ஓர் ஹாஸ்பிட்டல் கட்டிக்கொடுப்பதற்காக கிளையண்டுடனான அக்ரீமென்ட் சைன் பன்னுவதற்காக அந்த ஸ்டார் ஹோட்டலில் ஓர் கெட்டுகதருடன் கூடிய பிசினஸ் மீட்டிங்கில் இருந்த ஆதிதுக்கு வர்சாவிடம் இருந்து மெசேஜ் வந்தது. இன்று மதியம் அவன் கூட்டிப்போவதாக சொன்ன ஷாப்பிங்கிற்காக கிளம்பி அவனின் ஆபீஸ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக அதில் இருந்தது.
தன்னுடைய பி.ஏவை கண் பார்வையில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கச் சொல்லிவிட்டு வர்சாவிற்கு பதில் மெசேஜ் அனுப்பினான். அதில் தற்போது அவன் இருக்கும் ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கு வந்து ரிசப்சனில் ஓர் பத்து நிமிடம் காத்திருக்குமாறும், அதற்குள் மீட்டிங்கை முடித்துவிட்டு அவளை பிக்கப் பண்ணிக்கொள்வேன் என்றும் இருந்தது.
மீட்டிங் முடிந்து தான் உடுத்தியிருந்த கோர்ட்டைகூட மாற்ற நேரம் இல்லாமல் அத்துடனே வர்சாவை நோக்கி வேகமாக ரிசப்சனுக்கு வந்தான். அங்கு அவளின் தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த வார்சா ஆதித் வந்ததும் அவளின் தோழிகளுக்கு thanksபை சொல்லிவிட்டு அவர்களின் முன் கெத்தாக ஆதித்தின் கையை பிடித்து அவனுடன் காரை நோக்கி சென்றாள்.
ஆதித்தும் அன்றைய பிசினஸ் அக்ரீமென்ட் நல்லபடி முடிந்ததால் சந்தோசமாக அவளுடன் கை கோர்த்தபடி தனது காரில் அந்த மாலின் வாசலில் இறங்கிகொண்டான். அவன் காரைவிட்டு இறங்கியதுமே அங்கு விரைந்து வந்த செக்யூரிட்டி காரை பார்க்பண்ண அவனிடம் கார் கீயை வாங்கிகொண்டு சென்றான் .
வர்சாவுடன் அந்த மாலின் மூன்றாவது தளத்தில் உள்ள அந்த டைமண்ட் ஷோ ரூமிற்குச் சென்றான். அங்குள்ள டைமண்ட் கலெக்சன் அனைத்தும் அவ்வளவு அழகாக இருந்தது. வர்சாவிற்கு, எதை எடுக்க எதைவிட என்றே தெரியாமல் குழம்பினாள். அருகில் இருந்து அவளின் தடுமாற்றத்தை பார்த்து, நான் செலக்ட் பண்றேன் வர்ஷ் என்றவன் அவளின் கழுத்தில் வைத்துப்பார்த்து ஐந்தே நிமிடத்தில் பூவேலைப்பாடுடன் டைமண்ட் நெக்லஸ் மற்றும் அதற்கு பொருத்தமான் பூவடிவ டைமண்ட்தோடு ,மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றை தேர்ந்தெடுத்தான்.
சூப்பர் ரொம்ப அழகா இருக்கு ஆதித். ஆனால் பட்ஜெட் நான் வைத்திருப்பதைவிட அதிகமாக இருக்குது என்றாள். அவள் கூறியதை கேட்ட ஆதித், யேய்....! என் பர்சை காலி பண்ண பிளான் போட்டுத்தானே என்னை கூப்பிட்டுவந்தாய் பிறகு ஏன் உன் பட்ஜட் பற்றி பேசி சிரிப்பை வரவைக்கிற என்றான் ஆதித்.
அவன் செலக்ட் செய்த நகைகளை போட்டு கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டே தி கிரேட் பிஸ்னஸ் மேன் ஆதித்தராஜ் தன் லவ்வருக்கு செலவுபண்ண யோசிப்பாரா என்ன? என்று கேட்டபடி மையலுடன் அவனை பார்த்து சிரித்தாள்.
அவளின் சிரிப்பினில் தன்னை வீழ்த்தப் பார்க்கும் அவளினின் செயலைப் பார்த்தவன், அதுதான் இதை வாங்கிக் கொடுத்தாலும் நீ என் ஆசையை இப்போ நிறைவேற்றி வைக்கப் போவதில்லையே? பிறகு ஏன் சிரித்து மனுசனை கிளப்பிவிடுற! என்று அவளின் கன்னத்தை லேசாக வலிக்கும படி கிள்ளியவன், வருகிறாயா பேபி..... நாம் கல்யாணத்திற்கு பிறகு வாழப்போற வீட்டிற்கு உன்னை கூப்பிடுப்போகிறேன் அப்படியே.... எப்படி வாழ்வோம் என்று ரிகர்சல் காட்டட்டுமா? என்று கண்ணடித்து கூறியபடி அவளை ரசித்தான் .
அவனின் செயலை ரசித்தபடி ம...கூம்..என்று கூறியபடி தலையை மறுப்புடன் ஆட்டியவள் அவன் கண்களின் மேய்ச்சல் பார்வையில் தடுமாறி பின் அதனை அவனிடம் இருந்து மறைக்கும விதமாக பில் பே பண்ணிட்டு வாங்க நான் ரிங் கலெக்சனை ஒருதரம் பார்வை இட்டுவிட்டு வருகிறேன் என்று எழுந்தாள்.
ஆதித் பில் பே பண்ண கவண்டர் சென்றான் வார்சா ரிங் செக்சஸனில் ஆதித்துகு சர்ப்ரைஸ் கிப்டு கொடுக்க, இரண்டு இதயம் நடுவில் ஓர் வைரத்துடன் கூடிய அழகான மோதிரத்தை அவனுக்காக வாங்கினாள். இதுவரை அவனிடம் இருந்துதான் அவள் பரிசு வாங்கியிருக்கிறாள். ஆனால், அவன் தன தோழிகளிடம் கைகொடுப்பதை கூட தவிர்பதையும் தன்னைவிட அதிக வசதிபடைத்த செல்வச் சீமாட்டி பெண்கள் வழிய அவனிடம் பேசவந்தாலும் ஓர் பார்வையிலே அவர்களை எட்டிநின்று பேசக் கட்டளையிட்டத்தையும் பார்த்திருந்த வர்சாவிற்கு அவனின்மேல் காதல் பொங்கியது.
மேலும் அப்படிபட்டவன் தான் அருகில் இருக்கும்போது சந்தர்பம் கிடக்கும் போதெல்லாம் தன்னை உரசிப்பார்பதும் தன்னை வேண்டி தாபத்துடன் அழைப்பு விடுப்பதையும் பார்த்தவள், மனதிற்குள் “ஸ்வீட் ராஸ்கல்” என்று அவனை கொஞ்சிகொண்டாள் மேலும் தன அழ்கின்மீது அவனின் மையலில் கர்வம் கொண்டாள்.
அழகுநிலா, அந்த மாலின் நுழைவு வாசலுக்கு வரும் போதே அவளுக்கு அந்த மிரட்டல் ஆசாமியிடம் இருந்து போன் வந்தது அதை எதிர்பாத்தே இருந்த அழகுநிலா அவனிடம் நான் உன் மொபைலுடன் வந்துட்டேன். நீ எங்க இருக்கிற? என்று கேட்டாள்
உடனே அவன், மேல ஜூவல்லரி ஷோ ரூம்கள் இருக்கிற தேர்டு ப்ளோர்க்கு வா, அங்கதான் கூட்டம் இல்லாமல் இருக்கும் என்று தொடர்பை துண்டிக்கப் போனவனிடம் போனை வச்ச்சிடாத நான் கொஞ்சம் உன் கூட பேசனும் என்றாள்.
Alagu janagi cute
Adit ku varsha no match
Avanoda brothar ku ta set aava
Oru vela vrsha manasa mathi marriage panni adit ah verupethuvana
Nice update devi
Nila phone-i Kodukkamal innaikku thappichalum marupadiyum prachanai varumnu yosikka maranthutale
Varsha enna seyyapora
Nice updates
Both nila and janaki going to develop a good relation.
How this video problem is going to solved?
Will nila hand over the mobile to adhi?
Want to read more episodes
Waiting for long epi
Hero sir nila va ipo kaapathitar next edhum prblm vandha nila ena pannuva??
Naren vera summa irupan nu thonalayee..
Adith amma vera nila va adith lover nu nenaikarangalo?? ??
Varsha ena aava?
Waiting for next epi sis.. .