(Reading time: 18 - 35 minutes)

சற்று வழுக்கு பகுதியாய் இருப்பதால் கார்த்திக் அவள் இடைபற்றி விழாமல் தாங்கியிருக்க சஹானா தன்னவன் தோள்பற்றி நின்றாள்..காதலர்களுக்கோ புதுமண தம்பதிகளுக்கோ இதைவிட ரம்மியமாய் ஒரு தேனிலவு அமைந்துவிடுமா என்ன??

தூரத்து பறவைகளின் கூச்சலலில் நினைவுப் பெற்றவர்கள் சட்டென விலகி வெளியே வர சஹானா வேகமாய் காருக்குச் சென்றுவிட்டாள்..கார்த்திக்கிற்கோ இந்த ஒரு சூழ்நிலையில் தன்னவளின் அருகாமை அவனை பைத்தியமாக்கியிருந்தது..அவன் பார்வையின் கூடுதல் காதலைப் புரிந்தவளுக்கோ உடல் சிலிர்க்க ஆரம்பித்திருந்தது..கைநடுங்க உதடுதுடிக்க நீர் சொட்டும் தலையோடு நிற்பவளை பார்த்தவனுக்கு இதற்குமேலும் அங்கிருக்க தோன்றவில்லை..போலாம் சஹிம்மா..இதுக்கு மேலனா பித்தம் தலைக்கேறிடும் என்றவாறு அவளிடமிருந்து டவலை பெற்றுக் கொண்டு ட்ரைவர் இருக்கைக்கு செல்ல..சஹானாவிற்கு குளிரையும் தாண்டி கன்ன கதுப்புகள் சூடேறியது..

கார் பயணத்தில் சிறிது நேரத்திற்கு இருவருக்குள்ளும் மௌனமே மொழியாய் இருக்க அவ்வப்போதான பார்வை பரிமாற்றத்தோடு ஒவ்வொரு நொடியும் இம்சையாய் நகர வேறு வழித் தெரியாமல் சஹானா அவன் தோள்ளசாய்ந்து கண்மூட சற்று நேரத்தில் உறங்கியும் விட்டாள்..வீட்டினருகில் வந்து கார்த்திக் அவளை எழுப்ப அப்போதும்அவன் முகம் பார்க்கத் தோன்றாமல் சட்டென இறங்கி வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டாள்..கார்த்திக் மணியிடம் பேசிவிட்டு வருவதற்குள் உடைமாற்றி வெளியே வந்தவள் மணியோடு பேசுவதாய் காட்டிக் கொண்டு ஹாலிலேயே இருந்துவிட்டாள்..மாலை ஆறு மணியளவில் கார்த்திக்கிடம் வந்தவள் மாமா என மெதுவாய் அழைக்க ம்ம் என மெதுவாய் நிமிர்ந்தவனின் பார்வையில் இருந்த குறும்பே அவளை இன்னும் தடுமாறச் செய்தது..

அப்படி பாக்காத கார்த்திக்..

இது என்னடா கொடுமையா இருக்கு??என் பொண்டாட்டிய நா பாக்காம??

பாரு ஆனா அப்படியே கடிச்சு முழுங்குற மாறி பாக்காத என வாய்க்குள் முனக அதைப் புரிந்து கொண்டவன் சத்ததமாய் சிரித்தான்..

போதும் போதும்..கௌரி எங்கேயோ கடைக்கு போறேன்னு சொன்னா அது கொஞ்சம் தூரம் வேற மணி அண்ணா இல்ல நீ கூட்டிட்டு போய்ட்டு வாயேன் ப்ளீஸ்..எனக்கும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வர சொல்லிருக்கேன்..நீ கார்லயே இரு அவ வாங்கிட்டு வந்துருவா..

ம்ம் நா மட்டுமா நீயும் வாயேன் நீ இங்க என்ன பண்ண போற???

எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு மாமா..ப்ளீஸ்..நீ இப்படி என்ன மொறச்சுபாக்குறதே எனக்கு என்னவோ போல இருக்கு போய்ட்டு வா போ..என சிணுங்க..

அதற்குமேல் ஒன்றும்கூறாமல் கார் சாவிக்காக கைநீட்ட அவன் கைகளில் வைத்து அவள் நகர்வைதற்குள் ஆனாலும்என்ன ரொம்ப காயவிடுற நல்லதுக்கே இல்ல டீ பொண்டாட்டி என இதழ்மேல் இதழ்பதித்து ஓடிவிட்டான்..சட்டென அக்கம்பக்கம் பார்த்தவள் யாருமில்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு முகத்தை சரிசெய்து வாசலுக்குச் சென்றாள்..கௌரியிடம் கண்ஜாடை செய்தவள் தன்னவனுக்கு கையசைத்துவிட்டு உள்ளே சென்றாள்..

கௌரியோடு வந்து முக்கால் மணிநேரம் ஆகியிருக்க கார்த்திக்கிற்கு பொறுமை போய்விட்டது..இந்த பொண்ணு வேற நேரம்காலம் தெரியாம இன்னைக்குதான் கடைக்கு வருவாளா??சஹி என்ன பண்ணிட்டு இருக்காநு தெரிலயே..போன் வேற வீட்லயே வச்சுட்டு வந்துட்டேன்..அவளாவது குடுத்துவிட்டுருக்கலாம்..என எதையெதையோ நினைத்து பொழுதை கழிக்க கௌரி கடையிலிருந்து வெளியே வந்தாள்..அண்ணா இன்னும் ரெண்டே கடைதான் சஹானாக்கா ஒரு புக் கேட்டாங்க அதுமட்டும் வாங்கிட்டா வீட்டுக்கு போலாம்..ஸாரிண்ணா உங்களுக்கு வேற வீண் கஷ்டம்..

ஹே ச்சச்ச கஷ்டம்லா இல்லடா சஹி தனியா இருக்காளேநுதான் டென்ஷன் வேற ஒண்ணுமில்ல..நீ போய்ட்டு வா என அவள் கூறிய கடைவாசலில் காரை நிறுத்தினான்..அடுத்து அங்கு ஒரு அரைமணிநேரத்தை கஷ்டப்பட்டு கழித்துமுடிக்க வெளியே வந்த கௌரியோ போலாம்ண்ணா புக் நாளைக்குதான் வருமாம் வாங்க நாம வீட்டுக்கே போலாம்..ஒரு வழியாய் கிளம்பினால் போதும் என்று மேலும் பேச்சை வளர்க்காமல் வீட்டை நோக்கி கிளம்பினான்..

காரை நிறுத்திவிட்டு வந்தவனுக்கு ஒரு நொடி பயம் வந்துவிட்டது..ஒரு விளக்கும் எறியாமல் வாசல் கதவு ஜன்னல் என அனைத்தும் பூட்டியிருக்க என்ன செய்வதென புரியாமல் அடுத்த அடி வைப்பதற்குள் கௌரி அவனை தடுத்தாள்..

அண்ணா அண்ணா டென்ஷன் ஆகாதீங்க..இந்தாங்க என சாவியை அவன் கையில் கொடுக்க முதல்தடவையாய் ஏதோ சந்தேகம் எழுந்தது..

அண்ணா அண்ணா அப்படி பாக்காதீங்க சாரி சாரி நா வேண்டாம்நு தான் சொன்னேன் அக்காதான் கேக்கல..ஏதோ சர்ப்ரைஸ்நு சொன்னாங்க அதான் ஒத்துகிட்டேன்..நீங்க போங்க நா காலைல வரேன் என நிற்காமல் ஓடிவிட என்னவென்ற ஆர்வத்தோடு கார்த்திக் கதவைத் திறந்தான்..உள்கதவில் கைவைக்க தானாகவே திறந்தது..அடுத்த நொடி சஹானா பின்னிருந்து அவன் கண்களை மூட,

ஹே சஹி என்ன இதெல்லாம்? ?என்ன பண்ற நீ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.