(Reading time: 20 - 40 minutes)

“இதுக்கே அலறுனா எப்படி, உன் சித்திங்க,அத்தை எல்லாம் என்ன வாங்கிருக்காங்கனு கேளு” என பாட்டி சொல்லவும், “என்ன வாங்கிருக்கிங்க” என ஒருமாதிரி குரலில் சந்தேகமாக கேட்டாள்..

“ஒன்னுமில்லடா பட்டுபுடவைதான்” என அத்தை கூறவும்,  வாட்... என கத்தினாள். “எனக்கு அதுவும் கட்ட தெரியாது, பிளீஸ் நான் நாளைக்கு சுடி போட்டுகிறேனே ப்ளீஸ் ப்ளிஸ்..”

“அதெல்லாம் முடியாது. நீ குழந்தை இல்லை, உனக்கு 20 வயசு ஆகுது, கோவிலுக்கு நீ இதைதான் போடனும்” என நந்தினி கண்டிப்பாக கூறினார்.

பாட்டி தன் பேத்தியிடம், “தங்கம் நீ இதெல்லாம் போட்டு நாங்க பார்க்கனும்-னு ஆசையா இருக்குடா, எனக்காகடா” எனவும், “சரி பாட்டி” என்றாள் வருத்தத்துடன். மற்ற பேத்தி பேரனை அழைத்து அவர்களுக்கும் புதுத்துணிகளை தந்தனர், பின் பாட்டி அமிர்தாவிடம்,

“இதில் உன் சித்திங்க உனக்காக தாவணியும் உன் அத்தை உனக்கு எடுத்த பட்டு புடவையும் இருக்கு, நீ முதலில் கட்டுகிற புடவை அத்தை எடுத்துதர புடவையா இருக்கனும்-னு பானு வாங்கிருக்கா. அப்புறம் இதில் அதுக்கு தேவையான ஜூவல்ஸ் இருக்கு, இந்த பையில் யமுனாக்கு நாலஞ்சு பட்டுபாவாடை சட்டையும் நகையும் இருக்கு, கோவிலில் 2நாள் பங்ஷன் இருக்கு. இதுல 3செட் எடுத்து வைச்சிக்க. யமுனா டிரஸ் அளவும் செக் பண்ணிக்கோ. உனக்கும் செக் செய்துகோ” எனவும் அறைக்கு சென்ற அமிர்தா யோசித்தாள். அவளுக்கு புடவை கட்டவும் வராது யாரையும் கட்டவும் விடவிட்டதில்லை, பொதுவாக அவள் இந்தவிசயத்தில் மிகவும் கூச்சபடுபவள், அப்படி இருக்க என்ன செய்வது என யோசித்துப் பின் புடவையை விட்டுவிட்டு தாவணியை மட்டும் எடுத்து வைத்தாள்,  பின் டின்னருக்காக கீழே சென்றாள்.

அனைவரும் சாப்பிட்ட பின் ஹாலில் அமர்ந்தனர், வாசு தன் மகன் நம்பருக்கு டயல் செய்தார்.

தேநேரம் சென்னை ஆபிஸில் மீட்டிங் ஹாலில் முக்கியமான மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு பணிபுரியும்  பி.எ வான அருண் மனதிற்குள் புலம்பி கொண்டான், பாஸின் அப்பா தன் மகனுடன் பேசவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். பாஸோ முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறார், இப்போது உள்ளே போனால் அவன் பாஸின் கோபத்திற்கு ஆளாக நேரிடும், பாஸின் அப்பா சொல்வதையும் கேட்டுதான் ஆகவேண்டும்,ஏனெனில் அவரும் இந்த கம்பெனியின் ஒன் ஆப் த டைரக்டர். மனதினுள் புலம்பியபடியே மீட்டிங் ஹாலின் அறைகதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான், அங்கு பாஸை பார்த்தால் கண்களாலே அவனை எரித்து விடுவதைபோல் முறைக்க, தைரியத்தை வரவைத்துகொண்டு பாஸ் அருகில் சென்றான்.

“பாஸ், உங்க அப்பா முக்கியமான விசயமா பேசனும்னு..” என முழுதாக சொல்லி முடிப்பதற்குள்,

“கெட் அவுட்” என அடிக்குரலில் சீறினான் அவனுடைய பாஸ். நினைத்தேன் இதுதான் நடக்கும்னு என புலம்பியபடி வாசுதேவனிடம் விவரத்தை தெரிவித்தான்.

ங்கு வாசுதேவனோ “இப்போது அவன வரசொல்லியே ஆகனுமே, இல்லைனா நாளைக்கு யுஎஸ் மீட்டிங் இருக்கிறதுனால அங்க போயிடுவான்” எனகூற, அதை கேட்ட நந்தினி, “இருங்க அண்ணா, நான் அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்” என்றார், பின் அருணுக்கு கால் செய்து தன் மருமகனிடம் போனை கொடுக்க சொல்ல, அவனும் மறுபடியும் கடவுளை வேண்டிக் கொண்டு உள்ளே சென்றான்.

“பாஸ், உங்க நந்தினிஅத்தை முக்கியமான விசயமா கால் பண்ணிருக்காங்க” எனவும், அங்கிருந்த அனைவருக்கும் “எக்ஸ்கியூஸ்மீ” என கூறிவிட்டு வெளியே வந்து அத்தையுடன் பேச ஆரம்பித்தான்.

“அத்தை நல்லாருக்கிங்கதான?உடம்பு பரவாயில்லையா இப்போ? முக்கியமான விசயம்னு பேசனும்னு சொன்னிங்களாம்!..”

“நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். நீ நல்லாருக்கியா பா?..”

“நல்லாருக்கேன் அத்தை.”

“அப்புறம் உனக்கொரு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு. நீ சீக்கிரம் புறப்பட்டு வா.”

“என்ன சர்ப்ரைஸ் அத்தை?..”

“அது நீ நேரில் தான் பார்க்க முடியும், அப்புறம் நாளைக்கு  குலதெய்வகோவிலுக்கு குடும்பத்தோடு போக தாத்தா  முடிவு எடுத்துருக்காரு. நீயும் மித்ராவும் உடனே கிளம்பி வாங்கப்பா.”

“ஓ! எனக்கு வேலை இருக்கே, ஆனா தாத்தா முடிவெடுத்துடாரு, ஒன்னு பண்றேன், நான் நாளைக்கு நேரா கோவிலுக்கே வந்துடறேன். மித்ராவை முடிந்தால் இப்பவே அனுப்பி விடரேன்..”

“சரிப்பா, நேரமா வந்துடு, கோவிலுக்கு வரும்போது எந்த ட்ரஸில் வரனும்னு ஞாபகம் இருக்கிறது தான?..”

“இருக்கு அத்தை, நான் வந்துடறேன், போன் வைச்சுடறேன். எல்லாரையும் கேட்டதா சொல்லிடுங்க, பை!..”

“பை டா தங்கம்!..”

போனை வைத்து திரும்பியவன் அருணை அழைத்து நாளை புரோகிராமை கேன்சல் செய்ய சொல்லிவிட்டு மீட்டிங் ஹாலை நோக்கி நடந்தான் விக்ரம் எனும் விக்ரம் வாசுதேவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.