(Reading time: 28 - 55 minutes)

அவள் அவ்வாறு சொன்னதும் எப்பா..... என்ன வாய் இவள பெத்தாங்களா? அல்லது செஞ்சாங்களா? என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியில் கெத்தாக முகத்தை வைத்துக்கொண்டு அவளை மிதப்பமாக் ஓர் பார்வை பார்த்தபடி, என் ரேஞ்சுக்கெல்லாம் உன்க்கு உதவி செய்றேன்னு என் அருகில் நிற்க்கவைத்ததே பெரியதப்பு. இதுல வாங்க, போங்கனு மரியாதையா வேறு சொல்லணுமோ? சரிதான் போடீ... என்று கூறினான் கடைசியாக சொன்ன போடி என்ற வார்த்தையை மட்டும் சவுண்டு இல்லாமல் அவளின் முன் உதடு அசைவில் புரிந்துகொள்ளுமாறு தெளிவாக கூறினான்

அவன் அவ்வாறு கூறியதும் கோபத்துடன் அவனை கொதிக்கும் உள்ளத்தோடு முறைத்துப் பார்த்து திட்ட போகையில், காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

அவள் கோபத்தில் அவனின் முகத்தை முறைத்துப் பார்க்கையில் அவள் எதிர்பாராமல் போட்ட பிரேக்கினால் அவள் முன்னால் உள்ள டேஸ் போர்டில் இடிக்கிற மாதிரி போய் ஸ்தம்பித்து, அவன் முகத்தை பார்த்ததும் கடை வந்துருச்சு இறங்கு என்றபடி டோரை திறந்து அலட்ச்சியமாக இறங்கினான்.

ஜானகி தன மகன் தன்னிடம் கொடுத்த செக்கை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தால் உள்ளே வந்த வேலாயுதம் தான் வந்ததை கூட கவனிக்காமல் கையில் ஏதையோ வைத்து பார்த்துக்கொண்டிருந்த ஜானகியின் அருகில் வந்து அமர்ந்தார்

பக்கத்தில் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்த ஜானகி வந்துட்டீங்கலா...? எனக்கு உங்க கார் சத்தம் கேட்கவே...! இல்லையே.! என்றாள்.

அவர் அவளின் கையில் இருந்த செக்கை தன கையில் வாங்கிக்கொண்டே நீதான் இதை பார்த்துக்கொண்டு ஏதோ நினைப்பில் இருந்ததால் என் கார் ஆரன் சத்தம் உனக்கு கேட்கவில்லை என்றார். .

அந்த செக்கை பார்வையிட்டவர் என்ன ஆதித் பிஸ்னஸ் ஆரம்பிக்க கொடுத்த பணத்தை திருப்பி கோடுத்துட்டானேன்னு வருத்தமா இருக்கா...? என்று கேட்டபடி ஜானகியின் கரத்தை ஆதரவுடன் பிடித்தார்.

அவன் கடைசிவரை இப்படி ஒதுங்கியே இருந்துருவானோன்னு பயமா இருக்குதுங்க, நம்மள அவன் ஏத்துக்கவே மாட்டானா? என்று வருத்தத்துடன் கேட்டாள் ஜானகி

நீ வருத்தப்படாத ஜானகி அவனுக்கு நம்மமேல் அன்புயில்லாமல் இல்லை. ஆனா நான் செய்ததை அவனால் ஏத்துக்க முடியல. உன் வளர்ப்பு அவன், அதனால் தான் தப்புசெய்தது தகப்பன் சாமியே ஆனாலும் அதை அவனால் தண்டிக்காமல் விட முடியல. இதுவும் கடந்து போகும், நீ இப்படியே இத நெனச்சுக்கிட்டே இருந்தா டிப்ரஷன் தான் ஏற்படும், வா எனக்கு பசிகுது உன் கை சாப்பாட்டை சாப்பிட்டு ஒருமாசம் மேல ஆச்சு சாப்பிட்டுவிட்டு அடுத்த வாரம் வருகின்ற ஆதித்தின் பிறந்த நாளுக்கு அவனுக்கு உடையும் ஏதாவது பரிசும் வாங்கிவரலாம் என்றார்.

அவர் பசிக்குது என்ற உடனேயே சுறுசுறுப்பானவள், வாங்க நான் வேற வந்த மனுசரை கவனிக்காம பசியோட உட்காரவச்சுட்டேன், நீங்க வருவீங்கன்னு போன் பண்ணியதால உங்களுக்கு பிடிச்சதா சமச்சு வச்சிருக்கேன் என்றபடி டைனிங் டேபிளுக்கு சென்று அவர் தட்டை எடுத்து வைத்தவள் நான் ரெடியாத்தான் இருக்கேன் நீங்க சாப்பிட்டதும் போய் ஆதித்துகு பிறந்தநாள் உடை எடுத்துவரலாம் என்றபடி அவருக்கு பார்த்து பார்த்து அருகில் உட்கார்ந்து பரிமாறினாள்.

சாப்பிட்டு முடித்ததும் என்னங்க இப்பத்தான் வந்தீங்க உடல் அசதியாக இருக்கும் நாளைக்கு கடைக்கு போகலாமா..? என்று கேட்டார் ஜானகி

அவள் அவ்வாறு கூறியதும், இதுதான் ஜானகி, இந்த அக்கறைதான் ஜானகி என்னை இன்னும் உயிர்ரோட வச்சுருக்கு என்றவர், என்னை சுற்றி இருக்கிறவங்க தேவையை பூர்த்தி பண்ணவே என்னை கொண்டாடுறாங்க. ஆனா! நீ மட்டும் தான் என்னோட தேவை அறிந்து எனக்காக எல்லாம் பண்ற என்றார்

பின் டையர்ட்ஆகத்தான் இருக்கு ஆனாலும் இந்த தடவ என்னால் ரெஸ்ட் எடுக்க நேரம் இல்லாமல் வேலையையும் இழுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறேன். நாளைக்கு உன்னை வெளிய கூப்பிட்டுபோக நேரம் இல்லாமல் போய்விடும் அதனால் ஒருமணிநேரம் குட்டி தூக்கம் போட்டுட்டு வருகிறேன் மதியம் சாப்பிட்டு கிளம்பலாம் என்று கூறியபடி சற்று படுத்ததெழுந்து சாப்பிட்டு இப்போவே போகலாம் என்றவர் ஜானகியுடன் அந்த ஜவுளிகடைக்கு வந்தார்.

அவர்கள் உள்ளே நுழைந்து ஆண்களுக்கான ஆடைபகுதிகுப் போய் உடை எடுத்துவிட்டு வெளியில் வரும் போது கீழே இருந்த பெண்களுக்கான் உடை பகுதியில் ஆதித்தை பார்த்த ஜானகி அவனுக்கு ட்ரெஸ் பிடிச்சிருக்கா என்று கேட்டுவிடலாம். பிடிக்கவில்லை என்றால், இப்போதே மாற்றி எடுத்துவிடலாம் ஆனால் இவன் எதற்கு பெண்கள் உடை பகுதியில் நின்றுகொண்டிருகிறான் என்று நினைத்தபடி, நம்ம ஆதிங்க! வாங்க என்று அவரையும் கைப்பற்றி இழுத்தபடி அவனை நோக்கி வந்தாள்.

அப்போது டிரையல் ரூமினுள் சென்று புது டாப்பை உடுத்திக்கொண்டு ஆதித்தின் கோர்ட்டை கழட்டி கையில் வைத்துக்கொண்டு ஆதித்திடம் வந்தவள் இந்தாங்க உங்கள் கோர்ட் என்று கொடுத்தாள் ஆழகுநிலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.