(Reading time: 26 - 51 minutes)

ம்...நானும் பெர்மிசன் கேட்டுப்பார்கிறேன் ரமேஷ், ஆனா நம்ம பாஸ் வசந்த் கொடுப்பாருன்னு எனக்கு தோனல. என் மேல் என்ன கடுபுனு தெரியல. நாலுபேர் பார்கிற வேலையே என்னை மட்டும் பார்க்க வச்சு கொடுமை பண்றாரு என்று சொன்னவளின் சோர்ந்த முகம் ரமேசுக்கு வருத்தத்தை தந்தது.

தன்னை கவலையுடன் பார்க்கும் ரமேசை பார்த்த அழகுநிலா தன்னை இயல்பாக அவனிடம் காண்பித்து அதெல்லாம் நான் கில்லி மாதிரி வேலைசெய்து சமாளித்துடுவேன் சம்பளம் இரட்டிப்பா தரும்போது வேலையும் ரெட்டிப்பாகத்தானே இருக்கும் என்றவள், வேகமாக சாப்பிட்டுமுடித்து எனக்கு வேலை இருக்குப்பா! நான் போறேன் என்றவள் தனது மேஜைக்கு விரைந்தாள் .

அவள் அங்கு எம்.டி ரூமிற்குள் போனபின்புதான் கவனித்தாள் மாதேசும் வந்துவிட்டதை இருவருக்கும் பொதுவாக குட் ஆப்டர்நூன் பாஸ் என்றவள் பாஸ் நீங்க கொடுத்த வொர்க்கை பினிஸ் பண்ணிட்டேன் என்றாள் வசந்த்திடம்.

அவள் கூறியதும் அப்போ நீங்க இப்ப என்ன செய்றீங்கன்னா ஏற்க்கனவே போய்கொண்டிருக்கிற ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை எல்லாம் தனி போல்டரில் பைல்பண்ணி சார்ட் நோட் பிரிபேர் பண்ணிடுங்க என்றான்

அவன் சொன்னதும், பாஸ் நீங்க சொல்ற வொர்க்கை இன்னைக்கு சாயங்காலத்திற்குள் முடிக்க முடியாது. மேலும் என் பிரண்டு சுமதியோட நிச்சயதார்த்தத்திற்கு போக ஆபீஸ் டைம் முடிவதற்கு ஒருமணிநேரம் முன்பே எனக்கு பெர்மிசன் வேனும்பாஸ் என கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் கேட்டாள்.

அவள் கூறியதை கேட்டு கோபத்துடன் பேசப்போன வசனத்தை ஒருநிமிஷம் வசந்த் நீங்க போய்டுவாங்க அழகுநிலா. அதுவரை அவன் குடுத்த வொர்க்கை செய்யுங்க மீதிவொர்க்கை இன்னும் இரண்டு நாட்களுக்குள் முடித்து கொடுத்தால் போதும் என்று கூறினான்.

பின்பு வசந்திடம் கொஞ்சம் லிபரலாக நடந்துக்கோ வசந்த். நேற்று இருந்து பார்கிறேன் நீயும் ரொம்பத்தான் படுத்தற அவங்கள. என்னதான் காண்ட்ராக்ட் பேசிஸ்சில் நாம் வேலைக்கு எடுத்திருந்தாலும் சேலரி டபுள்ளா கொடுத்தாலும் அவங்களும் மனுசிதான் மிசின் கிடையாது என்பதை நாம கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கிடனும் என்றான்.

காலையில் அவசர அவசரமாக கிளம்பி, தனக்கு வந்த மிரட்டலை சமாளிக்க எடுத்தமுடிவு சரியா? என குழம்பிக்கொண்டும்... புதிதாக தன மேல் திணிக்கப்பட்ட செக்ரட்ரி போஸ்டும்.... ஆபீசில் செய்த அதிகப்படியான வேலையும் அழ்குநிலாவின் உடல் மனம் இரண்டையும் பலவீனப்படுத்தியிருந்தது .

இந்தநிலையில் தனக்கு சப்போர்ட்டாக மாதேஷ் பேசியதும் சட்டென்று சுய பச்சாதாபத்தில் அவளின் கண்களில் கண்ணீர் தழும்பிவிட்டது. அதை அவர்களிடமிருந்து மறைப்பதர்காக் கஷ்ட்டப்பட்டு கண்ணீரை வழியவிடாமல் தடுத்துப்பார்த்தாள். இருந்தும் மூக்கின்நுனியும் கன்னமும் சிவந்து உதடுகள் துடிக்க போவதை உணர்ந்து கீழ்இதழை பற்களினால் கடித்து அடக்கமுயன்ற நேரம் கண்ணில் தேங்கியிருந்த கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருண்டு வழிந்துவிட்டது .       அதில் சங்கோஜமடைந்தவள் வேகமாக தனது மேஜைக்கு விரைந்து சிஸ்ட்டத்தில் வேலைசெய்வதை போன்ற பாவனையில் தன்னை நிதானப்படுத்த முயன்ற நேரம் அவளின் முன் மாதேஷ் தண்ணீர் பாட்டிலை நீட்டி ரிலாக்ஸ் நிலா இந்தாங்க தண்ணீர் என நீட்டினான்

மறுபேச்சு பேசாமல் அதை வாங்கி குடித்ததும் கொஞ்சம் நிதானித்தவள் thanks தேங்க்ஸ் பாஸ் என சொல்லி வரவழைத்த புன்னகையை அவனுக்கு கொடுத்தாள்.

உடனே மாதேஷ் அவளிடம் இப்போ கொஞ்சம் நார்மல் ஆகிட்டீங்கன்னு நினைக்கிறேன். இல்ல இன்னும்.... என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை தடுத்து

ஸ்டில், ஐ ஆம் ஓகே பாஸ் .கொஞ்சம் ரெஸ்ட்ரூம் போய் ரெப்ரஸ் பண்ணிட்டுவந்து என் வேலையே செய்கிறேன் என்றதும் சம்மதமாக மாதேஷ் தலையாட்டவும் எழுந்து ரெப்ரஸ் செய்து வந்தவள் முகத்தில் ஆழ்ந்த சாந்தம் நிலவியது.

அவள் ரெஸ்ட்ரூம் சென்றதும் வேகமாக மாதேஷ் அவளின் மேஜை ட்ராயரில் நரேனின் மொபைல் இருக்கிறதா என்று ஆராய்ந்தான்

ஆனால் அழகுநிலா கையில் வைத்திருக்கும் பர்சினுள் அதையும் எடுத்துக்கொண்டே சென்றிருந்தாள் அதனால் அவனுக்கு அது கிடக்காமல் போய்விட்டது அவள் வரும் அரவத்தை வசந்த் கூறியதும் பழையபடி அந்த டிராயரை மூடிவிட்டு தனது இருக்கைக்கு வந்துவிட்டான் மாதேஷ் .

அழகுநிலா சொன்னதுபோல் ஆபீஸ் விடும் ஒருமணிநேரம் முன்பே பெர்மிசன் வாங்கி கிளம்பிவிட்டாள். வெளியில் வந்ததும் ரமேசை அவள் தேடுவதை அவளின் பின்னல் வந்த ரமேஷ் அறிந்துகொண்டு நான் உங்க பின்னால்தான் இருக்கிறேன் அழகுநிலா என்றதும், திரும்பிப்பார்த்து வந்துட்டீங்களா? நேரா கமிஷ்னர் ஆபீசிலுள்ள சைபர் கிரைம் ஆபீசுக்கு போகலாமா என்று கேட்டதும் அவன் சம்மதமாக தலையாட்ட இருவரும் இணைந்து வெளியில் வந்து ரமேசின் பைக்கில் பின்னால் உட்கார்ந்தபடி பயணத்தை மேற்கொண்டாள் அழகுநிலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.