(Reading time: 15 - 30 minutes)

அதற்குப் பாராட்டாக அவரது மனைவியின் மெச்சுதலான பார்வையையும் பெற்றுக்கொண்டார்.

ஒருவழியாக தாரா வீட்டிலிருந்து.. நேராக உதய் விமான நிலையம் செல்ல... ககனின் குடும்பம் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பியது...

இருநூற்று இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலுக்கு.. பாதி தூரம் ககன் கார் ஓட்ட.. மீதி தூரத்திற்கு மேகன் ஓட்டினான்.டாலி உடன் இருந்ததால் அவர்களுக்கு பயண அலுப்பு துளியும் தெரியவில்லை... நடுவில் எடுத்துக்கொண்ட சிறிய இடைவெளியை சேர்த்து ஐந்து மணிநேரம் ஓடியே ஓடிவிட்டது.

மதியப்பொழுதில் ஒரு மணி நேரம் மட்டுமே மூடப்படும் கோவில் என்பதால்.. இவர்கள் சென்ற நேரத்திற்கு சாமி மற்றும் அம்பாளின் தரிசனம் நிம்மதியாக கிடைத்தது.

சுயம்புவாக அவதரித்த... பண்ணிரெண்டு ஜோதிர்லிங்களில் ஒருவரான ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமியும்... சதி தேவியின் உடல் பாகங்கள் பூமியில் விழுந்த.. பதினெட்டு மகாசக்திகளில்(சக்தி பீடம்)... ஒருவரான.. கழுத்துப்பகுதி விழுந்த இடத்தில்தான் பிராஹ்மரம்பா தேவியும் உள்ளனர். ஒரே கோவிலில் ஜோதிர்லிங்கமும் மகாஷக்தியும்  அமையப்பெற்றது இக்கோவிலின் சிறப்பு. இதற்க்கு பூலோகக் கைலாசம் என்ற பெயரும் உண்டு.

பல சிறப்புகள் வாய்ந்த கோவிலில், நிம்மதியான தரிசனம் முடிந்து.. மதிய உணவும் உண்டுவிட்டு கிளம்பினார்கள், ஐவரும். வழியில் வரப்போகும் இயற்கையின் அற்புதங்களை பார்பதற்கு ஆவலாக...

ஹைதராபாத்தில்-ஸ்ரீசைலம் வழியில் இருக்கும் ‘நல்லமலா மலைத்தொடர்’ கண்ணுக்கு விருந்து தான். வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும்.. எப்பொழுதும் இருக்கும் பணி மூட்டமும்.. நடு நடுவே இடையிடும் வன விலங்குகளும்.. மழைக் காலமாதலால் அங்கங்கு தோன்றிய தற்காலிக அருவிகளும்.. சாலை எங்கிலும் இருபுறமும் அமர்ந்துக் கொண்டு போவோர் வருவோருக்கு வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கும் குரங்குக்கூட்டமும்... ஓடி விளையாடும் மயில்களும்... அங்கங்கு கிராமங்களும்.. ஹப்பா... வர்ணிப்பதற்கு வார்த்தைகளைத் தேட வேண்டும்.! கண்டுகளிக்கும் கண்களுக்கு அருமையான விருந்து. இந்த மிகப்பெரிய மலைத்தொடரில் தான் தெலுங்கு தேசத்தின் முக்கிய கோவில்களான திருப்பதியும் , நவ நரசிம்ஹர் என்று கூறப்படும் அஹோபிலமும் அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் சரணாலயமும்.. ஸ்ரீசைலம் அணையும்(dam) உள்ளது. இவ்வளவு அழகான இயற்கையை விட ஒரு மனிதனின் கண்களுக்கு வேற விருந்து ஏது??  

மேகன், டாலி இருவரும் அவர்கள் வயதிற்குரிய ஆரவாரத்துடன் இயற்கையை ரசிக்க.. அவர்களை விட பெரியவர்கள் தான் சந்தோஷத்தில் குதூகலித்தார்கள் என்று கூறலாம். இப்படிப்பட்ட ஊர்களில் தானே அவர்கள், பின்தொடரும் புகழிலிருந்தும் காமெராவின் கண்களில் இருந்தும் வெளிவந்து நிம்மதியாக இருக்க முடியும். கூடவே வேலை பளுவிலிருந்து விடுதலை அடைந்து வானத்தில் பறப்பது போன்ற உணர்வு...! அத்துடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்களது பிரியமான தாராவைப் பார்த்த மகிழ்ச்சியும் சேர்ந்துகொண்டது..!! (ஷ்... ககன்கிட்ட சொல்லாதீங்க..!) ககனுடன் அவளுக்கு இருக்கும் பிரச்சனையை சீக்கிரமே முடிப்பதாக அவள் கூறியதால் வந்த சந்தோஷமும் கூடதான்..!!!

இவர்கள் நால்வரும் இருக்கும் உலகிலிருந்து விலகி.. வேறொரு உலகில் நினைவுகளுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான் ககன். அந்த நினைவுகளுக்கு சொந்தக்காரி அவனின் பேபிதான் என்பதைக் கூறவும் வேண்டுமா என்ன?!

அது... அவர்கள் இருவரும் பிறந்ததேதி ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிந்துக்கொண்ட நாள்.! ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக சந்தித்துக்கொண்ட நாள்..!! இருவர் மனதிலும், விதையாக... முகம் அறியா நபர் மீது இருந்த ஈர்ப்பு.. முகம் பார்த்து... வடிவம் கொண்டு.. செடியாக துளிர்விட்ட நாள்..!!! மூன்று வருடங்களுக்கு முன்பான அவர்களின் பிறந்தநாள்.! இன்னும் பசுமையாக நினைவுகளில் இருக்கும் அழகான.. அற்புதமான நேரங்கள்.!

நாமும் ககனுடனே அவனின் நினைவுகளுக்குள் பயணிப்போம்.. அடுத்தவாரம்.!    

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1151}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.