(Reading time: 18 - 35 minutes)

இங்க பக்கத்துல இருக்குற கோவில்ல காலைலேயே பாட்டு போட்டாங்க மாமா அந்த சவுண்ட்ல எழுந்துட்டேன்..சின்ன வயசுலயிருந்தே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்..எப்போ சாங் சவுண்ட் கேட்டாலும் வாய்ல ப்ரெஷ்ஷோட போய் வெளித்திண்ணைல உக்காந்துருவேன்..காலை வேளை வெயிலும் அந்த பாட்டும் மனசுக்கு இதமாயிருக்கும்..

ம்ம் எல்லாத்துக்கும் ஒரு ப்ளாஷ்பேக் வச்சுருப்பியே சரி நீ காபி சாப்டியா??

நா சாப்ட்டேன் மாமா நீ எடுத்துக்கோ இன்னைக்கு என்ன ப்ளான்???

நீயே சொல்லு சஹி எங்கபோலாம்நு எனக்கு உன்கூட எங்க வர்றதுனாலும் ஓ.கே தான்..என கண்சிமிட்ட..

அதானே கிடைக்குற கேப்லலா கோல் போடுறியே கார்த்திக்..சரி நாம தென்காசி போய்ட்டு வரலாமா??கோவில் இருக்கு பக்கத்துலயே குற்றாலாம் என்ன சொல்ற??

வாவ் ஓ.கே ஒரு 15 மினிட்ஸ் குடு ரெடி ஆய்ட்டு வந்துட்ரேன் பட் மார்னிங் பூஸ்டர் எதாவது கிடைச்சா அதைவிட சீக்கிரமா ரெடிஆய்டுவேன் என கன்னத்தை காட்ட,

பரவால்ல நீ பொறுமையாவே வா நா வெயிட் பண்றேன் என்றவள் எழ எத்தனிக்க அடுத்த நொடி அவனின் கைச்சிறையில் இருந்தாள்..ஐயோ விடுமாமா..நாம கிளம்பினமாறிதான்..

ஒழுங்கா நா கேட்டத குடு விட்டுறேன்..லேட் பண்ண பண்ண பூஸ்டர் ரேட் ஏறிட்டேதான் இருக்கும் நா ஒண்ணும் பண்ணமுடியாது சஹிம்மா..

செல்லமாய் தன்னவனை முறைத்தவாறு அவன் கேட்டதை கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள்..அடுத்த இருபதாவது நிமிடம் தென்காசியை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்..போகும் வழியெங்கும் அத்தனை ரம்மியமாய் இருக்க அதனை இன்னும் மெருகூட்டுவதாய் இருந்தது அன்றைய வானிலை..மேகங்கள் மலைஉச்சியை உரச எந்த நேரமும் மழைத்துளி மண்ணை தழுவம் என்பது போன்ற காட்சி மனதின் தடுமாற்றமனைத்தையும் மறையச் செய்து நிம்மதியாக்கியது..

NS

NS

தென்காசியின் பிரம்மாண்டமான காசி விஸ்வநாதர் ஆலயம் கார்த்திக்கை பிரம்மிக்க வைத்தது..எந்தெந்த கோவில்களையோ கட்டிட கலைகளையோ புகழும் நமக்கு நம் தமிழ்நாட்டு வரலாறுகளை கவனிக்க நேரமில்லால் போய்விடுவதே வருத்தத்திற்குரிய விஷயம்..அவன் கண்களின் அர்த்தம் புரிந்தவள்,

வா மாமா உள்ள வா..இந்த கோவில் பாண்டியர்கள் காலத்துல கட்டினது..இங்க இருக்குற மூலவர் சுயம்புவா தோன்றினவர்நு சொல்லுவாங்க..தாயார் உலகம்மன்..இங்க இந்த சிவனை வழிபடுறது காசிக்கே போய் வழிபடுறதுக்கு நிகர்நு சொல்லுவாங்க..அந்தளவு முக்கியமான கோவில் இது.

உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கு சஹி..சௌத் சைட்ல இவ்ளோ இடங்கள்கோவில்கள் இருக்குநு தெரிஞ்சுருந்தா இத்தனை வருஷத்தை வேஸ்ட் பண்ணிருக்க மாட்டேன்..லவ்லி ப்லேஸஸ் டா..இனி எவ்ரி இயர் ஒருட்ரிப் போட்டு தமிழ்நாட்டுல உள்ள அத்தனை இடத்தையும் பாக்கனும்.

கண்டிப்பா மாமா…சரி வா உள்ள போலாம்..வியக்க வைக்கும் கட்டிடகலை  மனதிற்கு அமைதியாய் இயற்கைசூழல் என ஒவ்வொரு நொடியும் சொர்க்கமாய் இருந்தது இருவருக்கும்..சிவபெருமானை மனதார வேண்டிக் கொண்டு வெளியே வர கார்த்திக் சஹானாவிடம் இங்கிருந்து குற்றாலம் எவ்ளோ நேரம் ஆகும் சஹிம்மா இப்போவே 10 மணி ஆய்டுச்சு போய்ட்டு ரிட்டன் ஆக முடியுமா???

ஹா ஹா மாமா நீ சென்னைல இருக்கநு நினைச்சுட்டு இருக்கியா ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடம் 20 25 கி.மீ இருக்க..வெறும் 5 கி.மீதான் குற்றாலாம் வா போலாம்..

அவ்ளோதானா??ஹய்யோ இனி சும்மா சும்மா ஷாக் ஆகுறதா இல்ல எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்து மொத்தமா ஷாக் ஆகிக்குறேன் என கார்த்திக் பாவமாய் கூற இருவரும் அதை நினைத்து சிரித்தவாறே பயணத்தை தொடர்ந்தனர்..மழைக் காரைணமாய் மெயின் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருக்க ஐந்தருவிக்கு மட்டும் சென்று வந்தனர்..

NS

1.மெயின் அருவி..  

NS

2.ஐந்தருவி..

மதியம் மணி ஒன்றை தொட்டிருக்க மதிய உணவை முடித்துவிட்டு அடுத்ததாய் தென்காசியில் இருந்து 14 கி.மீதொலைவில் அமைந்துள்ள குண்டாறு அருவிக்குச் சென்றனர்..அங்கு அவ்வளவாய் கூட்டமில்லாமல் இருப்பதை கண்டவன்..

சஹிம்மா இங்க அவ்வளவா ஆளே இல்லேயேடா சேவ்தான??

அக்சுவலா இந்த இடத்தைப்பத்தி தெரிஞ்சவங்க மட்டும்தான் வருவாங்க மாமா..எல்லாருமே பொதுவா குற்றாலம்னா மெயின் பால்ஸ்,ஐந்தருவி,பழைய குற்றாலம் அப்படிதான் போவாங்க இதுபோகவே இங்க இன்னும் ரெண்டுமூணு பால்ஸ் இருக்கு..உனக்கு இந்த இடம் டக்குநு நியாபகம் வர வைக்கட்டுமா தர்மதுரை படத்துல எந்தபக்கம் போகும் போதும் சாங்ல ஹீரோ  வருவாரு அதுல பாத்தாலே உனக்கு தெரிஞ்சுருக்கும் ஆளே இருக்க மாட்டாங்க எந்த பால்ஸ்லயுமே அவ்ளோ மக்கள் இல்லாம பாக்க முடியாது..

ஓ..யா கரெக்ட் சஹிம்மா இப்போ ஐடன்டிப்வை பண்ண முடியுது..என்றவாறு அருவியை நோக்கி நடந்தவன் கண்களை மூடி அந்த குளிர் நீரின் பரவசத்தை தன்னுள் நிரப்பினான்..சட்டென கண்திறந்து பார்க்க சஹானா வெளியிலிருந்து அவனை பார்த்து சிரித்தவாறே நின்றிருந்தாள்..மென்னகையோடு தன்னவளை கைநீட்டி அழைக்க அவன் கைகோர்த்து அவனோடு இணைந்துநின்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.