Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசு - 5.0 out of 5 based on 3 votes

30. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

ங்களம் கோபமாக நேசமலரை குற்றம் சாட்டியதுமே தாமோதரன் எல்லோரையும் அங்கேயிருந்த தனியறைக்குள் அனுப்பிவிட்டார்.

திருமணத்திற்கு வந்தவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டாம் என்று அவ்வாறு செய்தவர் அவர்களை அங்கே விட்டுவிட்டு வந்திருந்த விருந்தினர்களை கவனிக்க சென்றுவிட்டார்.

அவர்கள் குடும்ப விசயம். அவர்களே பேசித் தீர்த்துக்கொள்ளட்டும் என்று மற்றவர்களும் நடப்பதை பார்த்தவாறு ஒதுங்கியிருந்தனர்.

“அம்மா! நீங்க எப்படி இங்கே? ஏன் இப்படி கோபமா இருக்கீங்க?”

மனுதர்மன் தன் தாயிடம் கேட்க அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“உனக்கு இங்கே என்னப்பா வேலை? அங்கே நம்ம கம்பெனியை யார் பார்க்கிறது?”

“அதுதான் வினு பார்த்துக்கிறானேம்மா.”

“அவன் சின்னப்பையன். அவனால் எப்படி தனியா பார்த்துக்க முடியும்?”

அவன் தன் தாயை கூர்ந்து பார்த்தான்.

“என்னப்பா அப்படி பார்க்கிறே?”

“ஏம்மா? நான் இறந்துட்டேன்னு நீங்க நம்பிக்கிட்டிருந்தப்ப அவன்தானே பார்த்துக்கிட்டான். நான் வராமலே போயிருந்தாலும் அதுவேதானே தொடர்ந்திருக்கும்.”

“ஐயோ! ஏன்ப்பா இப்படி பேசறே?”

காதுகளைப் பொத்திக்கொண்டாள்.

அவனது பேச்சைக்கேட்டு அதிர்ந்து நின்ற நேசமலரின் எதிரில் வந்தாள் மங்களம்.

“எல்லாத்துக்கும் நீதான்டி காரணம். என்னிக்கு உன்னைக் கல்யாணம் பண்ணனும்னு வந்து நின்னானோ அன்னிக்கே என் பிள்ளை எனக்கு இல்லாமப் போயிட்டான்டி. அவன்தான் வேண்டாம்னு கிளம்பி வந்துட்டியல்லே? திரும்பவும் அவனை எதுக்கு பிடிச்சு வச்சிருக்கே?”

நேசமலரைப் பிடித்து உலுக்கினாள்.

அத்தனைப் பேருக்கு முன்னாடி மங்களம் அப்படி நடந்துகொண்டதுடன் மனுதர்மனிடமும் உண்மையை போட்டு உடைத்துவிட்டாளே என்ற கவலையோடு அவனை ஏறிட்டாள்.

அவன் விழிகளில் அதிர்ச்சி.

“அம்மா! நீ என்ன சொல்றே? இவதான் என் மனைவியா?”

நேரே நேசமலரிடம் வந்தான்.

“இந்த உண்மையை இத்தனை நாளா ஏன் என்கிட்டே மறைச்சிட்டே? நீ மட்டுமல்ல. இவங்க எல்லாரும் சேர்ந்துதான்.”

மற்றவர்களையும் முறைத்துப்பார்த்தான்.

வினோதகன் தயக்கத்துடன் வந்தான்.

“வினு! நீயும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டியே? என்னை ஒருத்தி வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டான்னு எவ்வளவு விரக்தியாயிடுச்சு எனக்கு. வாழ்க்கையே வெறுத்துப்போய்தான் இங்கே வந்தேன். ஆனால் இவ என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டு சந்தோசமா இருந்த மாதிரியும் தெரியலே. நான் திரும்பி வந்த போதுதான் சொல்லலே. இங்கே வந்து இவளைப் பார்த்த பிறகாவது நீ சொல்லியிருக்கலாமே. மனோ நீயாவது சொல்லியிருக்கலாமே?”

கரகரத்த குரலில் சொன்னான்.

மனோரஞ்சன் ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டான்.

வினோதகனும் மறுபக்கம் வந்து அணைத்துக்கொண்டான்.

“அண்ணா! எதையும் வேணும்னே மறைக்கலை. நீ வந்த போது நான் வீட்டில் இருந்திருந்தால் எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன். அதற்குள் உன்னிடம் அம்மாவும் அக்காவும் எதையெதையோ பேசி கதை கட்டிவிட்டார்கள். ஏற்கனவே விபத்தில் உடம்பு நோக வந்தவன் என்பதையும் மறந்து அவர்கள் சுயநலத்தால் உன்னிடம் பேசியதை நீயும் நம்பிவிட்டாய். நான் அண்ணியைப் பற்றி உன்னிடம் பேச வந்த போது நீ காது கொடுத்து கேட்கவில்லை. நான் என்னதான் செய்யட்டும். அதற்காகதான் நீ மனோ அண்ணாகிட்ட வர மாதிரி செஞ்சேன். இங்கே வந்து அண்ணியைப் பார்த்த பிறகு உனக்கு பழைய ஞாபகம் வந்துடும்னு தான் இங்கே அனுப்பி வைச்சேன். ஆனா நான் ஆசைப்பட்ட மாதிரி எதுவுமே நடக்கலை.”

“தர்மா! இதுவரைக்கும் என்ன வேணா நடந்திருக்கலாம். இப்ப உனக்கு உண்மை தெரிஞ்சுடுச்சு. நீ மலரையும் அழைச்சுக்கிட்டு கிளம்பு. உனக்கு ஞாபகம் வந்தாலும் வரலைன்னாலும் அவ உன் பொண்டாட்டிங்கிறது மட்டும் உண்மைதானே? கடைசி வரைக்கும் நீ வருவேன்னு அவ மட்டும்தான் நம்பிக்கையோட இருந்தா. அவளோட அன்புதான் உன்னை இன்னிக்கு எங்க எல்லோர் முன்னாடியும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.”

அதற்குள் வந்திருந்த விருந்தினர்களை எல்லாம் கவனித்து அனுப்பியிருந்த தாமோதரன் உள்ளே வந்தார்.

“ஆமாப்பா! ரஞ்சன் சொல்றது சரிதான். வாங்க எல்லாரும் சாப்பிடலாம். சாப்பிட்டு நல்ல நேரம் முடியறதுக்குள்ளே வீட்டுக்கு கிளம்பலாம்.”

அனைவரும் அவர் சொன்னதை ஆமோதித்தனர்.

திருமண மண்டபத்திலிருந்து அவர்கள் எல்லோருமே மனோரஞ்சன் வீட்டிற்கு சென்று மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

கிளம்பும்போது மஞ்சரி மனுதர்மனிடம் வந்தாள்.

“அண்ணா! மலர் ரொம்ப நல்லவ. உங்களுக்கு நடந்தது எல்லாம் மறந்து போயிருக்கலாம். ஆனால் அவ உங்க மேல உயிரையே வச்சிருக்கா. இனி ஒரு தடவை உங்களை பிரிய வேண்டி வந்துச்சுன்னா அவளால் தாங்க முடியுமா என்னன்னு தெரியலை.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுsaaru 2017-10-13 17:19
Nice update rasu. Manu matter suspensa ve iruke finalmta triuma
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-13 19:15
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுTamilthendral 2017-10-11 23:05
Good episode (y)
Eagerly waiting for the next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-13 19:16
Thank you Tamilthendral.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுafroz 2017-10-11 08:44
After a long time unga series padikuren. At a stretch 29epis um padichachu. Semmaya kadhaiya move panreenga ma'am. Accident aana time la Manu ku enachunu therinjuka waiting... Vannamalar oda andha pechuku reason irukum, but adha Vinu epo purinjuka porar??? Ella answers um adutha epi la therinjuka kathutruken!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-11 19:55
Thank you very much Afroz.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுApoorva 2017-10-10 16:15
Cool penultimate epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-10 20:54
Thank you Apoorva.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுAdharvJo 2017-10-09 21:15
:clap: dishum dishum illama smooth drive rasu ma'am super :dance: malar oda appa vum thirundhi irupadhu nice n malars union super cool :P manu sir oda plan thaa puriyala malar avanga love story sollama marandhada poranga indha cautious LA ;-) adutha epi kaga waiting meedhi irukura happy moments celebrate seiya :dance: . :thnkx: for this cool update ma'am (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-09 22:30
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுJansi 2017-10-09 20:53
Very nice epi
Unga storyla taan villigalaal kuda nanmai pirakutu Rash (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-09 22:29
Thank you Jansi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுDevi 2017-10-09 20:32
Story nalla kondu poreenga Rasu :clap: Manu virku unmaiyail amnesia va ? konjam doubt ah than irukku.. next week final update le therinjidum thane (y) waiting eagerly..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-09 20:38
Thank you Devi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுmadhumathi9 2017-10-09 19:47
Hey ennappa adhukkulla mudikka poveenga. Vaara vaaram thavaraama arumaiyaana kathai koduthu kondu irukkeenga. But seekkirama mudikkireengale? :Q: Innum koncham kooda epi kodukka mudiyaatha? :no: Please adutha epiyodu mudikkaatheengaaaaaaaaa. :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-09 20:06
மிகவும் நன்றி மதுமதி.

நான் உங்களை எல்லாம் விட்டு விலகப் போவதில்லை.

மீண்டும் அடுத்த தொடருடன் சந்திக்கப்போகிறேன்.

அதன் அறிவிப்பு கூடிய விரைவில் வரும்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுmadhumathi9 2017-10-10 05:20
:dance: Hey adutha epiyai kodukka poreengala! Super. Happy waiting for next story. :thnkx: :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-12 22:02
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசுராசு 2017-10-12 22:03
Thank you Tamilthendral.
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

Contests

From the Past

Contests

From the Past

Contests

From the Past

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
KVJK

MuMu

NIVV
10
UNES

-

MMV
11
SPK

EMPM

-
12
ISAK

KaNe

NOTUNV
13
-

Ame

-
14
AA

NKU

-
15
KI

-

-


Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top