Log in

Login to your account

Username *
Password *
Remember Me
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 13 - அனாமிகா - 5.0 out of 5 based on 1 vote

தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 13 - அனாமிகா

From my diaries

Monday, 25th January

திங்கள் எப்போதுமே எனக்கு பிடிக்காத ஒரு நாள். அதிலும் இன்று நான் இருந்த மனநிலைக்கு வெறுப்போ வெறுப்பாக இருந்தது.

ஆபீஸ் செல்லும் எண்ணமே வர மாட்டேன் என்று அடம் பிடித்தது. அஸ்வினும், விவேக்கும் தூங்கிக் கொண்டிருக்க நான் எனக்கு மட்டும் காபி தயார் செய்து எடுத்துக் கொண்டு பால்கனியில் இருந்த தொங்கும் ஊஞ்சலில் அமர்ந்தேன்.

மனதில் இருந்த குழப்பத்திற்கு ஒரு வழி செய்தால் மட்டுமே வேறு எதிலும் கவனத்தை திருப்ப முடியும் என்று தெளிவாக புரிந்தது.

ஆனால் என் குழப்பம் தீர வழி எதுவுமே இல்லை என்று எனக்கு தோன்றியது.

விவேக் அந்த சுதாவிற்காக பணம் கேட்டது கிட்டத்தட்ட உண்மையை விம் பார் போட்டு விளக்காத குறையாக எனக்கு விளக்கி விட்டது.

ரேகா சொனனது போல அவர் டிரஸ் எடுத்துக் கொடுத்தது கூட குற்ற மனப்பான்மையிலோ அல்லது அவரது தப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகவோ செய்ததாக இருக்க வேண்டும். அந்த டிரெஸ்ஸை செலக்ட் செய்தது கூட அந்த சுதா தானாமே. என்னிடமே அதை சொல்ல வேடனும் என்றால் என்னை எவ்வளவு பெரிய ‘இளிச்ச வாயாக’ நினைத்திருப்பார்

தாலி கட்டிய மனைவிக்கு பிடித்த பெர்ஃப்யூம் வாசனை பிடிக்காதாம் ஆனால் அந்த சுதாவிற்காக என்றால் அதுவும் கூட பரவாயில்லையாம்.

இனி நான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது மட்டுமே எனக்கு யோசிக்க வேண்டிய விஷயம்..

விவேக்கை டிவோர்ஸ் செய்ய வேண்டுமா? அப்படி என்றால் அஸ்வினின் நிலைமை?

அவனால் அம்மா அப்பாவின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியுமா?

ஏன் என்னால் விவேக்கை பிரிவதை தாங்கிக் கொள்ள முடியுமா?

கண்களை இறுக மூடி, மூச்சை இழுத்து விட்டு என்னை ஒரு நிலை படுத்த முயன்றேன். அது எதுவும் எந்த உதவியும் புரியவில்லை.

என்னை நான் ரொமான்டிக் ஆளாக நினைத்ததில்லை, விவேக்கும் அப்படி தான்.

ஆனால் எனக்கே தெரியாமல் உயிர் வாழ வேண்டிய காற்றை உணவை போல விவேக் எனக்கு அத்தியாவசியமானவராக இருக்கிறார் என்பது புரிந்தது.

மனைவிக்கு கணவன் அத்தியாவசியமானவராக இருப்பதில் ரொமான்ஸ் என்ன இருக்கிறது! அதற்காக தானே கல்யாணம் என்று ஒன்றை செய்து வைக்கிறார்கள்.

எதனால் விவேக் என்னை தாண்டி அந்த சுதாவிற்கு மனதில் இடம் கொடுத்தார்?

அதிரடியாக அந்த சுதாவை நேராக சென்று பார்த்து நான்கு கேள்வி கேட்டால் மனசுக்கு திருப்தியாக இருக்கும். அந்த சுதாவை நேராக போய் பார்த்து பேசலாமா என்று யோசித்து விட்டு மனதை மாற்றிக் கொண்டேன்.

விவேக்கிடம் கேள்வி கேட்கவே எனக்கு தைரியமில்லை, இதில் நான் எங்கிருந்து அவளை பார்த்து பேசுவது.

தினத்தந்தி கன்னித்தீவு கதையை போல என் குழப்பம் நீண்டுக் கொண்டே செல்வது புரிய மனதை வேறு பக்கம் திருப்ப முயன்றேன்.

ஒரு நாள் ஆபிஸிற்கு லீவ் போடுவதால் ஒன்றும் குறைந்து போகாது என்று முடிவு செய்தேன். பத்து மணி அளவில் ஷிக்காவிற்கு உடம்பு சரி இல்லை என ஒரு ஈமெயில் அனுப்பி விடலாம்.

பகல் முழுவதும் யோசித்து இன்று ஒரு முடிவு எடுத்து விடுவது என்று முடிவு செய்தேன்.

ழு மணி அளவில் எப்போதும் போல விவேக் எழுந்திருக்கும் அரவம் கேட்டது. வழக்கத்திற்கு மாறாக

“குட் மார்னிங் கும்ஸ்” என்றார்.

நான் திரும்பவும் இல்லை பதில் சொல்லவும் இல்லை. அவர் சொன்னது என் காதில் விழாதது போலவே வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தேன்.

“சுதாக்கு ஹெல்ப் செய்றது உனக்கு பிடிக்கலைன்னு புரியுது. ஆனால் பாவம்மா அவ. இந்த ஒரே ஒரு தடவை உனக்கு பிடிக்காததை செய்றதை தவிர எனக்கு வேற வழி தெரியலை”

அவர் பக்கம் திரும்பி பார்த்து முறைத்தேன்.

“பாங்குல சும்மா இருக்க போற பணம் அவளுக்கு ஹெல்ப் செய்யட்டுமே?”

இன்னும் கொஞ்சம் அதிகமாக முறைத்தேன்.

“புரிஞ்சுக்கோ கும்ஸ்”

அதற்கு மேல் கோபத்தை அடக்க முடியவில்லை.

“என்ன புரிஞ்சுக்கனும்? யார் இந்த சுதா? எப்போ உங்களுக்கு பிரெண்டானா அவ? அவளுக்கு எதுக்கு நீங்க காசு தரனும்?”

“சுதா என்னோட கொலீக். என் ஆபிஸ்ல வேலை செய்றவங்க எல்லோரையும் பத்தி உன் கிட்ட நான் சொல்ல முடியுமா?”

“முடிய வேணாம். அதே மாதிரி அவங்களை கொலீக்கா மட்டும் பாருங்க. நீங்க எதுக்கு ஹெல்ப் செய்யனும்? அவ சொன்னதுக்காக எனக்கு ஏன் சுடிதார் எடுத்து தரனும்?”

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Anamika

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 13 - அனாமிகாmadhumathi9 2017-11-03 06:02
:sad: medhuva eduthu solli irukkalaam. Aan endraal udane kai neettuvathaa? :angry: 3:) :sad: aambilai engira thimir :no: idhu thappu.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 13 - அனாமிகாThenmozhi 2017-11-02 08:43
This was waiting to happen ;-)

Wife-i slap seivathai accept seithuka mudiyalai but ivanga 2 perum life lead seira vithathirku something like this is required-nu enaku thonuthu :-)
Kumutha muthaleye nera pesi irunthirukalam or Vivek ennanu solli irukalam.

Kumutha epadi react seiya poranga? Waiting to read ji :-)
Reply | Reply with quote | Quote

Chitra Poll

Friends, ஒரு ரைட்டருக்கு முதல் கதை ரொம்ப ஸ்பெஷல். But அதுக்கு அப்புறம் எழுதுற கதைகள்ல அந்த முதல் கதையோட எதிர்பார்ப்பும் சேர்ந்துடு. அந்த விதத்துல ஒவ்வொரு ரைட்டரும் அதை எப்படி மேனேஜ் செய்றாங்க என்பதை அவங்களுக்கு உங்க வாய்ஸ் வழியா சொல்ல தான் இந்த ஜாலி polls.

 சித்ரா

முதல்ல நம்ம லிஸ்ட்ல வரவங்க சித்ரா (Chitra). அவங்களோட முதல் கதை 'உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்'. காதல் , குடும்பம், காமெடின்னு நம்ம மனசையும் அள்ளிட்டு போச்சு. அதுக்கு அப்புறம் அவங்க முடிச்ச கதைகளில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதை எதுன்னு அவங்களுக்கு சொல்லுங்களேன்.

டைம் - நான்கு நாட்கள். (22 July 6.30 PM) மறக்காம உங்க வோட்டை பதிவு செய்ங்க!
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From the Past

Promos

From the Past

Contests

Promos

From the Past

Contests

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-


Mor

AN

Eve
23
KVJK

MuMu

NIVV
24
UNES

PPPP

MMV
25
SPK

EMPM

-
26
ISAK

KaNe

NOTUNV
27
-

Ame

-
28
AA

NKU

-
29
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top