(Reading time: 10 - 19 minutes)

பின்வரும் நாட்களில் அவனது கை அணைப்பில் படுப்பதே கவியின் வாடிக்கையாக மாறி போனது.நாட்கள் வேகமாக செல்ல அவள் கல்லூரி செல்லும் நாளும் வந்தது.அவளுக்கு

திருமணம் ஆகி கல்லூரிக்கு செல்வது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

அவள் கல்லூரிக்கு செல்லும் அன்று பர்வதம்மாள் அவளை சேலை கட்ட சொல்ல அதுபோல அவளும் சேலை கட்டி இருந்தாள்.

தனது அலுவலகத்திற்கு கிளம்பி வந்தவன் அவள் சேலை கட்டி கிளம்பி இருப்பதை பார்த்தவன் கல்லூரி செல்வதற்கு எதற்கு சேலை கட்டி செல்கிறாள் என்று யோசித்தவன் அதை அவளிடமே கேட்க அவள் பாட்டி தான் கட்ட சொன்னார் என்று அவள் சொன்னாள்.

“நீ அதையெல்லாம் கட்டிகிட்டு போக வேண்டாம் போய் சுடிதார் மாத்திட்டு வா..,நானே உன்ன ட்ராப் பண்ணிட்டு வந்துடுறேன்..”என்று அவன் கூற

அவள் யோசித்துக் கொண்டே நின்றாள்.

“என்ன கவி யோசிக்குற..போ..”என்று அவன் மீண்டும் கூற அவள் தயங்கி நிற்க

“பாட்டி ஒன்னும் சொல்ல மாட்டாங்க நான் பார்த்துக்குறேன்..”என்று கூறியவன் அவள்  அங்கேயே நிற்க”கவி நீ புடவையில போனா உன்னால கிளாஸ்ல கவனம் செலுத்த முடியாது..,சொல்றத கேளு..”என்று அவன்  மீண்டும் கூற அவள் சுடிதாருக்கு மாறி வந்தாள்.

அதற்குள் அவன் தனது பாட்டியிடமும் அதைப் பற்றி பேசிவிட்டு வந்தான்.அவர்கள் இதைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்கக் கூடாது  என்று  அவன் கூறியதால் அவரும் அவளிடம் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை...

அஸ்வினே கவியை  கல்லூரியில்  விட சென்றான்.மாலை அவளை அவனே  அழைத்தும் வந்தான்.இதுவே தினமும் வாடிக்கையாகி போனது...

அவனை ஒரு குழந்தைப் போல் சுற்றி சுற்றி வந்தாள் கவி.அது அவர்களிடையே இருந்த இடைவெளியை குறைக்க செய்து ஒருத்தர் மற்றொருத்தரை பற்றி தெரிந்துக் கொள்ள வழிவகுத்துக் கொடுத்தது.

ஆனந்தியும்,பர்வதம்மாளும் அவளை குறை கூறிக் கொண்டிருந்தாலும் மற்றவர்கள் அவள்

 மீது காட்டிய அன்பால் அது அவளுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை.

அஸ்வின் உடனான அவளது வாழ்க்கை தெளிந்த நீரோட்டத்தைப் போல எந்தவித பிரச்சனை இன்றி நன்றாக சென்றுக் கொண்டிருக்க நாட்களும் வேகமாக செல்ல  ஆரம்பித்தது.

அவளது வாழ்க்கையை  திசை திருப்ப காரணமாக அமைய போகும் விதி அவளது அன்னையின் டைரி வடிவில் அவளை நோக்கி வந்தது...

கடைசி செம் ஸ்டடி ஹாலிடேஸ் விட்ட அன்று அவளது கல்லூரிக்கு அவளது குண்டு அத்தை சாந்தி அவரது மகனுடன் அவளைப் பார்க்க வந்திருந்தார்.

அவளை நலம் விசாரித்து கொஞ்சியவர்,அவளது திருமணம் குறித்து கேள்விப்பட்டு அவர் வருந்தினாலும் அவனை பற்றி கவி எடுத்துக் கூறியதும் மகிழ்ந்தவர் அவளை ஆசிர்வதித்து அவளது அன்னையோட டைரி ஒன்று கவி வீட்டை விட்டு வந்த பின்பு அவர் அந்த வீட்டை சுத்தம் செய்யும்பொழுது கிடைத்ததாகவும் அதை அவர் பலமுறை கொடுக்க நினைத்தும் கொடுக்க முடியவில்லை என்றும் இப்பொழுது அவர் தனது மகனுடன் ஆஸ்திரேலியா செல்வதால் அதை அவளிடம் கொடுத்ததாக கூறினார்.

அதை வாங்கிக் கொண்டவள் அவருக்கு பிரியாவிடைக் கொடுத்து வழி அனுப்பி வைத்தாள்.

அதை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டிற்கு அவள் வரும்பொழுது வீட்டில் யாருமே இல்லை..,சதிஷும்,நித்தியும் வெளியே சென்றிருக்க,வீட்டில் இருந்த மற்ற அனைவரும் ஒரு விஷேஷத்திற்கு சென்றிருந்தனர்.

அதனால் கவி மட்டுமே வீட்டில் இருந்தாள்.

தனது அறைக்கு சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தாள்.வந்தவள் ஹாலில் அமர்ந்து டீவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.சிறிது நேரத்திலேயே காலிங் பெல் அடிக்க கதவை திறந்துப் பார்த்தாள்.

வெளியில் நடுத்தர வயது உடையவரும் அவருடன் ஒரு பெண்ணும்,இளைஞனும் வந்திருந்தனர்.

அவர் அவளை  பார்த்து விட்டு சந்தேகத்துடன் சரியான வீட்டிற்கு தான் தான் வந்திருக்கிறோமா  என்று அவர் யோசனையுடன் பார்க்க இவளே அவர்களிடம் பேச்சு கொடுத்தாள்

“சொல்லுங்க சார், உங்களுக்கு யாராப் பார்க்கணும்....” என்று கவிக் கேட்க

“இது ஜனார்த்தனன் சார்  வீடுதான..”என்று அவர் கேட்க

“ஆமாம் சார்,இது அவர் வீடு தான் தாத்தாவப் பார்க்க வந்திங்களா..,வீட்டுல எல்லாரும் ஒரு விஷேஷத்திற்கு போயிருக்காங்க..,நீங்க வாங்க உள்ள போய் உட்கார்ந்துப் பேசலாம்..”என்றுக் கூறியவள் அவர்கள் பெட்டியை அவர்களது வீட்டில் வேலை செய்பவரிடம் கூறி விட்டு அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

மூவரையும் ஹாலில் உள்ள சோபாவில் அமரவைத்தாள்.அவர்கள் குடிக்க தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்துவிட்டு

“என்ன சாப்பிடுறீங்க சார்..,உங்களுக்கு என்ன கொண்டுவரட்டும்...,ஜூஸ் இல்லைனா டீ..,எதுக் கொண்டு வரட்டும்...”என்று அவள் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.