(Reading time: 28 - 55 minutes)

காத்திருக்கும் வேளையில், ஆதித் தன கையில் இருந்த, வர்சாவிற்காக பில்போட்டு வாங்கிய நகைப் பையை வெறித்துப்பார்த்தான்.

அதனை பார்த்த அழகுநிலா குற்ற உணர்வுடன், சாரி... என்னால் தானே மேடம் உங்க கூட கோவிச்சுகிட்டு போய்டாங்க! சாரி சார்.... என்னை அவங்கிட்ட கூட்டிட்டுப்போறீங்களா? நான் நடந்ததை அவங்களிடம் சொல்கிறேன் என்று வருத்தத்துடன் கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதும், கோபத்துடன் ஏய்......! நீ உன் வேலையப் பார்த்துட்டு போ. இனி ஒருதடவை பிரச்சனையை இழுத்துகிட்டு என் முன்னால் வராமல் இருந்தாலே போதும். அதென்ன! அந்த இடத்தில் அத்தனை பேர் இருக்கும்போது என்கிட்ட மட்டும் உனக்கு ஹெல்ப் கேட்க தோனுச்சு என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? என்றவன், இனி உன் பிரச்சனையை நீயே பார்த்துக்கோ என்று சொல்லிக்கொண்டு இருக்கையில், அவனதுகாரும் வந்துவிட அவளை கண்டுகொள்ளாமல் வேகமாக அந்த காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தவன் காரை திருப்பும் பொது அவளின் தோற்றத்தைக் கண்டான்.

அவனின் கோர்ட் அவளின் முழங்காலுக்கு சற்று மேல் வரையும் சோல்டர் இரங்கி கை அவளது கையை முழுவதுவும் முழுங்கி அவளின் விரல்கள் தாண்டி நீட்டிகொண்டிருந்தத்தையும் கண்டான். மேலும் அந்த கலவரத்தில் அவளிடம் இருந்த பர்சும் தொலைந்ததால் அவளிடம் இப்பொழுது வீட்டிற்கு டாக்சி பிடித்து போகக் கூட பைசா இல்லை என தெரிந்தவனுக்கு, கலங்கிய அவள் முகம் கண்டதும் மேலும் அநாதரவாக ஏனோ அவளை விட்டுவிட மனது இல்லாமல் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கிவிட்டு அவளை வரச்சொல்லி கையசைத்தான் .

அவ்வளவு நேரமும் அவனின் காரையே வெரித்துப் பார்த்தவள் அவன் கையசைத்துக் கூப்பிட்டதும், அவன் அவளுக்கு உதவவே கூப்பிடுகிறான் என்பதை உணர்ந்துகொண்டடாள். எனவே அவளும் அவன் காரை நோக்கிச்சென்றாள்.

ஆனால் சற்று முன் அவன் அவளிடம் கடுமையாக் பேசியதால் இனி மேலும் அவனின் உதவியை பெற்று அவனுக்கு இடஞ்சல் தரக்கூடாது என்ற முடிவுடன் அவன் பேசுவதற்கு முன்னே, இல்ல சார்.. இதுவரை நீங்கள் எனக்குச் செய்திருப்பதே பெரிய உதவி இனி நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள் யாரோ ஒருத்தியான எனக்காக இனி சிரமப்பட வேண்டாம்! என கண்ணில் நீர் தேங்கிய விழிகளுடன் அவனிடம் கூறினாள்.

தன உதவியை அவள் மறுப்பதாக சொன்னதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனவே கொஞ்சம் பொறு. அதென்ன நீ பாட்டுக்கு உனக்கு உதவுவதற்காகத்தான் நான் கூப்பிடுகிறேன் என்று நீயாக முடிவெடுக்கலாம். நான் கூப்பிட்டது என் கோர்டுக்காக அதன் விலை தெரியுமா உனக்கு? எய்டீன் தவ்சன்ட் அதை வாங்கத்தான் உன்னை கூபிட்டேன். அதை தா..... என்று கை நீட்டினான்

இதை எதிர்பார்க்காத அழகுநிலா! அதை கழட்டினால் தன மானம் போகும் என்பதனை உணர்ந்து, வேண்டுமென்றே என்னை டீஸ் பண்ணுகிறான்! என்று சட்டென்று கோபத்துடன் தன் கையில் போட்டிருந்த தங்க வளையலை கழட்டி அவனிடம் நீட்டினாள்.

அவள் தன்னிடம் நீட்டிய வளையலை பார்த்தபடி எனக்கு வளையல் போடும் வழக்கம் எல்லாம் கிடையாது! என்னை பார்த்தால் உனக்கு பொம்பளை மாதிரி தெரியுதா? என்றான்.

அவனின் சீண்டலில் துடுக்குத்தனமாக பேசமுயன்ற நாவை அடக்கி, மனதினுள் அவன் உனக்கு இருதடவை பெரிய ஆபத்தில் உதவியவன், அதனால் அவனின் பேச்சை பொறுத்துக்கொள் என்று மனதினுள் சொல்லியபடி... வெளியில்

சாரி சார்! நீங்கள் என் மானத்தைக் காக்க கொடுத்திருக்கும் இந்த கோர்ட்டின் மதிப்பு உங்களுக்கு வெறும் பதினெட்டாயிரம் தான்! ஆனால், எனக்கு இந்த கோர்ட் என் உயிருக்கும் மேலானது. ஆதனால் என்னால் இதை இப்பொழுது கொடுக்க முடியாது

இதற்கு ஈடாக எனது இந்த மூன்று பவுன் தங்க வளையலை உங்களுக்கு கொடுக்கிறேன் உங்களின் முகவரி கொடுங்கள் என் ஹாஸ்டலுக்குப் போனபிறகு இதை மாற்றிவிட்டு துவைத்து இஸ்திரி போட்டு உங்களிடம் சேர்த்துவிடுவேன் என்றாள்.

அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஆதித் காரின் தனக்குப் பக்கத்து சீட்டின் கதவை எட்டி திறந்தவன் அவளை பார்த்து அந்த சைடு வந்து ஏறு.. என்று கூறினான்.

நான்தான் எனக்கு உங்க உதவி இனி தேவையில்லை என்கிறேனே! பிறகு என்ன சார் உங்களின் காரில் ஏறச் சொல்கிறீர்கள்? என்றாள் அழகுநிலா

உடனே அதுதான் இனி என் உதவி உனக்குத் தேவையில்லையே! பிறகு எதற்கு என் கோர்ட் உனக்கு. இந்த மாலுக்குள் திரும்ப காரை பார்க்பன்னி போய் உனக்கு டாப் வாங்கணும் என்றால் விடிந்துடும் பக்கத்தில் இருக்கிற ரெடிமேட் கடைக்கு கூட்டிட்டு போறேன், அங்க உனக்கு ஒரு டாப் வாங்கிகொண்டு டிரையல் ரூமில் மாற்றிவிட்டு என் கோர்ட்டை எனக்கு கொடுத்திடு நான் பாட்டுக்கு என்வழியில் போறேன் நீ உன் வழியில் போ...... என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும், அந்தப்பக்கம் வந்து காரில் ஏறியவள் கதவை அறைந்து மூடினாள். பின் ஆதித்திடம் டாப் வாங்க என்னிடம் காசு இல்லை எனவே அவள் கையில் வைத்திருந்த வளையலை டேஸ் போர்டின் மேல் வைத்தவள் இதை வைத்துக்கொண்டு டாப்பிற்கான பணத்தை நீங்களே கொடுத்துவிடுங்கள் ஸார் என்று கூறினாள்.

கார் புறப்பட்டு சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். நம் அழ்குநிலாவினால் அந்த அமைதியை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.