(Reading time: 17 - 33 minutes)

“இது என்ன இது எல்லாரும் அழுதுக்கிட்டு. ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வர்றவங்களை இப்படியா வரவேற்கிறது?”

அதட்டிக்கொண்டே கையில் ஆரத்தித்தட்டுடன் வந்தாள் வளர்மதி.

அவளது வயிறு மேடிட்டிருந்தது.

அந்த விசயம் ஏற்கனவே வினோதகன் சொல்லி தெரியும். அதன் பிறகு அவளே போன் செய்து வளர்மதியிடமும் கொடிமலரிடமும் பேசியிருந்தாள்.

ஆனால் இப்போது தாய்மைப் பூரிப்பில் அண்ணியைக் கண்டதும் அவளால் சந்தோசத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

போதும். இது போதும். அவளைத் தாங்க அவளது பிறந்த வீட்டினர் இருக்கின்றனர். இனி கணவன் தன்னை ஏற்றுக்கொள்ளவிட்டாலும் அவனை நினைத்துக்கொண்டே காலம் முழுவதையும் கழித்துவிடலாம் என்று முடிவு செய்துகொண்டாள்.

வீட்டுப்பெண்கள் மனுதர்மனையும் நேசமலரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆலம் சுற்ற அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

மோதித்தார் அவர்.

அதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நேசமலருக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

குரலை உயர்த்திப்பேசாத அண்ணி பேசுகிறாள். அதற்கு அப்பாவும் அண்ணனும் சண்டை போடாமல் அமைதியாய் கேட்டுக்கொள்கின்றனர்.

இதை எல்லாம் பார்க்காமல் அம்மா போய் சேர்ந்துட்டாளே என்று வருத்தப்பட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.