(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 06 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

கன், ஹைதராபாத்தில் Bachelor of Hotel Management முடித்துவிட்டு.. பின் ஆஸ்திரேலியாவில் International Hotel Management Masters Degree  படித்து.. மெல்பர்னில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆறுமாத காலம் ட்ரைனிங்கும் முடித்துவிட்டு, அவர்களது ‘Viceroy’ ஹோட்டலில் பணிபுரிந்துக் கொண்டிருந்தக் காலம்.

ஆமாம். சேர்மனின் வாரிசு என்பதை வெளியிடாமல், ஒரு சாதாரண ஊழியனாக, ஹோட்டலின் ஒவ்வொரு துறையிலும் குறைந்தது இரண்டு மாதம் வேலை செய்தால் தான், ஹோட்டலின் பொறுப்பை அவனிடம் தருவதாக, அவன் தந்தை கூறினார். அதுவும் அவன் ஏதாவது ஒரு துறையிலாவது சிறந்து விளங்கி, அவனின் பெயர் பேசப்பட்டால் மட்டுமே.

நிர்வாகத்தை காட்டிலும் ககனுக்கு, உணவு தயாரிப்பதில் அதிகம் நாட்டம் என்பதால் அவனும் ஆர்வமாக அதை ஏற்றுக்கொண்டான். ஆஸ்திரேலியாவில் அனைத்து விதமான வாழ்விற்கும் பழகியவன் என்பதால், உடன் வேலை செய்பவர்களுடன் இவனால் வித்யாசம் பார்க்காமல் பழகவும் முடிந்தது. அவர்களில் ஒருவனாக கலந்து, அவர்களின் பணியில் உள்ள நிறை குறைகளை உணர்ந்துக் கொள்ளவும் முடிந்தது.

இதற்காகத் தானே பல பெரிய வீட்டு பிள்ளைகளும் வெளிநாட்டிற்கு படிக்க செல்கிறார்கள். வாழ்வின் ஏற்றத்தாழ்வு, பணத்தின் அருமை மற்றும் உறவுகளின் பெருமையையும் உணர்ந்துக் கொண்டு புரிந்துக்கொள்ள காலம் சொல்லிக் கொடுக்கும் பயிற்சியும்பாடமும் அல்லவோ வெளிநாட்டு வாழ்வு.!!

ககனும் வாழ்வின் அருமை பெருமைகளை உணர்ந்துக் கொண்டு, ஹோட்டலில் அவனுடன் பணி புரிபவர்களின் கஷ்ட நஷ்டத்தையும் தெரிந்துக்கொள்ள, உபயோகித்துக் கொண்டான், அவன் தந்தை தந்த அருமையான வாய்ப்பை.

அவரின் சொல் போலவே, Chef ககனின், காண்டினெண்டல் வகை ‘The wrapas’ என்கிற உணவுத் திருவிழாவை வெற்றிகரமாக முடித்து, ஹோட்டலின் ‘Food and Bevarage Director’  என்ற பதவியை ஏற்றுக்கொள்ளவும் தயாராகிவிட்டான்.   

ன்று ககனின் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள்.

எப்பொழுதும் போல் இரவு பண்ணிரெண்டு மணிக்கு, அவனின் பெற்றோர்களிடம் செல்லம் கொஞ்சி.. வாழ்த்துப்பெற்று.. விடியற்காலையிலேயே கிளம்பி மூவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தனர்.

இன்னும் சிறிது நேரத்தில் ககனின் பொறுப்பேற்ப்பு விழா நடக்கவிருப்பதால் அவர்கள் கிளம்பி ‘வைசராய்’க்கு சென்றனர். செல்லும் வழியெல்லாம் ககன் ஒரே புலம்பல் தான்.

“என் வாழ்க்கைலயே ரொம்ப முக்கியமான நாள் இன்னிக்கி... மேகி கூட இருந்தா எவ்வளவு சந்தோஷம்மா இருக்கும்... ஹ்ம்ம்... நான் அவனை ரொம்ப மிஸ் பண்றேன் மா.... அட்லீஸ்ட் அவன் ஒரு ப்ளையிங் விசிட் பண்ணியிருக்கலாம்...”

“காலையிலேந்து அறநூறு முறை கேட்டாச்சு இந்த டையலாக்க... ஏன் ககி கண்ணா.. நீ தானே ‘லைப் நல்லா இருக்கு.. ஸ்டாண்டர்ட் நல்லா இருக்கு’ன்னு அவன ஆஸ்திரேலியால படிக்க வர சொன்ன.. அதோட இப்போ இங்க வரேன்னு சொன்னவன வேண்டாம்னு சொன்னது நீ தான்... மறந்துடாத...” என்றார் அவனின் அம்மா.

“ஆமாம் ம்மா.. நான் தான் சொன்னேன்..  நான் பீல் பண்ணத அவன் எதிர்காலத்துக்கு நல்லதுன்னு சொன்னேன்.. அங்க டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் படிப்புல ஆப்ஷன்ஸ் அதிகம்.. ஏன் நீங்க தான் வந்து இருந்தீங்களே.. அங்க படிப்போட ஸ்டான்டர்டை பார்த்தீங்க தானே.. அப்பறம்.. ஒருநாள் கூத்துக்காக அவனை அலையவைக்க வேண்டாமேன்னு பார்த்தேன்... இருந்தாலும் அவனை மிஸ் பண்றதுனால புலம்பறேன்... இது தப்பா... ஷப்பா... முடியலம்மா...” என்று ககன் ஒரு விளக்க உரை அளிக்க...

“ககி... கார்லயே லெக்சர் அடிச்சு டயர்ட் ஆகிடாத... அப்பறம் பங்ஷன்ல அவுட் ஆப் வோர்ட்ஸ் ஆகிடபோற... ரிலாக்ஸ்...”என்று அவனின் தந்தையும் அவனை வார..

“நானா(தெலுங்கில் அப்பா)... நீங்களுமா.... தேவுடா...”என்று ககன் முறைக்க...

பெரியவர்கள் இருவரும் சிரிக்கத் தொடங்கினர்..

“ககி கண்ணா.. Assistant F&B போஸ்ட்டுக்கும் இன்னிக்கு தான் டியூட்டி இன்சார்ஜா?! அப்பா சொன்னங்க...”

“ஆமாம் அம்மா... உதய்ன்னு ஒரு பையன்.. ஆஸில நாங்க ஒரே யுனிவர்சிட்டி தான்.. பார்த்தா தெரியாது.. காமெடி பீஸ் மாதிரி பேசுவான்... ஆனா பயங்கர அறிவாளி.. எக்ஸ்ட்ரீம்லி டலன்ட்டேட்... மெல்பர்ன்ல கூட ஒரே ஹோட்டல்ல தான் வொர்க் பண்ணோம்.. நான் இங்க வந்துட்டேன்.. அவன் அங்கேயே கன்டிநியூ பண்ணினான்.. அவன் தான் Assistant F&B ஆக வரபோறான்...” என்று ககன் உதய்யை பற்றி சொல்ல ஆரம்பிக்க... இடையிட்ட அவன் அம்மா,

“நீ சொல்றத பார்த்தா அவனுக்கும் உன் வயசுதான் இருக்கும் போல.. Assistant F&B போஸ்ட்டுக்கு சரியா வருவானா... அதுக்கு முன் அனுபவம் வேண்டாமா..?!” என்றார்.

அதற்கு பதில் வந்தது ககனின் தந்தையிடம் இருந்து.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.