(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 05 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

Dear chillzee friends and readers.. Thanks a lot for the comments you shared and the rating you had given. Feeling energised ☺. Need your support throughout my writing journey. once again Thanks ?"

Eshwari’s’ என்று பொன்னிறத்தில் மின்னிய எழுத்துக்கள், அந்த கருப்பும் வெள்ளையும் கலந்து வண்ணம் பூசப்பட்ட... சிறிய, ஆனால் நவீனமான மாளிகைக்கு இன்னும் மெருகேற்றியது. பொதுவாக கருப்பு நிறம் அடிக்கப்பட்ட வீடுகளை காண்பது மிகவும் அரிது என்பதால்.. அந்தப் பக்கம் செல்வோரின் பார்வை கண்டிப்பாக அந்த வீட்டில் பதியாமல் செல்லாது.. ஒரு வினோத பாவத்துடன்..! ஆச்சர்யத்துடன்..!!

அப்படி ஒரு வினோதமான பார்வையைத் தான் அந்த வீட்டின் முன் நின்று வீசிக்கொண்டு இருந்தான், உதய்.

“எவ்வளவு நாள்... எவ்வளவு நேரம் தான் இப்படி ஒரு வித்யாசமான லுக்கு விடுவே உதய்..?! என்னவோ புதுசா வீட்ட பார்க்கற மாதிரி??” என்று கேட்டுக்கொண்டே வந்த காவ்யாவிடம்..

“இல்ல.. இந்த பெரிய மேடம்.. அதான் உங்கக்காவுக்கு மட்டும் எப்படி விதவிதமா தோணுது.. கருப்பு கலர்ல பெயிண்ட்?! வினோதமா இருக்கு.. சொந்த வீட்டையே இப்படி செஞ்சிருக்கா... இதுல அவ நல்லா இன்டீரியர் டிசைனர்ன்னு நம்பி  அவள சூஸ் பண்றவங்க வீட்ட எப்படி பண்ணி இருப்பளோன்னு யோசிக்கறேன்...” என்றான்.

“எங்க அக்காவ கிண்டல் பண்றது இருக்கட்டும்... உன்னோட இந்த லுக்க பார்த்தா, ‘வீட்டு மாப்பிள்ளை ஆகறதுக்கு முன்னாடியே, வீட்டை விலை பேசிட போறான்’னு எல்லாரும் பேசுவாங்க.. அதனால கொஞ்சம் பார்வையை மாத்து...”என்று காவ்யா உதய்யை கடிந்துக்கொள்ள...

அவனோ... “அடிப்பாவி... நான் என்னவோ நினைச்சு பார்த்த.. நீ என்னவோ கதை கட்டற.. யாரும் அப்படி பேசலைனாலும் நீ பாயிண்ட் எடுத்துக் குடுப்ப போல இருக்கே... என்ன.. லா படிக்காமலேயே லா ஆகப்போற கொழுப்பா..?!” என்று முறைத்துக்கொண்டே கூறினான்.

“லா படிக்காமலேயே லா ஆகப்போறேனா...??!! இது என்ன டா உளறல்..”

“டாட்டர்-இன்-லா சொன்னேன் காவீ...!!” கொஞ்சம் கெத்தோடு உதய் உளற...

“இப்போ நான் சிரிக்கணுமா? அழனுமா??”என்று என்று காவ்யா கோபத்துடன் அவனிடமே கேட்க...

சட்டென்று மொபைலில் வீடியோவை உயிர்ப்பித்த உதய், காவ்யாவை படம் பிடித்துக்கொண்டே, “நன்றாகப் பாருங்கள்.... கொஞ்சம் கொஞ்சமாக காளியாக மாறிக்கொண்டிருக்கும் காவ்யாவைப் பாருங்கள்..”என்று கூற...

நிஜமாகவே காளியாக மாறத்தொடங்கிய காவ்யா... சட்டென்று உதித்த யோசனையுடன், அதே முறைப்பு பார்வையுடன் உதய்யை நெருங்கத் தொடங்கினாள்...

மிகவும் ஆர்வமாக படம் பிடித்துக்கொண்டிருந்த உதய், பின்னாலேயே நடக்க... காவ்யாவும் அவனை நெருங்க.... நெருங்க...

அவன் பின்னோக்கி எடுத்து வைத்த எட்டாவது அடியில்.. கால்கள் நிலத்தில் படாமல், நீரில் பட... நிற்கவும் நடக்கவும் முடியாமல், நீருக்குள் விழுந்தான்... உதய்.!

ஆமாம்... நீச்சல் குளத்தில் விழுந்து... நீருக்குள் முழ்கி... மேலே வந்த உதய்யின் நிலைமையை சொல்லவும் வேண்டுமா..!!

விழுந்து விழுந்து சிரிப்பது போல், காவ்யா குனிந்து குனிந்து சிரித்துக் கொண்டிருந்தாள்..!!

கரை ஏற முயன்ற உதய், போனைக் காணாமல் “ஐயையோ... என் மொபைலு...”என்று கூவிக்கொண்டே மறுபடி நீருக்குள் விழுந்தான்.

இப்பொழுது காவ்யா நிஜமாகவே தரையில் விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

மேலே வந்த உதய்க்கு கோவம் வருவதற்கு பதில், அக்கறை வந்தது..! அவனின் மொபைலின் மேல்..!!

“ஹா ஹா.. இப்படி ஒரு ராட்சசி தான் என் பொண்டாட்டின்னு என் அப்பாவுக்கு முன்னாடியே தெரியும் போல.. அதான் தேடித் தேடி ‘water proof’ மொபைல் வாங்கித் தந்துருக்கார்... அப்பா.. தெய்வம் ப்பா நீ.. வாழ்க நீ பலநூறாண்டு.. வளர்க நின் மகனின் புகழ்..”என்று புலம்பிக்கொண்டே அங்கு போடப்பட்டிருந்த லாஞ்சரில் சென்று அமர்ந்தான்.   

பின்னாலேயே வந்த காவ்யாவுக்கு மிகவும் ஆச்சர்யம்... உதய் கொஞ்சமேனும் கோவப்படுவான்.. முறைத்துப் பார்ப்பான் என்று எதிர்பார்த்தவள்.. அவன் மிகவும் சாதாரணமாக இவ்விஷயத்தை எடுத்துக் கொண்ட விதம்.. நிச்சயமாக காவ்யாவைக் கவர்ந்தது.

அதிலும் பார்வையில் கூட கடினம் ஏறவில்லை என்பது, காவ்யாவை உதிய்யை நோக்கி அவளையும் அறியாமல் காதல் பார்வை வீச வைத்தது..

புலம்பிக்கொண்டே நிமிர்ந்த உதைக்கு அவளின் பார்வை புரிந்தாலும், அதன் காரணம் புரியவில்லை. என்றாலும் அவன் அதை பெரிதுபடுத்த விரும்பவும் இல்லை..

இதுவரை, அவள் அவனிடம் எடுத்துக்கொண்ட உரிமை காதலால் வந்தது அல்ல என்பது உதய்க்கு தெரியும் அல்லவா.. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பழக்கம் என்பதால் மட்டுமே வந்த உரிமை. இரண்டிற்கும் வித்தயாசம் உண்டே..

அவளின் பார்வை மாற்றம் மிகவும் இனித்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ள உதய் முயலவில்லை. ஆனால் மனதிற்குள்,  ‘பரவால்லையே... பாப்பா கிட்ட கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது... லுக்கு பயங்கரமா இருக்கு..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.