“இனி அந்த மாதிரி நடக்காது மஞ்சு.”
“அவ இப்ப குழப்பத்தில் இருக்கா. அவ மனசு தெளியற வரைக்கும் நீங்க பொறுமையா இருக்கனும்.”
“கண்டிப்பா மஞ்சு.”
“இப்ப நாங்க தங்கியிருக்கிற இடத்துக்குப் போய் மலரோட பொருட்களை எல்லாம் பேக் பண்றோம். நீங்க மெதுவா கிளம்பி அங்கே வாங்க.”
“சரிம்மா.”
இன்னும் பேசாமல் இருந்த நேசமலரின் கரத்தைப் பற்றியவள் விடைபெறும் விதமாக மனோரஞ்சன் குடும்பத்தாரிடம் வந்தாள்.
“அங்கிள்! நாங்க கிளம்பறோம். நான் போய் மலரை கிளப்பி அனுப்பனும்.”
“சரிம்மா.”
அவர் நேசமலரிடம் வந்தார்.
“அம்மாடி மலர். உன் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதாதான் நடக்கும். போயிட்டு வாம்மா.”
நேசமலருக்கு கண்கள் கலங்கின.
அஞ்சலியும் அஷ்வந்தும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டனர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்து எங்கே அமர்வது என்று திகைத்து நின்றாள்.
“தர்மா! நான் இப்பவும் சொல்றேன். இவளை கொண்டு போய் இவ வீட்டில் விட்டுரு. நீ நல்லபடியா இருந்தப்பவே உன் கூட அவ நல்லபடியா குடித்தனம் நடத்தலே. இப்ப மட்டும் என்ன கிழிச்சிரப்போறா?”
“அம்மா! நீ பேசாம வரமாட்டே?”
வினோதகன் அதட்டினான்.