(Reading time: 18 - 35 minutes)

20. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா

அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா

யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா

இழந்ததை மீட்க வா ...இரவலும் கேட்க வா ...

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

என்னை நான் பெண்ணாக எப்பொழுதுமே உணரல

உன்னாலே பெண்ணானேன் எப்படியென தெரியல

விலகி இருந்திட கூடுமோ

பழகும் வேளையிலே விவரம் தெரிந்த பின் ஓடினால்

தவறு தான் இதிலே ஏனடா இது ஏனடா

கள்வனே பதில் கூறடா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே

சொன்னாலும் கேட்காதா உன் குறும்புகள் பிடிக்குதே

அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே

எதற்கு இடைவெளி என்று தான் இதயம் கேட்கிறதே

கூடுதே ஆவல் கூடுதே தேகமே அதில் மூழ்குதே

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ரவு மணி 11:30 ஐ தொட்டிருக்க மணி உறங்கிவிட்டதை உறுதிப்படுத்தியவள் ஷரவன் கொடுத்த கிப்ட்டோடு வராண்டாவில் வந்தமர்ந்தாள்..ஐயோ சஹானாக்கா எப்போ வருவாங்கநு தெரியலையே..அப்பா கேட்டா என்ன சொல்றது ஒண்ணும் புரில இவரு ஏன் இப்படி பண்றாரு என பதட்டத்தில் செய்வதறியாமல் கௌரி தவித்துக் கொண்டிருந்தாள்..11:45 ஐ தாண்டியவுடன் தன் கையிலிருந்த கிப்டை பிரித்தவள் ஆச்சரியம் சந்தோஷமென சொல்லமுடியா உணர்ச்சிகளில் மூழ்கியிருந்தாள்..அழகான ஸ்மார்ட் போன் அதிலிருந்தது..அதையெடுத்து பிரித்து உயிர்ப்பித்த அடுத்த நொடி திரையில் ஷரவன் பெயரோடு அழைப்பு ஒலித்தது..

சற்றும் குறையாத படபடப்போடு அழைப்பை ஏற்று காதில் வைக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அழகி என்றான் அவளவன்..

தேங்க் யூங்க எதிர்பாக்கவேயில்ல..ஆனா எதுக்கு இதெல்லாம்..விஷ் பண்ணா போதாதா??

ம்ம் எப்படி நா இங்க பரங்கிமலை மேல நின்னு கத்தினா உனக்கு அங்க பாபநாச மலைல கேக்குமா??21ம் நூற்றாண்டுல போன் இல்லாம இருக்குற ஒரே ஆளு என் ஆளுதான்..இதுல தன்னடக்கம் வேற??எப்படியிருக்க??கிப்ட் பிடிச்சுருக்கா??

ம்ம்.. .ரொம்ப நல்லாயிருக்கு..அப்பாகிட்ட  போன் இருக்கு எனக்கு எதுக்கு தனியாநு வாங்கிக்கல...

அப்பறம்???

அப்பறம் ஒண்ணுமில்ல வச்சுடவா???

அடிப்பாவி ஒரு பேச்சுக்கு கேட்டா..ம்ம் ரொம்ப கஷ்டம்தான் கிப்ட் குடுத்ததுக்கு ரிட்டன் கிப்ட்லா கிடையாதா??

ரிட்டன் கிப்ட்டா??நா என்ன தர முடியும்???

 ஒண்ணும் தர வேணாம் ஐ லவ் யூநு சொல்லு போதும்..இப்போ வர பாக்குற அப்போயெல்லாம் நா தான் சொல்லிட்டுஇருக்கேன்..ஒரு தடவை சொல்லேன்..

அது வந்து…ஐ ..ஐ லவ் யூ..பை..

அதன்பின் இரவு முழுவதும் குறுஞ்செய்தியிலேயே கழிய அங்கு வழக்கம்போல் சிவா ஷரவந்தியை ஒருவழி செய்து கொண்டிருந்தான்..

சிவா தூக்கம் வருதுப்பா..நாளைக்கு பேசட்டுமா??நாளைக்கு ஸ்கூல் வேற இருக்கு..

ஹே டீச்சரம்மா ரொம்ப பண்ணாத கல்யாண வேலைல பேசகூட டைம் இல்லாம போச்சு..ஐ மிஸ்ட் யூ சோ மச் நீ என்னனா தூங்க போறேன்னு சொல்லிட்டு இருக்க..

சிவா கடந்த ஒரு மணி நேரமா நீங்க இதையேதான் சொல்லிட்டுஇருக்கீங்க..

ம்ம் அவ்ளோ ஆய்டுச்சா பாரு இனி நீயா கால் பண்ணாம நா பேச போறதில்ல போ..அப்போதான் உனக்கு புரியும் என் பீலிங்ஸ்..

மறுபுறம் நிசப்தமாய் இருக்க,ஹலோ ஹலோ ஹே ஷரவ் கோவிச்சுகிட்டியா சாரிடா சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணேன்..ஹலோ..

ம்ம்ம்

அட லூசு தூங்கிட்டியா??கல்யாணத்துக்கப்பறம் லைஃப் அமோகம் போனை வைக்குறேன் பை..என்றவனுக்கு அடக்கமாட்டாத சிரிப்பு எழுந்தது..

காலை வெயில் முகத்தை தழுவ புரண்டுபடுத்து மெத்தையை தடவியவன் அருகில் சஹானா இல்லாததை உணர்ந்து மெதுவாய் எழுந்தமர்ந்தான்.. சஹி எங்கயிருக்க??

இதோ வரேன் மாமா என சமையலறையில் இருந்து குரல் வந்தது அடுத்த இரண்டாவது நிமிடம் கையில் காபியோடு  அவன்முன் வந்துநின்றாள்..குட்மார்னிங் மாமா..

குட்மார்னிங் சஹி..ஏன்டா அதுக்குள்ள எழுந்துட்ட??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.