யசோதா மருத்துவமனை
‘டாக்டர் ப்ரஹ்மராம்பிகா’ என்ற பெயர்ப்பலகைக் கொண்ட அறையில், அவளின் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு சின்னக் கொட்டாவியை நாசூக்காக கைகளுக்கு இடையே வெளியேற்றிய மேகன், கடிகாரத்தை அறுபதாவது முறையாகப் பார்த்துக்கொண்டான்.. சரியாக, பதினொன்னு ஐம்பத்தி ஒன்பது..!!
சட்டென்று போனைக் கையில் எடுத்தவன், ‘Happiee Birthday to our darling bro and sweetie anni. With love and prayers… Dolly&Megan ‘என்று டைப் செய்து இருவருக்கும் ஒரே சமயத்தில் அனுப்பும்போது மணி பண்ணிரெண்டு..!
அதே நேரத்தில் அறையின் கதவை திறந்துக்கொண்டு வந்தாள், மேகனின் டாலி.. நோ.. நோ... ப்ரஹ்மி..!!
“கிஸ்ஸூ.... வந்துட்டியா டா என் செல்ல குட்டி....” என்று சின்னக் குழந்தை போல் ஓடிவந்து, அமர்ந்து இருந்த மேகனின் மேல் மொத்தமாக சாய்ந்து அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அதில் முகமும் புதைத்துக்கொண்டாள்.!
பதில் எதுவும் பேசாமல், சின்ன புன்னகையுடன் அவளை அணைத்து.. அவளின் பாப் முடியை கைகளால் அளந்துக்கொண்டே தன்னோடு இன்னும் இன்னும் இறுக்கினான், மேகன்.
அவளின் அணைப்பும் கூட இறுகியது.!
இருவருக்கும், காலையில் இருந்து உழைத்த உழைப்பின் அலுப்பு, களைப்பு, சோம்பல், பதற்றம் எல்லாம் மிச்ச சொச்சம் இல்லாமல் ஓடிப்போக... ஒரு ஆத்மார்த்தமான நிம்மதி சூழ்ந்தது. தன் இடம் சேர்ந்துவிட்ட நிம்மதி. மனதின் பாரம் எல்லாம் மொத்தமாக குறைந்து போக.. இருவரும் ஒன்றுமே பேசாமல் அந்த மவுனத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள்.
சிறிது நேரம் கழித்து எழுந்த டாலியை கையை பிடித்து அவனின் மடியில் அமர வைத்துக்கொண்ட மேகன், ஒன்றும் கூறாமல் அவளின் மருத்துவ சேவை செய்த கைகளுக்கு, உள்ளங்கையில் முத்தங்கள் வைத்தான்.! அது அவனின் தினசரி வழக்கம், திருமணம் ஆகிய அன்றிலிருந்து.!
எத்தனை புத்தம் புது பிஞ்சுக் குழந்தைகளை ஏந்திய கைகள்..! எத்தனை பெண்களுக்கு பிரசவம் பார்த்தக் கைகள்..!! எத்தனை கணவன்மார்களின் நன்றியை தனதாக்கிக் கொண்ட கைகள்..!!! எத்தனை பெண்களின் கண்ணீரை துடைத்தக் கைகள்..!!! இவள் படிப்பு முடிந்து பணியாற்றத் தொடங்கிய இந்த நான்கு ஆண்டுகளில் சந்தித்த சவாலான பிரசவங்களும், செய்த சேவைகளும், கட்டிக் கொண்ட புண்ணியங்களும் ஏராளம்..! அதனால் அவள் அடைந்த மகிழ்ச்சியும் ஏராளம்..!!
அத்துணைக்கும் சொந்தக்காரியான அவளையே சொந்தமாகக் கொண்டவன் அல்லவா..! அந்த பெருமை தந்த நிறைவு, அவளுக்கு முத்தமாகத் தான் சென்றுச் சேரும்.!! வார்த்தைகளை விட செயலுக்கு முக்கியத்துவம் தரும் மேகனுக்கு அவன் மனைவியை பாராட்டத் தெரிந்த ஒரே வழி.!
அந்த முத்தத்தில் அவன் சமர்பித்த உணர்வுகள் புரியாவிடினும், அது அவளுக்கு தந்தது.. ‘நிறைவு’. அன்று அவள் ஆற்றிய பணிகளுக்கு முழுமை சேர்க்கும் நிறைவு.!! அடுத்து அடுத்து அவள் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு தேவையான ஊக்கம்.!!!
அந்த நிறைவுத் தந்த புன்னகையில் ஜொலித்த முகத்துடன் காதலாக ஒரு வினாடி மேகனிடம் பார்வை வீசிய டாலி, சட்டென்று முகத்தை சுருக்கிக்கொண்டு...
“கிஸ்ஸு... நாம மீட் பண்ணி இப்பயோட 17 ஹவர்ஸ் ஆச்சு. நான் உன்னை எவ்வளோ மிஸ் பண்ணினேன் தெரியுமா..!!”என்று சிறுபிள்ளை போல் வருத்தப்பட்டாள்..
‘கிஸ்ஸு’க்காக அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன், “நானும் தான் Mrs. Megan. I missed you so much” என்று கூறி முடிக்கும்போதே இருவரின் முகமும் வருத்தத்தை ஏந்திக் கொண்டது.
“மணிக்கணக்குல பார்த்துக் கொள்ளாத நமக்கே இவ்வளோ பீல் ஆச்சுன்னா.. அண்ணா அண்ணி பாவம்ல...! ஏன்தான் அவங்க இப்படி ஒரு முடிவு எடுத்தாங்க...?! காரணம் கூட தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்குடா.. இதுல அண்ணி ரூல்ஸ் வேற போட்டுருக்காங்க..! மண்டைய பிச்சிக்கலாம் போல இருக்கு ப்ரஹ்மி..! நிஜமாவே உனக்கும் ரீசன் தெரியாதா??”என்று வருத்தத்துடன் வினவினான், மேகன்.
“நிஜமாவே தெரியாது மேக்... நம்ப வீட்ல விஷயம் தெரிஞ்சவங்க மாமி மட்டும்தான். அவங்கள பத்தி உனக்கே தெரியும்.! ஒரு வார்த்தைகூட வெளில வராது..! அண்ட் அவங்களே அண்ணிக்கு சப்போர்ட் பண்றாங்கன்னா, அத்தான் தான் ஏதோ பண்ணி இருக்கணும்..! அப்பறம் அண்ணி வீட்ல காவ்யாவுக்கு மட்டும் தான் தெரியும் போல.. அவளும், ப்ராமிஸ் பண்ணிட்டேன்.. சொல்ல முடியாதுன்னு சொல்லறா.. என்ன தான் பண்ண முடியும் செல்லம் நாம! அவங்களா மனசு வெச்சா மட்டும் தான் சால்வ் ஆகும்.! ஹ்ம்ம்...!”என்று நீண்ட பெருமூச்சுடன் முடித்தாள்.
மேகன் அமைதியாக ஆமோதித்துவிட்டு தனது போனில் அவன் அவர்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியை காட்டினான்.
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Dolly and Gagan convo was very fully and jolly..I like the cookie dog so cute
Dolly and Megan ivanga pair is lovely and cool...ore oru doubt thaa ninga novel mudichi engalukk entha test-um vaika matinga illa....
Nice birthday surprise
Megan-Dolly good couple
Nice birthday surprise
Megan-Dolly good couple
Dolly and Megan semma couple
Soon Thara and Gagan meet paniruvanga pola
Birthday surprise superb ma'am
Looking foward
Megan - Dolly naduve irukum aniyonyam very cute
Gaganoda confusion parthal pavama iruku. Oru bday wish anupalama vendamanu ivalo yosikura alavuku ena seithanga?
Thara theliva than ellam seiranga
Avaruku ivalo bday-ku plan seithirukanga, avarum surprise aga ethavathu seithirukanumo?
2 perum ethanal ipadi kovichutu irukanganu terinjuka waiting ji.
thanks for ur comment