“ஏய்.. பிசாசு.. ஏன் என்னை ஏலம் போடற?! வாங்க வேண்டிய ஆளுகூட இல்லாதப்போ..” என்றான்.
இப்பொழுது அதை டீலில் விடுவது டாலியின் முறை போல், “மூணு டைம் சொன்ன தான் அது ஏலம்.. நான் டூ டைம்ஸ் தான் சொன்னேன்... சரி அதைவிடு... இப்போ எதுக்கு சிரிச்ச?!”என்றவாறு முறைத்தாள்.
“உன் டிரஸ் பார்த்த உடனே சிரிப்பு வந்துடுச்சு.. ஹா ஹா.. என்ன நீயும் என்கூட வாக்கிங் வர போறியா..??” என்று பாயிண்ட்டை பிடித்தான்.
சுற்றும் முற்றும் கவனித்துவிட்டு.. “ஹீ..ஹீ... ஆமாம் மச்சி.. கொஞ்சம் போர் அடிச்சது.. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ணலாமேன்னு....” என்று கூறிக்கொண்டே அவனுடன் நடக்கத் தொடங்கினாள்... எப்பொழுதாவது நடக்கும் விஷயம் தான் என்பதால் ககனும் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை.
“ஆடி அசைஞ்சு... ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாள் வாக்கிங் போய் என்ன டாலி யூஸ்?!” கிண்டல் டன் கணக்கில் வழிந்தது.
“டேய் லூசே.. எங்கேர்ந்து டா பிடிச்ச இந்த பழைய பழ மொழிய.. வீட்லயே ட்ரெட்மில் வெச்சிக்கிட்டு நீ தான் லூசு மாதிரி வெளில வாக்கிங் போறன்னா.. நானும் தினமும் போகனுமா... மென்டல்...”
“என்ன டாலி ஓவர் எந்துஸ்டியாஸ்டிக் (enthusiastic) மூட்ல இருக்க போல... உன் புருஷன் கிட்ட சொல்லிட்டியா... இல்லைனா உன்னை காணும்ன்னு எழுந்தவுடனே அழப் போறான், குழந்தை...”
“நீ முதல்ல ஓவர் மொக்கை போடறத நிப்பாட்டு... அப்பறம் நேத்திக்கு அவனுக்கு தந்த தூக்க மாத்திரைய இன்னிக்கு உனக்கு தந்துடுவேன்...”என்று அசால்ட்டாக மிரட்ட... நிஜமாகவே ககன் அரண்டு போனான். ஏனென்றால் சிறிய வயதில் அவள் செய்த சேட்டைக்கு அளவே இல்லை... (அதுக்கு தனி எபிசொட் போடணும்)
சட்டென்று அமைதியானவன், ‘பிசாசு.. பிசாசு.. சரியான பேர் தான் உனக்கு வெச்சி இருக்கான்.. வெச்சது யாருன்னு சொன்னா... ஆளு காலி... டேய் உதய்... உனக்கு இருக்கு டா பெரிய்ய்ய்ய்ய ஆப்பு அப்பு...’ என்று மனதுக்குள் கூறிக்கொண்டான்.. பின்னே வெளியில் கூறினால் அவளின் இன்றைய டார்கெட் அவன் ஆகிவிடுவானே...!
இதுவரை உடன் நடந்த டாலி அவனுடன் வராததை உணர்ந்து திரும்பியவனுக்கு மூச்சு வாங்க, முகத்தில் அலுப்பை காட்டி நின்று கொண்டிருந்த டாலியே காட்சி அளித்தாள்.
அவளின் களைப்பான முகத்தைக் கண்டவன், மிகவும் அக்கறையுடன் தண்ணீர் பாட்டில் நீட்டிக்கொண்டே, “அலுப்பா இருக்கா டாலி.. தூங்கி ரெஸ்ட் எடுக்காம எதுக்கு அலையற... சரி வா வீட்டுக்கு போகலாம்...”என்று சொல்ல..
“வேண்டாம் வேண்டாம் கொஞ்சம் மூட் பூஸ்ட்-அப் ஆனா எனர்ஜி வந்துடும்.. “என்று அப்பாவியாய் கூறினாள்.
“அப்போ எங்க போகலாம் சொல்லு டாலி... டாங்க் பன்ட் (tank bund – Hussain Sagar Lake) வரைக்கும் ரைடு போகலாமா.. நான் ஓடி போய் பைக் கொண்டுவரேன்” என்று வினவினான், பாசமாக.
அவனின் அக்கரையில் மனம் கனிந்தவள், “நோ அத்தான்.. டாக்ஸ் பார்க் (dogs park) போகலாம். ஆனா பைக் வேண்டாம்.. ஆட்டோல போகலாம்.. கொஞ்ச தூரம் தானே.. ஆட்டோல போயே பலவருஷம் ஆச்சு...”என்று உற்சாகத்துடன் கூறினாள்.
ஒரு விநாடி கூட தயங்காமல், “சரி ஒகே..”என்று ஆட்டோ அழைக்க சென்றான்.
இதுதான் ககனிடமும் மேகனிடமும் அனைவருக்கும் பிடித்த விஷயம்.. எளிமை..!
ஒரு விநாடி தயக்கம்கூட இல்லாமல், ‘நான் பணக்காரன்... ஆட்டோலாம் ஏற மாட்டேன்.. காரில் அல்லது பைக்கில் தான் சவாரி செய்வேன்’ என்றெல்லாம் அலட்டிக்கொள்ள மாட்டார்கள்... ஏன் ககன் அவன் மனைவியின் ஆசைக்காக பேருந்தில் கூட பயணம் செய்தவன்.. அவர்களே கூறிக் கொள்ளாதவரை அவர்கள் ‘வைஸிராய்’ வாரிசு என்பதை யாரும் அறியப்போவதில்லை. அவர்கள் குழுமத்தின் சார்மேன் அவர்களின் தந்தை தான் என்பதில் ஒரு லாபம். எளிய வாழ்வு வாழ முடியும். அதில் தான் இருவருக்கும் விருப்பம் கூட..!
ஆட்டோவில் அடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் சென்று சேர்ந்த இடம், டாக்ஸ் பார்க். ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் ‘ஹுசைன் சாகர்’ அல்லது ‘டாங்க் பன்ட்’ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய ஏரி, அதை சுற்றி போடப்பட்டு இருக்கும் முக்கியச் சாலை. வானில் இருந்து பார்பதற்கு ஏரி அணிந்திருக்கும் கழுத்துஆரம் போல இருப்பதால், ‘நெக்லேஸ் ரோடு’ என்று பெயர். அந்த ரோடில் அமைந்திருக்கும் ஒரு பெரிய திறந்த புல்வேளி. அதை ஆர்வலர்கள் சீர் படுத்தி, அதில் தங்களின் வளர்ப்பு நாய்களை தினமும் அதிகாலை வாக்கிங் கூட்டிக்கொண்டு வந்து, சிறிது நேரம் விளையாட விடுவர்.
யார் வேண்டுமானாலும் வந்து அவைகளுடன் விளையாடலாம். கொஞ்சி மகிழலாம். பிறந்து சிலநாள் ஆன குட்டிகள் முதல் வயதான நாய்கள் வரை அணைத்து வகையிராக்களும் வந்து மற்றவர்களை நுகர்ந்து, மேலே உரசி என்று விளையாடும். அதுவும் ஞாயிறுகளில் மிக அரியவகை நாய்கள் கூட வருவதால் கூட்டம் நிரம்பி வழியும்.