(Reading time: 20 - 40 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 03 - தேவிஸ்ரீ

En nilavu devathai

மாலை 5.00 மணி. அமிர்தா கனவிலிருந்து தூக்கம் கலைந்து திடுக்கிட்டு  கண்களை திறந்தாள். எவ்வளவு முயன்றும்  பழைய நினைவுகள் அவளை விட்டு விலகுவதாக இல்லை. சங்குவை நினைத்து கவலைப்பட்டவள், “அம்மு” எனும் யமுனாவின் குரல் கேட்டு அவள்புறம் திரும்பினாள்..

“என்னாச்சு மா. ஏன் அழற?..”

“ஒன்னும் இல்லடா குட்டி. நீ நல்லா தூங்கினயா? பசிக்குதாடா? பால் கொண்டு வரவா?..”

“ம்ம், என்றவள்.. நாம ரெடி ஆகிட்டு கீழே போய் விளையாடலாமா அம்மு..”

“ம்ம் சரிடா.. வா” என இருவரும் ரெடி ஆகினர்..

“அம்மு.. இந்த ரூம் அழகா இருக்கில்ல..”

“ஆமான்டா குட்டி..” என்ற அமிர்தா தனக்கு கொடுக்கப்பட்ட அறையை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள், மிக பிரம்மாண்டமான  படுக்கைஅறை... அவ்வறையை ஒட்டி உடைமாற்றும் அறை, அதனுள் மிகபெரிய நீண்ட வரிசையில் வார்ட்ரோப் அதை ஒட்டி குளியலறை சகல வசதிகளும் கொண்டதாக இருந்தது. அவள் இருந்த வீட்டிலும் இவை உண்டுதான், ஆனாலும் இது கலைநயத்தோடு வடிவமைக்கபட்டிருந்தது. பின் யமுனாவை எழுப்பி இருவரும் குளித்து முடித்தனர்,  அமிர்தாவுக்கு எப்போதும்  மேக்கப் போடுவது பிடிக்காது, ஏதேனும் விசேசமெனில் அளவாக செய்து கொள்வாள் அதுவும் அவள் அம்மா திட்டிய பிறகுதான், அதை நினைத்து பார்த்த அவள் அம்மாவை நினைத்து கண்ணீர் சிந்தினாள். பின் யமுனா இருப்பதை உணர்ந்து கண்களை துடைத்து கொண்டாள்.. பின் அவள் கண்களுக்கு மை தீட்டினாள், ஆகாய நிறத்தில் டிசைனர் சுடிதார், காதில் வைரத்தோடு, கையில் பிரேஸ்லெட், french braid hair style இல் அமிர்தா ரெடி.யமுனா தனக்கு சிண்டு போடுவது  பிடிக்கும் என்பதால் சிண்டு போட்டு பொட்டு வைத்து மெரூன் நிற கவுனுடன் யமுனாவும் ரெடி.

“யம்மு குட்டி கீழே போலாமா?..”

“போலாம் அம்மு குட்டி என சிரித்தாள்...”

“நான் உனக்கு குட்டியா” என அமிர்தா இடுப்பில் கை வைத்து பொய்யாய் முறைக்க,

“ஆமாம் அம்மா” என யமுனா புன்னகைக்க, அதை கேட்ட அமிர்தா அவளை தூக்கி முத்தம் கொடுத்து கொண்டு புன்னகைத்தாள்.

“எங்களுக்கு” என கோரஸாக குரல் ஒலிக்க.. திரும்பினால் அங்கு மின்விழி,மீன்விழி யுடன் ஆதினியும் சந்திரனும் நின்று கொண்டு இருந்தனர்.

“வாங்க என் அருமை உடன்பிறப்புகளே.. என்ன எங்களுக்கு?....” என அமிர்தா வினவ.. அனைவரும், “முத்தம் யம்முக்கு தானா?..” என கேலியாக சிரித்தனர்.

“முதல்ல உள்ள வாங்க, ஆழினி, சந்திரன் நல்லா இருக்கிங்களா?..” என அவள் வினவ

“நல்லா இருக்கோம் அக்கா” என்றனர், பின் சந்திரன்,  “நல்லவேலை அக்கா நீங்க இங்க வந்துட்டிகிங்க, இந்த பிசாசுங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க அக்கா, இவங்க இம்சை தாங்க முடியல” என புலம்பவும், அமிர்தா, “எனக்கிருக்கறது ஒரே தம்பி, உனக்கு சப்போர்ட் பண்ணாம யாருக்கு பண்ணுவேன், கவலைய விடுப்பா” என்றாள்.

“அக்கா இது சீட்டிங். நாங்க அண்ணா கிட்ட கம்பிளைன்ட் பண்ண போறோம்” எனவும்,

“அண்ணா வந்துட்டாரா?”- அமிர்தா

;ஐயயோ அக்கா, நாங்க மறந்துட்டோம், அண்ணா வந்துட்டாரு, அதான் தாத்தா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்கனு பார்த்துட்டு வர சொன்னாரு , தூங்கிருந்தா எழுப்ப வேண்டாம், முழிச்சிருந்தா மட்டும் கூட்டிட்டு வர சொன்னார். வாங்க” என அவளை இழுத்துக் கொண்டு ஓடினர், சந்திரன் யமுனாவை தூக்கி கொண்டு அவர்களுக்கு பின்னே சென்றான்,

யமுனா சந்திரனிடம் “நான் உங்கள என்னானு கூப்பிடனும்” என கேட்க,

அவன் “நான் அமிர்தா அக்காக்கு தம்பி” என கூறியதும்,

அவள் “அப்படினா நீங்க எனக்கு மாமா” என அவள் கூற,

“இதெல்லாம் உனக்கு தெரியுமா” என கேட்டான், “ம்ம்,அம்மா சொல்லி கொடுத்துருக்காங்க” என்றாள்.

அமிர்தா தன் சகோதரிகளுடன் படிகளில் இறங்கி வந்தாள், பானு அத்தை முல்லை சரத்தை அவளுக்கும் யமுனாவுக்கும் கொடுத்து வைத்துக்கோம்மா, நம் தோட்டத்தில் பூத்தது என்றாள்,

பூவை இருவரும் வைத்துகொண்டு அபியுக்தன் பக்கம் திரும்பினர்.

“அண்ணா. நல்லாருக்கிங்களா?..”

“நல்லாருக்கேன் டா, நீ திரும்பி வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி மா, வா டீ குடிக்கலாம்.!”

“நான் டீ குடிக்கமாட்டேன் அண்ணா”

“சரி இருடா, கண்ணம்மாகிட்ட சொல்லி உனக்கும் யமுனாக்கும் பால் கொண்டு வர சொல்றேன்” என கண்ணம்மாவை பால் கொண்டு வர செய்து குடிக்கவைத்தவன் பின்..

“நீ சொல்லுமா, என்ன படிச்சிருக்கடா?..”

“நான் B.sc computer science அண்ணா.”

“சரிம்மா, மேல படிக்கிறயா? விருப்பம் இருந்தா சொல்லுடா, காலேஜில் சேர்த்து விடரேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.