(Reading time: 28 - 55 minutes)

ஆனால் அவன் விலகினால் தன்னுடல் மற்றவரின் காட்சி பொருளாகிவிடும் என்ற எண்ணத்தில் அவனை விலகவிடாமல் பிடித்து அவனுடன் ஒன்றினாள் அழகுநிலா.

தன் குரல் கேட்டதும் பதட்டத்துடன் அவளை விளக்க முயன்ற ஆதித்தின் செயலையும் ஆனால் அதற்கு அவள் விடாமல் அவனை இழுத்து அணைப்பதையும் பார்த்த வர்ஷா ஆதித்தை கோபத்துடன் பார்த்தாள்.

ஆதித்தோ, “பயத்துடன் தன்னிடம் ஒன்றும் வர்சாவின் நிலைமையை உணர்ந்து தன் நிலையை மாற்றாமல் அப்படியே நின்று கொண்டு,” சே.. சே... வார்சா நீ நினைக்கிற மாதிரி இல்ல என்று விளக்கம் கூறமுயன்றான், ஆனால் அவனின் வார்த்தையை கேட்காமல் யூ சீட் பிராடு, ஐ ஹேட் யூ... என்று கூறியபடி கண்ணீருடன் விறுவிறுவென நடையும், ஓட்டமும், அத்திரமுமாக ஓடி கதவை திறந்த வர்சாவிக்கு ஆதித்தின் வார்சா என்ற கத்தல் காதில் விழவேயில்லை. வெளியேறியவளின் மனது கொதித்தது. இத்தனை நாள் என் முன்னே மற்ற பெண்களை தொட்டு கூட பேசமாட்டேன் என்பதை போல் பாசாங்கு செய்திருக்கிறான் பாவி! எப்படி ஏமார்ந்து போய் இருந்திருக்கிறேன் என்றபடி வெளிவந்தவள் வாசலில் நின்ற டாக்சியை கையசைத்து அழைத்து அதில் ஏறி சென்றுவிட்டாள்.

ஆதித்துக்கோ வார்சா தான் சொல்ல வருவதை கூட கேட்கும் பொறுமை இல்லாமல் ஓடியது கோபமாக மாறி, பின் எல்லாம் இவளால் தான் என்று தன கையணைப்பில் நின்றிருந்த அழ்குநிலாவின் மேல் அது திரும்பியது .

தன்னை ஒட்டி நின்ற அழகு நிலாவை பிடித்து தள்ளிவிட்டான். கீழேவிழுந்த அழகுநிலா தன கையில் பற்றியிருந்த மொபைலுடன் கையால் கிழிந்த இடத்தை மறைத்துக்கொண்டே விழுந்தவளுக்கு அவமானமும் அதே நேரம் தன்னால் அவனுக்கும் அவன் காதலிக்கும் இடையில் பிரச்சனை வந்துவிட்டதே! என்ற குற்ற உணர்ச்சியுடன், ஆதித்.. என்று வர்சாவால் அழைக்கப்பட்ட தன்னை காப்பாற்ற முயன்ற ஆதித்தை விட்டு தனியாக அந்த மாலைவிட்டு கடக்க பயத்துடனும் மலங்க மலங்க..விழித்தாள்

அழ்குநிலாவின் தோற்றத்தை கண்டு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன், அவன் சர்டுக்கு மேலே போட்டிருந்த கோர்ட்டை கழட்டி தோளில் போட்டுகொண்டு அழ்குநிலாவின் அருகில் சென்று அவளின் கை பிடித்து எழுப்பிவிட்டவன் அந்த கோர்ட்டை அவளின் உடை மேலே போடச்சொல்லி கொடுத்தான்.

பின் கோபமாக அந்த ஷோரூமின் பில் செக்ஸனில் நின்று கொண்டிருந்த ஆளிடம் என்ன உங்க மாலில வந்து பர்சேஸ் செய்யவந்திருக்கும் பெண்ணை ஒருவன் துரத்திவருகிறான், நீங்கள் செக்யூரிட்டியை அலார்ட் பண்ணாமல் சும்மா நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்குறீர்கள்? என்று கர்ஜித்தான் .

அவ்வளவு நேரம் அங்கு நடந்து கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருத அவன், சாரி சர்! இதோ என்று போனின் மூலம் அவன் சொன்னது போல் செக்யூரிட்டி அலார்ட் செய்துவிட்டு தன கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இருவரையும் ப்ளுகலர் சர்ட் போட்டு இந்த லேடியை துரத்தி கொண்டு வந்தவன் லெப்ட் சைடு ஓடினான் போய் தேடுங்கள் என்று சொன்னான்.

அந்த ஸ்டாலின் லெப்ட் சைடு இருந்த கோல்ட் ஜுவல்லரி ஷாப் நரேனின் அப்பா பினாமி பேரில் வாங்கி நடத்தும் கடை. நரேன் ஆதித்தை பார்த்ததும் வேகமாக லெப்ட் சைடு இருந்த அவனின் கடைக்குள் சென்றவன் அதன் கல்லாவில் இருந்த அவனின் வேலைகாரனிடம் இரண்டு ஸ்டாலுக்கு அடுத்து இருக்கும் படிக்கட்டில் ஓர் லேடீஸ் ஹன்ட்பேக்கும் அதில் இருந்து சிதறிய பொருட்களும் இருக்கும் அதனை யாரும் பார்பதற்குள் அகற்றிவிடுமாறு கூறினான். பின் கடைக்குள் இருந்த பெர்சனல் அறைக்கு சென்று அவளின் துப்பட்டாவை ஒரு பையினுள் மறைத்து வைத்துவிட்டு தான் போட்டிருந்த உடையும் மாற்றிவிட்டு சிலிப்பரை கழட்டிவிட்டு ஷூ மாற்றிவிட்டு கண்ணாடியுடன் தனது ஹேர்ஸ்டைலயும் மாற்றிவிட்டு கொண்டான்.

அங்கு விரைந்து வந்த செக்யூரிட்டீஸ் அந்த மாலில் இருந்த மூன்று ப்ளுகலர் சர்ட் போட்டவர்களை காண்பித்து அவர்களா? என்று அழ்குநிலாவிடம் கேட்டனர், அவள் இல்லை என கூறியதும் ஆதித் மூன்றாம் ப்ளோரில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவினை பார்த்தால் அவன் எங்கு செல்கிறான் என்பதை கண்டுகொள்ளலாம் என கூறியதும் கேமரா கண்ரோலிங் அறைக்கு சென்று பார்த்தனர் ஆனால் மூன்றாம் தளத்தில் இயங்கிகொண்டிருந்த கேமரா மட்டும் ஒருமணிநேரத்திற்கு முன்பே ஆப் செய்துவைக்கப்பட்டிருந்தது

மேலும் அழகுநிலா தனது பேக்கும் அதில் இருந்த பொருட்களும் அங்கிருந்த படிக்கட்டுகளில் சிதரிக்கிடப்பதாக கூறியதும் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அப்படி எந்த பொருளும் அங்கு இல்லை. .

பின் எதுவும் செய்யமுடியாமல் பர்சை ஒருவன் திருட முயன்றதாக சொல்லி ஓர் கம்ப்ளைன்ட் மட்டும் ஆதித் அழ்குநிலாவின் சார்பில் எழுதிக் கொடுத்தான். பின் இருவரும் அந்த மாலின் வாசலுக்கு வந்தனர்.அங்கிருந்த செக்யூரிடியிடம் தனது காரை எடுத்து வரும்படி கூறி டோக்கனை கொடுத்தான் ஆதித்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.