(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 19 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

ஹலோ friends, மறுபடியும் நானே, மிக நீங்க இடைவெளிக்குப் பிறகு..... மாமனார் உடல்நிலை மோசமடைந்து போன மாதம் தவறி விட்டார்..... அதனால் என்னால் கடத்த இரண்டு மாத காலமாக சரிவர அப்டேட்ஸ் கொடுக்க முடியவில்லை.... very sorry for that..... இனி வேறு எந்த தடைகளும் வராமல் ஒழுங்காக அப்டேட் கொடுப்பேன் என்று நம்புகிறேன்.... கதையை நீங்கள் எல்லாம் இன்னும் மறக்கவில்லை என்ற நம்பிக்கையுடன் தொடருகிறேன்.... நன்றி

தான் மெசேஜ் அனுப்பி இன்னும் பத்து நிமிடங்கள் ஆகவில்லையே, அதற்குள் எப்படி மதி வந்திருக்க முடியும் என்று யோசித்தபடியே பாரதி தொடர்ந்து அங்கு நடப்பதை ரெகார்ட் செய்து கொண்டிருந்தாள்.....

“மயிலு நீ போய் அந்த ஜன்னல் வழியா யாரு வந்திருக்காங்கன்னு பாரு....”,சாரங்கன் கூற, ‘மயிலா’ இவன் யாரைக் கூறுகிறான் என்பதுப்போல பார்த்தாள் மயூரி..... உள்ளறையில் பாரதி ‘இந்த ரணகளத்துலயும் இவனுக்கு செல்லப்பேரு கேக்குது’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“உன்னைத்தான் என்ன நின்னுட்டே தூங்கற....”,என்று மயூரியைப் பார்த்து சாரங்கன் கேட்க, “என்னோட பேரு மயூரி, மயில் இல்லை”, அவள் விளக்க.... “மாமா உன்னைய செல்லமா கூப்பிட்டேண்டா  தங்கம்.... நீ போய் பாரு”,என்று மறுபடி சொல்ல இந்த முறை சாரங்கனின் கொஞ்சலை அந்த ரௌடிகளாலேயே தாங்க முடியவில்லை....

“ஏய் எங்களை வச்சுட்டு காமெடி பண்ணிட்டு இருக்கியா...... மரியாதையா ஓடிப்போய்டு”, மூக்கில் உதை வாங்கிய ரௌடி அதைப் பிடித்தபடியே மறுபடி சவுண்ட் விட இந்த முறை சாரங்கன் எத்திய எத்தில் கதவின் அருகில் சென்று விழுந்தான். 

மயூரி சென்று ஜன்னல் வழியாக பார்க்க அங்கு ஒரு காவலர் இருப்பது கண்ணில் படுகிறது....

“இங்க ஒரு போலீஸ்காரர் நின்னுட்டு இருக்கார்....”,என்று மயூரி கூற சாரங்கன் கதவின் அருகில் இருந்த ரௌடியை காலால் நகர்த்திவிட்டு கதவைத் திறந்தான்.

சாரங்கன் மதிதான் வந்துவிட்டானோ என்று பார்க்க வந்திருந்தது அந்த ஏரியா கான்ஸ்டபிள். ஏற்கனவே அவர் வேலை செய்யும் காவல் நிலையத்தில் சாரங்கனின் வாயால் அவன் மிக ப்ரபலம்.  அவனை முறைத்தபடியே அங்கிருந்த ரௌடிகளை அந்த கான்ஸ்டபிள் பார்த்தார்.... அந்த ரௌடிகளில் ஒருவன் கண்ணாலேயே ஏதோ சமிக்ஞை செய்தான்...

“இந்த வீட்டுல இருந்து யாரும்மா ஃபோன்ல பேசினது.....”

“நான்தான் பேசினேன் சார்... இவங்க நாலு பேரும் ராத்திரி நேரத்துல இங்க வீட்டுல வந்து கலாட்டா பண்ணிட்டு இருக்காங்க.... இவங்க யாருன்னு கூட எங்களுக்குத் தெரியாது....”

“யோவ் என்னய்யா இதெல்லாம்... இந்த நேரத்துல இவங்க வீட்டுல உங்களுக்கு என்ன வேலை.....”

“பாப்பா சும்மா சொல்லுது சார்.... நாங்க எப்பவுமே இங்க வர்றவங்கதான்.... இன்னைக்கு ஏதோ பாப்பாக்கு கோவம்.... அதான் படார்ன்னு உங்களுக்கு ஃபோனை போட்டுடுச்சு......”

“என்னம்மா இது.... அவன் உங்களை நல்லாத் தெரியும்ன்னு சொல்றான்.... அடிக்கடி வருவேன்னு சொல்றான்.... என்ன நடக்குது இந்த வீட்டுல......”

“சார் அவன் அபாண்டமா பேசறான் சார்..... எங்களுக்கு இவங்களை எல்லாம் யாருன்னே தெரியாது.... திடீர்ன்னு ராத்திரி வீட்டுக்கு வந்துட்டு கதவைத் திறன்னு ஒரே ஆர்பாட்டம்... திறந்ததும் உள்ள வந்துட்டு எங்களை மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க.... இவங்க எல்லாம் இங்கதான் ராத்திரி முழுக்க இருக்கப்போறதாகவும், காலைல நான் போய்  அந்த துணிக்கடை ஆள் மேல போட்ட கேசை வாபஸ் வாங்கணும் அப்படின்னு.....”

“அந்தம்மா சொல்றது உண்மையா..... ஒழுங்கா சொல்லுங்க....”

“இன்னா சார் நீங்க..... அது சொல்லுதுன்னு நீங்களும் கேக்கறீங்க.... இந்தம்மா எதைப் பத்தி பேசுதுன்னே எனக்குத் தெரியலை.... நாங்க இதுக்கு முன்னாடியும் நிறைய முறை இந்த வீட்டுக்கு வந்திருக்கோம்......  கொஞ்ச நேரம் ஜாலியா இருந்துட்டு போவோம்....”, அந்த ரௌடி பேச சாரங்கன் அவனை அடிக்க கை ஓங்கினான்.... இந்த முறை மயூரியின் கை அவனை அடிக்க விடாமல் தடுத்தது.....

“சாரங்கன் சார்.... என்னது இது... சட்டம் படிச்ச நீங்க இப்படி கை ஓங்கிட்டு வர்றீங்க......”, கான்ஸ்டபிள் சாரங்கனிடம் பாய்ந்தார்..... அவன் அவரை முறைக்க ஆரம்பித்தான்....

“உங்களுக்கு இவங்களை எப்படித் தெரியும்..... இந்த நேரத்துல இங்க எப்படி வந்தீங்க.....”, சாரங்கனிடம் கேள்வி  கேட்க ஆரம்பித்தார்.

“ஹ்ம்ம் நாலுபேர் ரௌடித்தனம் பண்ண வருவாங்க.... அப்போ இவங்க குடும்பத்தைக் காப்பாத்த ஆள் வேணும்ன்னு ஒரு பட்சி வந்து சொல்லிச்சு.... அதுதான் பறந்து வந்துட்டேன்.....”, படு நக்கலாக சாரங்கன் சொல்ல, கான்ஸ்டபிள் கடுப்பானார்.

“கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க சாரங்கன்..... இவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா....”, அவர் கேட்க அந்த நேரத்தில் சரியாக மதி உள்ளே நுழைந்தான்.  மதியைப் பார்த்து கான்ஸ்டபிள் இவர் எப்படி இங்கு வந்தார் என்று யோசித்தபடியே அவனுக்கு ஸல்யூட் வைத்தார்.

“நீங்க இந்த ஏரியா கான்ஸ்டபிள்தானே.... யாரு இவங்கள்லாம்..... இந்த வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்காங்க....”

“சார் நீங்க வர்றதுக்கு முன்னாடி அதைத்தான் விசாரிச்சுட்டு இருந்தேன் சார்....”

“அவனுங்களை கேட்டா, நாங்க அடிக்கடி இந்த வீட்டுக்கு வர்றவங்கதான்னு சொல்றாங்க... அந்தப் பொண்ணும் அம்மாவும் எங்களுக்குத் இவனுங்களை யாருன்னே தெரியாதுன்னு சொல்றாங்க....”

“ஹ்ம்ம் சரி, உங்களுக்கு எப்படிய்யா இவங்களைத் தெரியும்..... நீங்கள்லாம் இவங்களுக்கு சொந்தமா.....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.