(Reading time: 18 - 35 minutes)

யிலில் பயணித்துக்கொண்டிருந்த தாராவிற்கு கண்களும் மனமும் ஒரு விநாடியேனும் உறங்குவேனா என்று ஆட்டம் காட்டிக் கொண்டுஇருந்தது.

எழுந்தாள்...! நடந்தாள்...!! படுத்தாள்...!!

மறுபடியும் அதே...!!!

இப்பொழுதும் அதே தான் செய்தாள்.!

கைகளில் கைப்பேசியுடன்!!

ககனுக்குள் இருக்கும் அதேப் போராட்டம் தான் இவளுக்கும்.

‘வாழ்த்து அனுப்பலாமா? வேண்டாமா?’ என்றே சிந்தனை. என்ன.. பெண்களுக்குள்ள இயல்பான வேண்டாத கூடுதல் சிந்தனையும் வந்தது அவளுக்கு.

‘நான் அனுப்பிட்டு அவன் பதில் அனுப்பாம இருந்தா எனக்கு தானே பல்பு..! அப்படி இல்லைனா கூட.. என் மெசேஜ் பார்த்துட்டு ஒரு வேளை அவன் நான் சமாதானம் ஆகிட்டேன்னு நினைச்சு கால் பண்ணிட்டா??’ என்று தேவையற்ற சிந்தனைகள் பல, அவளை விழிமூட விடாமல் படுத்தியது.

பின் மிகவும் சரியாக, ‘வேண்டாம்’ என்ற தப்பான முடிவை எடுத்தபொழுது மணி பண்ணிரெண்டு.!!

முடிவு எடுத்துவிட்டாளே தவிர, மிகவும் வருத்தமாக இருந்தது..! ‘அவன் ஈகோ பர்க்கறான்னு சொல்லி சொல்லி நானும் ஈகோ பார்க்க பார்க்க ஆரம்பிச்சிட்டேனோ..!!’என்ற சிந்தனையுடன் போனை கையில் வைத்து பார்த்துக்கொண்டு இருந்த சமயம், வரிசையாக மூன்று செய்திகள் வந்தது.

பொங்கும் உவகையுடனும், மிஞ்சும் ஆவலுடனும் அதை படித்தவளுக்கு, கண்டிப்பாக இந்த பிறந்தநாளும் இனிமையானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. அந்த மூன்று செய்திகளும் அனுப்பியவர்கள் முறையே ககன்,காவ்யா மற்றும் மேகன்.

Happiee Birthday to our darling bro and sweetie anni – with love and prayers Dolly&Megan’ என்று மேகனிடம் இருந்தும்...

‘I don’t know how to say or how to define what you really mean to me and to my life, I just love you sister. Happy birthday my dear sissy’ என்று காவியாவும்...

Your birthday is the perfect opportunity to say SORRY for all the fights and arguments, THANK YOU for all the sacrifices you’ve made and I LOVE YOU for everything that you mean to me. Happy birthday my dear wifey’ என்று ககனும் அனுப்பியிருந்தனர்.

கண்களில் நிறைந்த நீருடனும், உதடுகளில் உறைந்த புன்னகையுடனும் மூன்று செய்திகளையும் படித்தவள், ககன் அனுப்பிய செய்தியை படித்ததும் சத்தம் வராமல் அழத் தொடங்கினாள்.

”‘I miss you soooo much da purusha… Happy Birthday & I love you baby.. எனக்கு மட்டும் உன்னை பிரிஞ்சி இருக்கறது கஷ்டமா இல்லையா என்ன..! அதுவும் எல்லா வருஷமும் நம்ப பர்த்டே அன்னிக்கு சேர்ந்து இருக்கணும்னு கண்டிஷன் போட்டுட்டு, இப்போ நானே உன்னை பிரிஞ்சு இருக்கேனே.. எனக்கு ரொம்ப திமிரு டா  பேபி... ஆனா என்ன பண்ணறது.. இப்போ உன்ன ஈஸி-ஆ விட்டுட்டேன்ன இன்னோரு முறை இந்த தப்பை பண்ணமாட்டேன்னு என்ன நிச்சயம்.. நான் செய்ய கூடாதுன்னு சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கும்ன்னு நீ ஏன் டா உணரவே இல்லை.. எனக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா.. மனசு வலிக்குது பேபி.. நீ வேணும் டா எனக்கு... சீக்கரமா நீயா என்னை தேடி வந்துடு டா பேபி... ப்ளீஸ்...” என்று மனதுக்குள் குமுறியபடி அவன் அனுப்பிய மெசேஜூக்கு முத்தங்களை வாரி வழங்கினாள்..!!

பின் ஒருவாறு சமாதானம் ஆகியவள், “நாளைக்கு இருக்கு பேபி உனக்கு சர்ப்ர்ரைஸ்” என்று கைப்பேசியை கைப்பையில் வைத்துவிட்டு கொஞ்சம் நிம்மதியுடன் உறங்கத்தொடங்கினாள்.. அவனுக்கு பதில் வாழ்த்து அனுப்பும் எண்ணம் சிறிதும் இல்லாமல்.!

சற்று நேரம் கழித்து, என்ன நினைத்தாளோ என்னவோ.. ஒரு வெற்றுச் செய்தி (empty message) அனுப்பிவைத்தாள், ககனுக்கு. அவ்வளவு வருத்தத்தில் இருந்த ககனுக்கு இவளே அறியாமல் தந்த ஆறுதல்! நிம்மதி..!!

ஆம். எந்தக் சூழ்நிலையிலும் அவளால் ககனை வெறுக்க முடியாது என்று அவள் மறைமுகமாக சொன்ன செய்தி.! நிம்மதியில் அவள் உறங்க... மனதின் உற்சாகத்தில் அவன் உறங்க முடியாமல் தவித்து, பின் உடலின் அசதியால் உறங்கத்தொடங்கினான்.

மறுநாள் – ஞாயிறு காலை மணி ஏழு...

எப்பொழுதும் எட்டு மணி வரை தூங்கும் வழக்கம் உடைய ககனால் இன்று தூங்கமுடியவில்லை, இப்பொழுது வரை பெற்றோர்கள் வந்து வாழ்த்து தெரிவிக்காத கோபத்தில் இருப்பதால். வேக வேகமாக அறையை விட்டு வெளிவந்த ககனின் பின்னாலேயே.. கிட்டத்தட்ட ஓடி வந்தாள், டாலி “டேய் அத்தான்... ஹாப்பி பர்த்டே டா அத்தான்...” என்று அலறிக்கொண்டே.

அவளின் அலறலில் பதறித் திரும்பிய ககன், அவளின் கோலத்தைக் கண்டு வந்த சிரிப்பை மென்றுக்கொண்டே, நேற்றைய ஏமாற்றத்தை காட்டும்விதமாக, அவளின் வாழ்த்தை கவனிக்காததைப்போல்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.