒன்று ஜானகி பில்டர்ஸ் ஆனால் அது ஆதித்தோடது என்பது அழகுநிலாவிற்கு தெரியாதே! மேலும் அதில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இரண்டு வகையான கொட்டேசனை அனுப்பியிருந்தது.

அழகுநிலா அந்த மூன்று கம்பெனி கொட்டேசனையும் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு தனது பாஸிடம் கொடுக்க விரைந்தாள்.

மாதேஷ் அப்பொழுது அங்கு இல்லாததால் அந்த கொட்டேசன்களை வசந்திடம் கொடுத்தாள் அழகுநிலா. வசந்த் ஏற்கனவே தனது மேனேஜரிடம் டாப் த்ரீ கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியிடம் தாங்கள் புதிதாக கட்டப்போகும் பில்டிங்கின் லேன்ட் ஸ்கொயர் பீட் அளவை கூறி தங்களின் சாப்ட்வேர் கம்பெனியின் பொதுவான் தேவைகளை கூறி கொட்டேசன் வாங்கச்சொல்லி மட்டும் சொல்லியிருந்தான், பாவம் அவன் அறியவில்லை டாப் ஒன் தற்போது ஜானகி பில்டர்ஸ் என்பதை. மேலும் அழகுநிலா கொடுத்த அந்த நான்கு கொட்டேசனில் இரண்டு கொட்டேசன் தான் அவனுக்கு திருப்தியாக இருந்தது ஆனால் அந்த இரண்டும் ஜானகி கன்ஸ்ட்ரக்சன் உடையது என்று தெரிந்தால் தனது நண்பனான மாதேஷ் ஆட்சேபனை செய்வானோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது எனவே யோசனயுடன் நின்றுகொண்டிருந்தான் வசந்த்.

ஆனால் அழ்குநிலாவிற்குதான் ஆபீஸ் நேரம் முடிந்துவிட்டதே மற்ற எல்லோரும் அலுவலகத்தைவிட்டு கிளம்பிக்கொண்டு இருப்பதை பார்த்து தான் மட்டும் தனித்து கிளம்ப விருப்பமில்லாமல் எப்போதடா தன்னை போகச்சொல்வான் என முள்ளின் மீது நிற்பதைப் போல் நின்றுகொண்டிருந்தாள்.

யோசனையுடன் நிமிர்ந்து அழ்குநிலாவை பார்த்தபோது அவள் பார்வை முழுவதுவும் கண்ணாடி தடுப்புக்கு வெளியே அபீசையே பார்த்தபடி இருப்பதை கண்டு அங்க என்ன அப்படி பார்க்குறீங்க அழகுநிலா? என்று கேட்டான்

அவனின் குரலில் வேகமாக ஒன்றுமில்லை பாஸ். மற்ற ஸ்டாப்ஸ் எல்லோரும் கிளம்பறாங்க நானும் கிளம்பட்டா? என்றாள்.

அவள் அவ்வாறு சொல்லியதும் இங்க பாருங்க அழகுநிலா நீங்க இதேபோல் மாதேசிடமும் கவனமிலாமல் வேலை பார்க்காதீங்க மேலும் இப்போ நாம கம்பெனியின் விஸ்திகரிப்பிற்காக கூடுதலாக் உழைக்க வேண்டியநேரம் டூ யூyou அன்டர்ஸ்டேன்ட். தேட் youயூ சுட் கோஆப்பரேட்? என்றான்

அவனின் வார்த்தைகளுக்கு தன்னை அறியாமல் அவள் உதடுகள் ஓகே பாஸ் என்று உச்சரித்ததும், என்ன நினைத்தானோ? நீங்க இப்போ போகலாம் அழகுநிலா. நாளைக்கு காலையில் உங்களுக்கு டேபிள் இங்கே அரேஞ் பண்ணியிருப்பார்கள். ஒரு அரை மணிநேரம் முன்னாடியே வந்துருங்க என்று கூறினான்.

ஏற்கனவே கடுப்பில் இருக்கும் அவனிடம் வேறு எதுவும் மறுத்துபேச பயந்து வெளியேறினாள்.

சோர்வுடன் தனது பேக்கை எடுத்தபடி வாசலை நோக்கி சென்றுகொண்டிருந்த அழ்குநிலாவினை பார்த்த ரமேஸ் கிளம்பியாச்சா? என்று கேட்டபடி அவளுடன் இணைந்து நடந்தான்

தன சோர்வை மறைத்து அவனிடம் புன்னகைத்தபடி நம்ம காப் இன்னும் கிளம்பலையே என்று கேட்டாள் அழகுநிலா

ஐந்துநிமிசம் முன்னாடி கிளம்பிபோய்விட்டதே. நீங்க கவனிக்கலையா? ஆட்டோவில் தான் ஹாஸ்டலுக்கு போகனுமா நான் வேனா ஹாஸ்டலில் ட்ராப் பண்ணட்டுமா? என்று கேட்டான்.

அச்சோ! அதெல்லாம் வேண்டாம் ரமேஷ். நான் ஆட்டோவிலேயே போறேன் என்று சொன்னவள், எனக்கு ஓர் உதவி செய்யமுடியுமா ரமேஷ்? எனக் கேட்டாள்.

என்ன செய்யணும் என்று சொல்லுங்க அழகுநிலா, என்னால் முடிந்ததை கண்டிப்பா செய்வேன் என்றான் ரமேஷ்

உங்களுக்கு யாரவது சைபர்கிரைமில் தெரிந்தவர்கள் இருகிறார்களா ரமேஷ்?, எனக்கு மிரட்டல் விடுக்கும் அந்த போன் ஆசாமி திரும்ப மிரட்டுவதற்குள் என் வீடியோ பதிவை டெலிட் செய்யணும் என ட்ரை பன்னுனேன் ஆனால் என்னால் முடியல என் வீடியோ பதிவை இதில் இருந்து டெலிட் செய்யணும் மேலும் என்னை இந்த அளவு டார்ச்சர் செய்த அவனுக்கும் சட்டப்படி தண்டனை கொடுக்கணும் என யோசனயாக இருக்கு.

ஆனால் இதை நான் செய்தாதாக வெளியே தெரியாதவாறு தெரிந்தவர்கள் மூலம் செய்யணும் என நினைக்கிறன் என்றால் அழகி.

அவள் அவ்வாறு சொன்னதும ரமேஷ், அவளிடம் உங்களின் மீது தப்பு இல்லையே பிறகு ஏன் நீங்கள் செய்ததாக வெளியில் தெரிந்தால் என்ன? நான் உங்ககூட கம்ப்ளைன்ட் கொடுக்க துணைக்கு வருகிறேன். எதுனாலும் நேரா மோதிப் பார்த்திடுவோம் என்றான் சற்று கோபமாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.