(Reading time: 15 - 30 minutes)

செல்லும்போது அவர்கள் மூவரையும் உதய் முறைக்க... அவனை அவர்கள் மூவரும் முறைக்க... பார்ப்பவர்களுக்கு சிரிப்பாக வந்ததென்னவோ உண்மை.!

தய்யின் உளறல் நின்றுவிட்டவுடனே எழுந்து நின்ற ககன்,  பேன்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டே... “So.. This is the moment I was waiting for… The game is UP…!! இவ்வளவு யோசனைக்கும் ஐடியாக்கும் சொந்தக்காரியான என் பொண்டாட்டி எங்க..!!?? அவ சொல்லாம நீங்க இவ்வளவு பண்ணி இருப்பீங்களா?! நோ வே.. சொல்லுங்க.. அந்த ‘பெரிய மேடம்’ வந்தாங்களா..?? இல்ல.. எங்கயோ உட்கார்ந்து உங்கள ஆட்டிவைக்கரங்களா..?! இல்லைனா.. இப்போகூட இங்க தான் இருக்காங்களா?! எனக்கு பார்க்குலையே அவ அங்கதான் இருக்கறமாதிரி பீல்ஆச்சு... அதான் நான் சுத்திமுத்தி கவனிக்க முடியல.. இல்லன்னா.. இதோ... இந்த டாலி என்னை அவ்ளோ நேரம் கண்டுபிடிக்க விடாம டைவர்ட் பண்ண முடியுமா..?! இப்போ எங்க இருக்கா என் பொண்டாட்டி?!” என்று குரலில் உறுதியுடன் அறிந்துக்கொள்ளும் ஆவலும், ‘அவளை நான் அறிவேன்’ என்ற திண்ணமும் கலந்து இருந்தாலும், அதில் வருத்தமே முதன்மையாக இருந்தது..!!

அவனின் உணர்வையும் ஏக்கத்தையும் உணர்ந்தாலும், எதுவும் பதில் கூற முடியாத நிலைமையில் இருந்தனர் அங்கு கூடிஇருந்த அனைவரும்.

என்னவென்று கூறுவார்கள்?! தாரா வந்தாள் என்பது மட்டும் தெரியுமே தவிர, எப்பொழுது? எப்படி? இப்பொழுது எங்கு இருக்கிறாள் என்றெல்லாம் தெரியாதல்லவா.. அவர்களின் பிள்ளைகளும் ஏனோ இந்த விஷயத்தில் முரடாகவே இருந்தனர்..!

அதிலும் தாராவின் பெற்றோர்களுக்கு இன்னும் வேதனை... பெண் மாப்பிள்ளை மீது கோபத்துடன் சென்றாள் என்பதும் அந்தக் கோபத்திற்கு அவர்களும் காரணம் என்பதும் தெரியும்... எவ்வளவு சமாதானம் செய்தும் ஏற்காமல் இவ்வளவு முரண்டு பிடிப்பது இதுவே முதல் முறை என்பதால், அவள் எந்த அளவிற்கு வருத்தத்துடன் சென்றிருப்பாள் என்பதை நினைத்து இவர்களும் வருந்துகிறார்கள்.

ஆனாலும் என்ன தான் செய்ய முடியும்.. தற்காலிகமான பிரிவுதான் என்று அறிவுறுத்தி, ஏகப்பட்ட நிபந்தனைகளுடன்.. கண்ணாம்மூச்சி விளையாடுவது போல்.. மாப்பிள்ளை, அவராக அவளை கண்டுபிடிக்க வேண்டுமாம்.. சிறுபிள்ளை தனமான செயலென்று தலையில் அடித்துக் கொள்வதைத்தவிர வேற எதுவும் செய்ய இயலவில்லை அவர்களால்..

இந்த இக்கட்டான மௌனத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார், ககனின் அம்மா.

“ககன்... இது என்னவிதமான பிஹேவியர்..!? உன் வைப் கூட உனக்கு பிரச்சனைன்னா நீதான் அதை முடிவுக்கு கொண்டுவரணும்.. அதைவிட்டுட்டு  பெரியவங்ககிட்ட கேள்வி கேட்டுகிட்டு... அப்படியே எங்களுக்கு தெரிஞ்சாலும், நாங்க எதுக்கு உனக்கு சொல்லணும்? உன்ன பார்க்கணும்ன்னு இருந்த அவ இங்க வர மாதிரி, நீ அவளை கண்டுபிடிச்சு போ... “என்று கூறிக்கொண்டே போக...

“அம்மா... அம்மா... இப்போ என்னம்மா சொன்னீங்க... தாரா வந்து என்னை பார்த்தாளா....???!! எப்போம்மா...?! ஏன்மா என்கிட்டே சொல்லவே இல்ல... ஐயோ.... மிஸ் பண்ணிட்டேனே...”. படபடவென்று கண்களில் நீர் தலும்பக் கூறினான், ககன்.

அப்பொழுது தான் தான் உளறிவிட்டதை உணர்ந்தவர்... திருட்டு முழியுடன் அங்கிருந்தவர்களை பார்த்தார்... அவருடனே ககனின் பார்வையும் அனைவரையும் எடைபோட... காவ்யாவும் டாலியும் முறைதுக்கொண்டிருக்க, மற்ற அனைவரும் பேய் முழி என்றால் என்ன என்பதற்கு விளக்கமாக முழித்துக் கொண்டிருந்தார்கள்.

நிலைமை எங்கெங்கோ செல்வதை உணர்ந்தவர்... “சரி சரி.. ஸ்ரீசைலம் போகணும்ன்னு மறந்துப் போச்சா எல்லாருக்கும்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. கிளம்புங்க..”என்று குரலில் வழக்கமான ஆளுமையுடன் கூற..

“வாங்க எல்லாரும் டிபன் சாப்டுட்டு போகலாம்...”என்று கடமையே கண்ணாக தாராவின் தாயார் அனைவரையும் கிளப்பிக்கொண்டு போனார்.!

ககன் மட்டும் ஏதோ சிந்தனையுடன் உணவருந்திக் கொண்டிருக்க.. மற்ற அனைவரும் சலசலத்தப்படி இருந்தனர்.

பின் ஒரு முடிவுடன் நிமிர்ந்த ககன்...

“டேய் உதய்.. இப்போவாவது நீ கோவா போக போறியா.. இல்ல ரிட்டன் அடிப்பியா?

ஏதோ ஒன்னு முடிவு பண்ணி சொல்லு.. நான் அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணனும்.. நீ இப்போ போகறதா இருந்தா, நான் கொஞ்ச நாள் ஹோட்டல் பொறுப்பை அம்மாவை பார்த்துக்க சொல்லிட்டு, தாராவ கண்டுபிடிப்பேன்.. இல்லன்ன.. நீ ஹோட்டல பார்த்துக்கோ.. நானே கோவாவும் போய்ட்டு தாராவையும் தேடறேன்.. என்ன சொல்ற...??” என்றான்.

“இல்லை ககன்.. நானே இப்போ கோவா போறேன்.. அங்க போய்ட்டு சிச்சுவேஷன் எப்படின்னு சொல்றேன்.. அதப்பொருத்து நீ பிளான் பண்ணிக்கோ...”என்றான் உதய்.

“உதய் சொல்லறதும் சரி தான் கண்ணா.. இப்போ கொஞ்சம் அவசரப்படாம இரு.. செலிப்பிரிட்டி வெட்டிங்வேற.. They may alter their plans anytime… We should be ready for everything… கோவா பிரான்ச் ஜெனரல் மனேஜர்கிட்ட பேசிப்பாரு... அப்டேட் பண்ணசொல்லு... டிசைனிங் டீம் நாளைக்கு போறாங்க போலருக்கு.. அவங்ககூட கோஆர்டினேட் பண்ணிக்கோ... “என்று சில பல தொழில் விபரங்களைப் பற்றி பேசி அனைவரையும், குறிப்பாக ககனின் கவனத்தை திசை திருப்பினார், அவனது தந்தை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.