(Reading time: 11 - 21 minutes)

ந்த ஒரு விஷேஷமோ, பண்டிகையோ அனைவரும் சேர்ந்து தான் இருப்பர்.. அண்ணன் தங்கைக்களுக்கிடையே அன்பும் பாசமும் அளவில்லாமல் இருக்கிறது.. அவர்களின் பிள்ளைகள் ஒன்றாகவே வளர்ந்து ஒற்றுமையுடனே இருக்கின்றனர்.. புகழேந்தியின் மகள் மலர்க்கொடியும், கலையரசியின் மகள் மணிமொழியும் கிட்டத்தட்ட ஒத்த வயது உடையவர்கள் என்பதால் நல்ல தோழிகளாகவே இருப்பர்.. மகியும் அறிவும் அதே போல தான், இதில் அருள்மொழி அவர்கள் நால்வரை விட சிறியவள் என்பதால் அவள் வயதுக்கு ஈடாக யாருமில்லையென்றாலும், அவள் எப்போதும் மகி, அறிவழகனோடு தான் சேர்ந்திருப்பாள்.. அத்தை மகன்களாக இருந்தாலும், வாடா போடா என்றும் பேசும் அளவுக்கு அவர்களுடன் நட்பாக இருப்பாள். பின் பருவம் அடைந்ததும் பூங்கொடியும் கலையரசியும் சொல்லி தான் வாடா போடாவை தவிர்த்து, அவர்களை பேர் சொல்லி அழைக்க ஆரம்பித்தாள்..

அறிவின் தங்கை இலக்கியா விடுமுறைக்கு வந்தால் அப்போது அருள்மொழியும் அவளும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருப்பார்கள்.. இதில் எழிலரசியின் மகன்கள் இவர்களையெல்லாம் விட வயதில் மிகவும் சிறியவர்கள் என்றாலும், அவர்களும் இவர்கள் அனைவரோடு தான் சேர்ந்திருப்பார்கள்.. அவர்கள் வீட்டுப் பக்கத்தில் அந்த வீட்டின் அளவைப் போல் ஒரு கிரவுண்ட் காலி நிலம் உள்ளது.. அந்த நிலம் புகழேந்தி தன் தங்கைகளுக்காக வாங்கிப் போட்டது… இருவருக்கும் தேவைப்படும் போது அதை எடுத்துக் கொள்ளட்டும் என்று காம்பவுன்ட் சுவர் எழுப்பி அதை பராமறித்து வருகிறார்..

அந்த நிலத்தில் தான் மகியும், அறிவும் கிரிக்கெட் விளையாடுவர், கூட அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள அவர்களின் நண்பர்களும் விளையாடுவர், சில சமயங்களில் அந்த வீட்டு பெண்பிள்ளைகளும் மகி அறிவோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவர்.. விடுமுறை தினங்களில் அனைவரும் கூடினால், ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.. பாட்டுப் போட்டி விளையாடலாம் என இரு அணிகளாக பிரிந்து அவர்களுக்கு தெரிந்த பாடல்களை பாடி ஒருவருக்கொருவர் தீவிரமான போட்டி நோக்கத்தோடு பாடிக் கொண்டிருப்பர்.. ஓரளவுக்கு அவர்களுக்கு தெரிந்த பாடல்களை பாடியப் பின், பெரியவர்களின் உதவியை நாடுவர். பிள்ளைகளுக்காக தங்களுக்கு தெரிந்த பாடலை சொல்லிக் கொடுத்தப்படியே இருப்பவர்கள், பின் சகஜமாக அவர்களும் ஆட்டத்தில் சேர்ந்துக் கொள்வர்..

இப்படி மகிழ்ச்சியாக இருக்கும் இவர்களுக்குள்ளும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படும், இருந்தும் அதை பெரிதாக்காமல் பிரச்சனைகளை முடித்துவிட தான் பார்ப்பார்கள்.. அதுவும் பெரியவர்களுக்கிடையே தான், சிறியவர்கள் என்றும் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர் இன்று வரையும், சிறுவயதில் கூடி விளையாடி மகிழ்ந்த அவர்கள், இப்போது படிப்பு, வேலை, திருமணம் என்ற கூடுதல் பொறுப்புகள் வந்திருந்தாலும், இன்னும் அவர்கள் ஒன்று சேர்ந்தால், கொண்டாட்டமும் கும்மாளமும் தான்..

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த அந்த பாடலில் வரும் வரிகளை போல் தான் அவர்கள் மகிழ்ச்சியில் தேய்பிறை என்றும் இல்லை.. ஆனால் உறவாய் வந்த ஒருத்தியின் மூலம் அவர்கள் மகிழ்ச்சியின் அஸ்திவாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது..

குடும்பத்தில் ஒருத்தியாய் வந்தவளை உறவென்றும் ஏற்க முடியாமல், யாரோ என்று ஒதுக்கவும் முடியாமல், இரக்கத்தோடு அவளை ஆதரித்தனர்.. ஆனால் அவளால் சில சங்கடங்கள் நேர்ந்தபோது, அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் நேராது, அனைத்தையும் சரி செய்திடுவோம் என்று இதோ இந்த நிச்சயதார்த்தத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர்..

உண்மையிலேயே இந்த நிச்சயதார்த்தம் அவர்களுக்கு நேர்ந்த சங்கடங்களை சரி செய்திடுமா?? அனைவரின் மனதிற்கும் மகிழ்ச்சியை கொடுக்குமா?? இல்லை இதனால் இன்னும் பிரச்சனைகளும் சங்கடங்களும் வர காத்திருக்கிறதா??

 

உறவு வளரும்...

Episode # 02

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.