(Reading time: 18 - 35 minutes)

அதைப் படித்துவிட்டு “சோ ஸ்வீட் மேக்... லவ் யு..” என்று அவன் மீது சாய்ந்துக்கொண்டவள், மேஜை மேல் இருந்த ஹாரி பாட்டர் புத்தகத்தை கவனித்துவிட்டு, “ஆஹா... எலி தானா வலையில வந்து மாட்டிக்கிச்சே” என கூறிவிட்டு வாய்விட்டு சிரித்தாள்.

புன்னகைத்த மேகனும், “எலி எல்லாத்துக்கும் தயாரா தான் வந்துருக்கு..!” என்றான்.

புத்தகத்திலிருந்து இரண்டு கேள்வி கேட்டுவிட்டு, மேகனை ஒரு பரிதாபமான பார்வை பார்த்தாள், டாலி.

அந்தப் பார்வையின் மாற்றத்தை உணர்ந்துக் கொண்ட மேகன், ஒரு நொடியில் பரிதவித்துவிட்டான்.

“என்னடா டாலி...”என்று உருகியவனுக்கு பதிலாக,

கண்களில் திரண்ட நீருடன், “நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்தறேனா, மேக்.?!” என்றுவிட்டு அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தாள்.

“நோ டா செல்லம்... ஏன் டா இப்படி பீல் பண்ணற... எனக்கு பிடிச்ச பாட்டை நீ ரசிக்கனும்ன்னு நினைக்கற மாதிரி தானே இதுவும்.. நீ எதுக்கு இப்போ இமோஷனல் ஆகிக்கிட்டு..?!”என்று இதமாக கடிந்துகொண்டே அவளின் முதுகை வருடிவிட்டவன்,

“சரி டா செல்லம்.. வீட்டுக்கு போகலாமா?? மணி ஒன்னு ஆச்சு..“ என்றான்.

சட்டென்று இயல்புக்கு மீண்டவள், “ஹையையோ... ஆமாம் ஆமாம்.. மணி ஆச்சு.. அண்ணி சொன்ன மேட்டர் வேற ரெடி பண்ணும்.. ஓடி வா... போகலாம்...” என்று அவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

“செல்லம்.. இந்த டைம்முக்கு ஓடினா நாய் தான் துரத்தும்.. இப்போ கார்லபோய்ட்டு, நாளைக்கு காலையில ஓடலாம்.. ஒகே வா..?!”

“உன் மொக்கைக்கு பொறுமையா நாளைக்கு சிரிக்கறோம்... இப்போ சீக்கரமா வா டா, என் கிஸ்ஸு...” என்றுவிட்டு வேகமாக பார்க்கிங் ஏரியா சென்றாள், மேகன் பின்தொடர.!

“ஹே... இரு டீ.. ‘கிஸ்ஸு’ன்னு சொல்லிட்டு போய்ட்டே இருந்தா எப்படி?  இரு டீன்னா...”என்று இவன் அழைத்துக்கொண்டே போக, அதற்குள் டாலி அவர்களின் ISUZU MU-x யில் ஏறி அமர்ந்துக்கொண்டு அவனுக்கு அழகுக் காட்டினாள். அது இன்னும் மேகனை வெறுப்பேற்ற, அவர்கள் வீடு சென்று சேர தாமதம் ஆனது என்று சொல்லவும் வேண்டுமா?!

டிகார முற்கள் பண்ணிரெண்டைத் தொடும் முன், ககனுக்கு இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறியது. அவன், தாராவிடம் காதலை சொன்ன கணம் கூட இவ்வளவு பதற்றம் அடையவில்லை! யோசிக்கவில்லை!! இப்பொழுது அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்தக் கூற பல முறை யோசித்து, போனில் வாழ்த்து செய்தியை அடித்து, பின் அழித்து... மறுபடி அடித்து, மறுபடி அழித்து.. என அவனுடனே போராடிக் கொண்டிருந்தான். பின் கண்ணாடி முன் நின்றவன்,

“ஐயோ... தேவுடா..!! டேய், ககன்... இப்போ நான் என்ன தான் பண்ணனும்?! மெசேஜ் அனுப்பவா? வேண்டாமா? அது எப்படி பர்த்டே விஷ்ஷஸ் சொல்லாம இருக்க?! கல்யாணத்துக்கு அப்புறம் வந்த முதல் பர்த்டேக்கே பண்ணெண்டு மணிக்கு கொஞ்சம் டிலே ஆய்டுச்சுன்னு ஓட ஓட அடிச்சா..!! இப்போ அனுப்பலேன்னா, இருக்கற கோபம் இன்னும் அதிகமாகுமோ..!! ஆனா, அவ தானே பேச கூடாது, மெசேஜ் அனுப்பக் கூடாதுன்னு ரூல்ஸ் போட்டா..?? இப்போ மெசேஜ் அனுப்பினா, கோபம் கூடுமா? குறையுமா?? ஐயையோ.... மண்டை குழம்புதே...!! பேபிம்மா... ஏன் டீ இப்படி படுத்தற.. ராக்ஷஷி..!! ”என்று புலம்பித் தவித்துத் தத்தளித்தவன், ஒருவாறாக முடிவெடுத்து, சரியாக பண்ணிரெண்டு அடிக்கும் பொழுது, செய்தி அனுப்பிவிட்டு அந்த பக்கத்தில் இருந்து வரும் பதிலுக்காக காத்திருக்க தொடங்கினான். தட தடக்கும் இதயத்துடன்.!

மெசேஜ் வந்த ஒலி கேட்ட உடன், பாய்ந்து சென்று ஆவலாக அதை திறந்தவனுக்கு ஏமாற்றமே..! அது மேகன் அனுப்பிய வாழ்த்து செய்தி..! அப்பா அம்மாவுடன் மேகன் டாலியையும் அறையில் வாழ்த்துடன் எதிர் பார்த்தவனுக்கு, பெரியவர்கள் வராததுடன், மேகன் டாலியும் வராமல், சாதாரணமாக மெசேஜ் அனுப்பியது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.! டாலியை அழைக்க மேகன் சென்றதை அறியாதவன் அல்லவா?!

காத்து போன பலூன் போல, சட்டென்று சோர்ந்துவிட்ட மனதுடன் இருந்தவன்.. தாராவிடம் இருந்தும் பதில் ஏதும் வராததால்... அதுவரை இருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொடிப் பொடியாக... உடம்பே ஓய்ந்துவிட்டது போல் மெத்தையில் தொப்பென்று அமர்ந்தான்.! மனதை யாரோ பிசைவதுபோல... எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாதது போல.. காதலாலும் ஏக்கத்தாலும் எதிர்பார்ப்பாலும் நிரம்பி இருந்த மனது, இப்பொழுது எந்த உணர்வும் இல்லாமல், வெறுமையாக இருந்தது..!

“அவதான் என்னை தண்டிக்கறேன்னு கிளம்பிப் போய்டா... நீங்களும் என்னை ஒதுக்கறீங்களா??!!” உணர்வற்று ஒலித்தது ககனின் குரல்.! காயப்பட்ட மனதுடன் விடியலுக்காக காத்திருக்க தொடங்கினான். விடியலில் அவனுக்காக காத்திருக்கும் நிகழ்வுகளை அறியாமல்.!  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.