Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

வனை தேற்றி வழி அனுப்பி விட்டு வந்தவளை கை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள் குணாவின் தாய். அவள் கையில் ஒரு சங்கிலியை கொடுத்தவள் "இது குணா எனக்கு செஞ்சு போட்ட அஞ்சு பவுன் தங்க சங்கிலி, நீ போட்டுக்கோ, இதைத்தவிர வேற எதுவும் என்கிட்டே இல்ல உனக்கு கொடுக்க" என்று ஆசையுடனும், வருத்தத்துடனும் சொல்ல

புன்னகைத்த சுந்தரியோ "இதை அவரு உங்களுக்கு எவ்வளவு ஆசையா போட்டிருப்பார், நீங்க போட்டுக்கோங்க அத்தை" என்று அவள் கழுத்தில் போட வர "ஐயோ வேண்டாம்மா, இது என் கழுத்தில் போட்டேன்னா மறு நிமிஷம் இது நம்ம கை விட்டு போயிரும், ஏதாச்சும் செஞ்சு குணாவையே அக்காக்கு கொடுத்திடுமான்னு சொல்ல வெச்சிருவாங்க, இதை அவன் என் கிட்ட கொடுத்த நாள்ல இருந்து என் கழுத்துல போட்டதே இல்லை

அதிர்ச்சியாய் பார்த்த சுந்தரி "அத்தை" என்று மட்டும் சொல்ல

"கண்கள் கலங்க எனக்கு ஒரே ஒரு சத்தியம் செஞ்சு தருவியா?" என்று கேட்டாள் குணாவின் தாய்.

என்ன சத்தியம்?

உன் ஆயுசு இருக்க வரைக்கும் என் குணாவை நல்லபடியா பொறுப்பா பார்த்துக்கணும். அவனுக்காக நீ எதை வேணும்னாலும் விட்டு கொடுக்கலாம்  மா  அவன் அவ்வளோ நல்லவன் தெரியுமா  ? ஆனா அவனை மட்டும் விட்டுக்கொடுத்திடாத என்று கண்கள் கலங்க

என்ன அத்தை நீங்க? இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கோபம் கொண்டவளை ஏமாற்றமாய் பார்த்த குணாவின் தாயிடம்  கழுத்தை நொடித்துக்கொண்டு "என் புருஷன் மேல என்னைத் தவிர வேற யாரும் நிறையா பாசம் வெக்கிறது எனக்கு பிடிக்கல அது அவரை பெத்த அம்மாவா இருந்தாலும் சரி" என்று சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்க செல்ல நிம்மதியாய் இருந்தது குணாவின் தாய்க்கு. சற்று நேரம் கழித்து தன் மாமியாருக்கு உணவை பரிமாறியவள்

அவளது கையை பிடித்து "என் புருஷனுக்காக நான் எந்த உறவையும் இழக்க தயங்கமாட்டேன் ஆனா எதுக்காகவும் யாருக்காகவும் என் புருஷனை இழக்க மாட்டேன்" என்று சத்தியம் செய்ய அவளை உச்சி முகர்ந்தாள் குணாவின் தாய்.

அதன்பிறகு எப்போதும் போல் வாயில்லா பூச்சியென குணாவின் தாய் இருக்க, வாயிருந்தும் பூச்சியாய் இருக்க சுந்தரி முயற்சி செய்து கொண்டிருந்தாள். என்ன தான் முயற்சி செய்த போதும் அவன் சகோதரிகளோ இவளிடமும் வம்பிழுக்காமல் இல்லை. ஏற்கனவே சித்தி கொடுமை என்று வெளியே கிளப்பி விட்டிருக்க  குணாவின் பெரியம்மா இறந்த பிறகு அவன் தாயையை நன்கு அறிந்தவர்களோ அதை மனதோடு மட்டுமே வைத்துக்கொண்டு அவர்கள் சொன்ன பழி சொற்களுக்கு செவி சாய்த்தனர். யார் அவளுக்கென பேசி இவர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வதாம்?

 கணவன் மனம் நோகக்கூடாதே என்று எண்ணியே சுந்தரியும்  வாய்மூடி இருக்க, ஆறு மாதங்கள் கழித்தே சுந்தரியைக் காண வந்தான் குணசேகரன். மணந்த பத்தே நாளில் அவளை தனியே விட்டு சென்ற குற்ற உணர்வு ஒரு பக்கம் இருக்க என்ன பூகம்பங்கள் எல்லாம் கிளம்ப போகிறதோ என்ற எண்ணத்தோடும் அவன் வீட்டு வாசலில் காலடி எடுத்து வைக்க, அவன் மூத்த சகோதரியோஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள்  வாய் மூடி அவளுக்கு சேவகம் செய்துகொண்டிருந்த சுந்தரியை காண "சுருக்" என்று தான் இருந்தது குணாவிற்கு. குணாவை கண்டதும் இன்னும் புலம்பல் அதிகரிக்க தாய்க்கும் தாரத்திற்கும் என வாங்கி வந்தவையும் அவள் கைகளில் திணிக்கப்பட்டன. "சரி சரி என் தம்பி வந்திருக்கு வக்கணையா சமைச்சு போட்டு அப்படியே உன் அண்ணனுக்கும், பசங்களுக்கும் கொடுத்தனுப்பு நீயே முழுங்கிறாத" என்று சொல்லிவிட்டு செல்ல சுறு சுறு என்று ஏறியது சுந்தரிக்கு, இருந்தும் அவன் முன் கோபத்தை காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்தாள். தர்மசங்கடமாய் நின்றிருந்த கணவனுக்கு வெந்நீர் வைத்து கொடுத்து குளித்து வர சொல்லிவிட்டு அசைவ உணவை தயார்  செய்து அவன் சாப்பிடும் வரை ஏதும் பேசாத சுந்தரியிடம்  அவன் பேச நினைக்க அவளோ நீங்க முதல்ல சாப்பிடுங்க என்றதோடு அவ்விடம் விட்டு அகன்றத்திலேயே அவளது கோபத்தின் அளவு புரிந்தது குணாவிற்கு, எப்படியும் என்ன நடந்தது என்பதை தாய் சொல்லப்போவதில்லை இவள் சொல்வாளா? என்ற எதிர்பார்ப்போடு இருந்தான் குணா. ஆனால் அவன் எதிர்பார்ப்பு பொய்யாய் போனது அவள் வாய் திறக்கவே இல்லை.

எப்போதும் போல் அவனுக்கு நடந்தவற்றை சொன்னார் அந்த பக்கத்து வீட்டு முதியவர், அவர் சொன்ன "உனக்கு மட்டும் எப்படிடா இப்படி அமையுறாங்க, உன் அம்மா தான் இப்படி ன்னா உன் பொண்டாட்டி அதுக்கு மேல இருக்கா, இதே வேற ஒருத்தியா இருந்திருந்தா இந்நேரம் நீ நிக்க வேண்டிய இடம் இதுவா இருந்திருக்காது, பொறுமைசாலிதாண்டா உன் பொண்டாட்டி" என்ற போது உள்ளம் குளிர்ந்தது தான் ஆனாலும் அத்தனையும் அவள் தனக்காக செய்திருக்கிறாள் அவள் நேசத்தின் ஆழத்தை காட்டியாகி விட்டது தான் எவ்வாறு தன் நேசத்தை அவளுக்கு உணர்த்துவது என்று கலங்கத்தான் செய்தான்  குணா.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையாDevi 2017-12-16 20:16
Super update Prema :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையாsaaru 2017-11-02 15:31
Nice update prema
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையாmadhumathi9 2017-10-28 19:57
:clap: haha patti thool kilappuraanga. Super epi. Waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையாAdharvJo 2017-10-28 19:18
Kilinja thechi kudungala kelv's eppo enama pesuringa anda Horlicks kudichingalo :dance: patty sema podu poduringa ungalukk poi ippadi dil facepalm interesting update ma'am engarndhu pidichinga indha beauty-a :D anyway ivanga ketta sweets Ellam.kudunga adutha epi LA sandhipom BTW Mr kadhir too much pulambing konjam pacify panunga....sundari chance a illa :hatsoff: :thnkx: for this cute ma'am (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையாTamilthendral 2017-10-28 18:32
Good update (y)
Super paatti :clap:
Guna, Sundari-kaga enna seyyapora :Q:
Kathir fb therinjukka waiting.. kathir appa ammaku idaiyil enna prachanai :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையாAarthe 2017-10-28 11:46
Nice update ma'am :-)
Rendu track pogudhu :-?
Can't correlate both may be poga poga ll get the flow :D
Kadhir oda wife dhaan ilamadhi oh :Q:
Waiting to read more :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையாJansi 2017-10-28 11:20
Nice epis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையாAnubharathy 2017-10-28 08:17
Super epi mam. And paati super ah pesuraanga. Waiting to read more mam
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top