(Reading time: 16 - 32 minutes)

“ஆமாம் டார்லிங்.. இந்த போஸ்ட்க்கு ககன் முதல்ல உதய் பத்தி சொல்லி,  நம்ப ஹோட்டல்ல வேலைக்கு கேட்டப்போ நானும் இப்படி தான் யோசிச்சேன்.. சரி நேர்ல பாத்து பண்ணலாம்ன்னு வரசொன்னேன்.. வந்த பையன் ரொம்ப சின்ன வயசா தெரிஞ்சான்.. அவ்வளோ பெரிய போஸ்ட்டுக்கு தேவையான மெச்சூரிட்டி இருக்குமான்னு இருந்தது.. பேச்சு கூட காலேஜ் பையன் மாதிரி தான்.. கல கலன்னு பேசினான்.. ஆனா டாபிக், வேலைன்னு வந்தப்பறம் ஆளு அப்படியே மாறிட்டான்... பயங்கர சீரியஸா போச்சு டிஸ்க்ஷன்.. மெல்பர்ன்ல ரெஸ்டாரண்ட் மேனேஜராக சேர்ந்து இப்போ வேலைய விடும்போது  Assistant F&B க்கு ரெபர் பண்ணி இருக்காங்க... ரெண்டு வருஷத்துல அசாத்ய வளர்ச்சி.. அது எப்படின்னு அவன்கூட ஹோட்டல்ல சுத்தி பார்க்கும்போது புரிஞ்சிது.. பையன் சூப்பர் ஸ்மார்ட்... அதான் உடனே செலெக்ட் பண்ணி, ரெண்டு மாசம் ட்ரைனிங் எடுத்த பிறகு, ககன்கூடவே ஜாயின் பண்ண சொல்லிட்டேன்.. நீயே நேர்ல பாத்துட்டு சொல்லு.. பையன் எப்படின்னு..”என்று விளக்க உரை அளித்தார்,

வரின் சொல்போலவே,தய்யின் கலகல பேச்சும், துரு துரு கண்களும் மிகவும் பிடித்துவிட்டது, ககனின் அம்மாவிற்கு. சட்டென்று இருவருக்கும் இடையே ஒரு பாசபிணைப்பு ஏற்பட்டுவிட்டது, ஏனோ.! சிறிய விழாவாக நடந்த பதவியேற்ப்பு மற்றும் ககனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு முடிந்தவுடன் பேச ஆரம்பித்த இருவரும், பேசிக்கொண்டே இருந்தனர்.

“உன்கிட்ட பேசும்போது எனக்கு என்னவோ குழந்தைகிட்ட பேசற மாதிரி இருக்கு, உதய். துறு துறுன்னு இருக்க... இப்போவே இப்படின்னா, நீ குழந்தையா இருக்கும்போது எப்படி இருந்தியோ...! உன்னை உங்க அம்மா எப்படி சமாளிச்சாங்களோ...!! ஷி இஸ் கிரேட்... அவங்க நம்பர் தாயேன்... நாங்களும் பேசி பழகிக்கறோம்.. என்ன பண்றாங்க அம்மா அப்பா?” என்று கேட்க..

“கண்டிப்பா ஆன்டி.. அப்பா பப்ளிக் வொர்க்ஸ் டிபார்ட்மென்ட். இப்போ தான் ரிட்டையர் ஆனார்... அம்மா கெஸ்ட் லெக்ச்சரர் - சைகாலாஜி. நான் ஒரு பையன் தான். நானும் ரொம்ப வருஷமா ஆஸி-லையே இருந்துட்டேன்.. ரொம்ப மிஸ் பண்ணின பில் எங்க எல்லாருக்கும்.. அதான் அவங்களும் இங்கயே ஷிபிட் ஆகறதா பிளான்... இனிமே தான் வீடு பார்க்கணும் ஆன்டி.. அதோட இங்க வந்தா அம்மாக்கு மொழி பிரச்சனை இருக்கும்.. அதான், நீங்க கொஞ்சம் மாரல் சப்போர்ட் தந்தீங்கன்னா......”என்று ககனும் இழுக்க...

“அடடா... ரொம்ப நல்லதா போச்சு... அவங்களும் இங்க வராங்களா.. எனக்கும் கம்பெனி கிடைக்கும். ரொம்ப சந்தோஷம்..!! நம்ப வீடு இருக்கற ஏரியாலையே பாத்துட்டாப்போச்சு....”

இடைப்புகுந்த ககன், “போதுமே.. விட்டா நாள் முழுக்க பேசிட்டே இருப்பீங்க போல... ஹே டியூட்.... நீ வரியா இல்லையா இப்போ?!” என்று கொஞ்சமே கொஞ்சம் கடுப்புடன் கேட்க..

“எங்க டியூட்?!” என்று உதய் கேட்டுகொண்டிருக்கும்  பொழுதே, பொறுமை இழந்த ககன்   

“அப்பறமா பார்போம் ம்மா... “என்று கூறிக்கொண்டே உதய்யின் கையை பிடித்து இழுத்துப் போனான். உதய் அவரிடம் விடை பெற்றுக்கொள்ளக் கூட அவகாசம் தராமல்.! புன்னகையுடன் கலந்த தலை அசைப்பில் முடித்துக்கொண்டனர் இருவரும்.!!

“எங்க ககன் இழுத்துட்டு போற... ஏதாவது பிகர் பார்த்தியா..? அன்னிக்கு சிக்னல்ல சிக்னல் தந்துச்சே.. அந்த பொண்ணா?!”என்று ஆர்வத்தில் உதய் கேட்க...

சடன் பிரேக் போட்டாற்போல் நின்றுவிட்டான்... ககன்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம்... மனதில் அவ்வப்பொழுது தலைக்காட்டும் அவளின் பிம்பமும்... மதுரமான குரலும்.. இப்பொழுது.. உதய்யின் ஒரு வார்த்தையில் நீர்க்குமிழி போல பொலக் என்று மேல் எழுந்தது..!! ஏனோ அவளின் முகமுடியிட்ட முகமே கண் முன் வந்தது... அவளின் முகம் காணவேண்டும் என்கிற அவா கட்டுக்கடங்காமல் பொங்கிப் பெருகியது..!!

“என்ன ஆச்சு ககன்...? ஏன் இப்படி நின்னுட்ட..? எங்க கூடிட்டுபோற என்னை...?”என்று உதய் அடுக்கிய கேள்விகளில் உணர்வுகளில் இருந்து வெளி வந்த ககன்.. பயங்கரமாக முறைத்தான், உதய்யை.

ஒன்றும் புரியாமல் முழத்த உதய்யின் மண்டையில், சிகப்பு.. மஞ்சள்.. என்று மெது மெதுவாக விளக்கு எரிந்து கிடைசியில் பச்சைக்கு வந்தது.

“டேய்... மாமா... சொல்லவே இல்ல... இன்னும் அந்த பொண்ணு உன் மனசுலேர்ந்து போகலையா...? ஒட்டிக்கிட்டாளா??  அட்ராசக்க.... சம... கடைசில நீயும் விழுந்துட்டியா...??!!! ஆனா எப்படி டா...? அந்த பொண்ணோட முகத்தைகூட பார்க்கலையே நாம... !!!”  என்று உதய் உற்சாகத்தில் பேசிக்கொண்டே போக...... ககனின் முறைப்பு மட்டும் மாறவே இல்லை...

“இப்போ எதுக்கு என்னை முறைக்கற...?” என்று ககனுக்கு நிகராக உதய்யும் முறைத்தான்.

“இப்போ எதுக்கு அந்த பொண்ண பத்தி நீ பேசின? அதாவது அவள எதுக்கு நீ இன்னும் ஞாபகம் வெச்சிருக்க?!” என்றான் உஷ்ணமாக.!

கண்கள் மின்ன ஒரு வினாடி நண்பனை பார்த்த உதய், பதில் ஒன்றும் கூறாமல், முகத்தை சோகமாக ஆக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இப்பொழுது ஒன்றும் புரியாமல் முழிப்பது ககனின் முறை ஆனது.!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.