(Reading time: 18 - 35 minutes)

இன்றும் அவ்வாறே ஒரு ஞாயிறு என்பதால் கால் வைக்க இடம் இல்லாத அளவு கூட்டம்.. ஆனாலும் நிறைய அறிய வகை நாய்கள் துள்ளித் திரிந்து விளையாடுவது கண்ணில்பட்டது..  தாராவும், டாலியும் அடிக்கடி வருபவர்கள் என்பதால் அவர்களுக்கு நட்பு பட்டாளமே உண்டு.. அவர்களில் நாய்க்குட்டிகளும் அவைகளை வளர்க்கும் மானிடர்களும் அடக்கம். அந்த கூட்டத்தில் ககனும், மேகனும் எப்பொழுதாவது சேர்ந்துக் கொள்வார்கள்.

ஞாயிறு என்பது பெண்களுக்கு புத்துணர்வு தினம் என்றால் ஆண்களுக்கு தூங்கும் தினம் அல்லவா..! இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?! அதனால் தாராவும் டாலியும் கூட்டணி அமைத்துக் கொள்வார்கள், இது போன்ற ஒத்துப்போகும் விஷயங்களுக்கு மட்டும். மற்றபடி இருவரும், டாம் அண்ட் ஜெர்ரி தான்.

கூட்டத்தில் நுழைந்து வழியில் வந்த பக் (pug), டாஷ்ஹன்ட் (dachshund), ராட்வைலர் (Rottweiler), பீகல்(beagle), சௌசௌ (chow chow) வகை குட்டி நாய்களை கொஞ்சிக்கொண்டே வந்த ககனும் டாலியும்.. புல் டாக் (bulldog), ஷெப்பர்டு (shepherd), மவுண்டைன் டாக் (mountain dog) போன்ற பெரிய வகை நாய்களிடம் இருந்து சற்று விலகியே நடந்தனர்...

ககனின் பார்வையைக் கண்ட டாலி மிகவும் பதற்றமாக உணர்ந்தாள். சாதாரணமாக இருந்தால் ககன் அதை கவனித்து இருப்பான். அனால் இப்பொழுது ஏனோ மனம் தடுமாறியது.. கவனம் முழுதாக விளையாட்டில் செல்லாமல், சிறிது படபடப்பாக உணர்ந்தவனுக்கு உள்ளுணர்வு ஏதோ உணர்த்த முயன்றதால் அடிக்கடி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டான்.

திடீரென்று, குனிந்து உட்கார்ந்து பப்பியை கொஞ்சிக் கொண்டிருந்த ககனின் தலைமீது ‘டப்’ என்ற சத்தத்துடன் கலர் கலர் ஜிகினாக்கள் கொட்டின.. ஆச்சர்யத்துடன் யாரென்று நிமிர்ந்து பார்த்தால், நமது உதய் கையில் பாப்பருடனும், முகம் எங்கும் புன்னகையுடனும் நின்றுக் கொண்டிருந்தான். ககன் நிமிரவும் இன்னொரு ‘டப்’. இப்பொழுது காவ்யா, உதய்யின் அருகில். சில வினாடிகள் ஆச்சர்யத்தில் உறைந்துபோன ககன், உணர்வு மீண்டதும் செய்த செயல்.. அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டு அந்த பார்க் முழுவதும் பார்வையால் அளந்தான். இவர்கள் இருவரும் இங்கிருந்தால், முக்கியமான நபரான தாரா எங்கே?! அவளும் கண்டிப்பாக அருகில் எங்கோ தான் இருக்கிறாள். இதைத்தான் அவனது உள்ளுணர்வு உணர்த்த முயன்று தோற்றது. மற்றவர்களை கண்டுக்கொள்ளாது மறுபடி அவனின் பேபியை தேடினான், உள்ளம் எங்கும் நடுக்கத்துடன். அனால்? ‘எங்கே அவள்? இங்குதான் இருக்கிறாளா? அப்படியென்றால் எங்கே? கண்ணில் படவில்லையே..’ பார்வையால் சல்லடை போட்டு சலித்தது தான் மிச்சம். ‘அவள் கண்ணில் படவில்லையே..’ என்று சோர்வுடன் மறுபடி இவர்களிடமே திரும்பினான்.

கொஞ்சமாக பூசிய கள்ளப் புன்னகையுடன் நின்றிருந்த மூவரும், இவன் திரும்பியதும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். உதய் சத்தமாக ஒரு விசில் அடித்து, பக்கத்தில் நிற்கும் காவ்யாவிடம் முதுகில் ஒரு அடியையும் வாங்கிக்கொண்டான்.

இப்பொழுது அந்த இடம் எங்கும் அமைதி சூழ்ந்தது. சூழ்ந்த அமைதியை கிழித்துக்கொண்டு அலறியது அந்தப் பாடல். Katy Perry-யின் BIRTHDAY பாடல்.

நிஜமாகவே கண்ணைக் கட்டியது ககனுக்கு.. கண்களில் ஆச்சர்யத்துடன் இப்பொழுது கொஞ்சம் சந்தோசமும் சேர்ந்துக்கொண்டது. கண்டிப்பாக தாரா அருகில் இல்லாமல் இவ்வளவு ஏற்ப்பாடு நடந்திருக்காது என்பதில் அவ்வளவு நம்பிக்கை.! உறுதி..!!

‘Every birthday, every birthday

Every birthday, every day

Boy when you're with me

I'll give you a taste

Make it like your birthday every day

I know you like it sweet

So you can have your cake

Give you something good to celebrate’

என்று பாடல் ஒலித்தபொழுது, கூட்டத்திலிருந்து சிரித்துக்கொண்டே மேகன் கைகளில் ‘கேக்’குடன் வந்து ககன் அருகில் நின்றான்.

‘So make, a wish

I'll make it like your birthday everyday

I'll be, your gift

Give you something good to celebrate

Happy birthday’

என்று ஒலித்து முடித்தபொழுது, அவனின் பெற்றோர், கையில் கிப்ட் டப்பாவுடன் அவனிடம் வந்தனர்...

‘So let me get you in your birthday suit

It's time to bring out the big balloons

Boy when you're with me

I'll give you a taste

‘Make it like your birthday every day

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.