(Reading time: 20 - 40 minutes)

“சரி மாமா. அமிர்தா வளர்ப்பு குடும்ப விவரம் சொல்லுங்க”

“இந்த விவரங்கள் எதும் யார்கிட்டயும் சொல்லகூடாதுனு சத்தியம் வாங்கிட்டா பா..”

“ஓகே, நானே கண்டுபிடித்து கொள்கிறேன்.”

“அப்புறம் முக்கியமான விசயம். அமிர்தா பிறந்தப்போ தற்செயலாக இடம்மாறல” என்றவர் சில விசயங்களை கூறினார்(சஸ்பெண்ஸ்)

“இதை யாரு சொன்னது?..”

“தாயம்மா..”

“அவங்கள எங்க பார்த்திங்க?..”

“அமிர்தா கூட இத்தனை நாளாய் தாயம்மா இருந்திருக்காங்க, அவங்கதான் அமிர்தாவை பத்திரமா பாத்துகிட்டாங்க.”

“இப்ப அவங்க எங்க?”

“ஏதோ முக்கியமான வேலை இருக்காம், அது முடிந்ததும் நல்ல செய்தியோட வருவேனு சொன்னாங்க, என்னனு சொல்லல.”

“ம்ம்ம், நிறைய நடந்துடுச்சி. இனி அமிர்தாவை பத்திரமா பார்த்து கொள்ளனும். நான் இதுக்கு பின்னாடி யார் இருக்காங்கனு கண்டுபிடிக்கிறேன்.”

“சரிப்பா, இப்போது தான் நிம்மதியாக இருக்கு, ஆமா, நீ எப்படி இங்க?..”

“தாத்தாதான் கோவில் போக கூப்பிட்டாரு, அப்புறம் உங்க ஆசைப்படி நான் இங்க தான் வொர்க் பண்ணபோறேன். வழக்கம்போல டிரான்ஸ்பர் குடுத்தாங்க, நான்தான் இங்கயே டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டேன். ஓகே, இப்போது வீட்டுக்கு போலாம், அமிர்தாவை பார்க்கனும்.”

சரிப்பா என்றவர் காரை எடுத்தார்.

ங்கு அமிர்தாவோ தன்னை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை பற்றி அறியாமல் ஒருவருக்கு கால் செய்து கொண்டிருந்தாள், கால் மறுமுனையில் எடுக்க..

“எங்க போனிங்க தாயம்மா, ஒரு போன் பண்ணமாட்டிங்களா? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?..”

“ஸாரிடா, இங்க நெட்வொர்க் சரி இல்ல, நல்லாருக்கியாடா.”

“நீங்க எங்க இருக்கிங்க? எப்போது இங்க வரீங்க?..”

“நான் சீக்கிரம் வறேன், நீ பத்திரமாய் இரு. யமுனாவ பாத்துக்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு, நான் அப்புறம் பேசறேன், பை.”

ஆனா, தாயம்மா? என்றவள் போன்கால் கட் ஆகிவிடவே  கோபமடைந்தாள். “ஏன் இப்படி பண்றீங்க தாயம்மா” என்றவள் கீழே ஹாலுக்கு சென்றாள். அங்கு அப்போதுதான் வந்த புகழ் அமிர்தாவை பார்த்து “ஹாய் ஸ்வீட்டி” என்றான். அவளோ அவனை வேற்றுகிரகவாசியைபோல் பார்க்க,

“வந்தஉடனே ஆரம்பிச்சிட்டயா? இவன் என் friend அருணாச்சலத்தோட பையன் மா, பேரு புகழேந்தி. IPS பாஸ்பண்ணி வேலைக்கு போய் 3 வருசம் ஆச்சு. இந்தவீட்டு மாப்பிள்ளை ஆக போறான்” என்றார் வாசு அமிர்தாவிடம். பின் அவன்புறம் திரும்பியவர், “அமிர்தா உனக்கு தங்கைமுறை. பார்த்து பேசு.”

“போங்க மாமா, நல்ல பொண்ணுங்க எல்லாம் எனக்கு தங்கை ஆக்கிடறீங்க. வாயாடி ஒருத்தியை என் தலைல கட்டுறீங்க..”

“பார்த்து பேசு தம்பி, என் பொண்ணு வந்துட போறா..”

“அவதான் இங்க இல்லையே.. அந்த லூச விடுங்க மாமா..”

“எந்த லூசு மிஸ்டர் புகழேந்தி?..” என குரல் கேட்கவும் அனைவரும் திரும்ப, அங்கு வாசலில் மித்ரா கை கட்டிக்கொண்டு புகழைப் பார்த்து முறைத்து கொண்டிருந்தாள்..

“ஹேய். மிது செல்லம். எப்ப வந்த?..”

“பேச்ச மாத்தாத, யாரு லூசு? நானா?..”

“இல்லடா செல்லம், உன்னைப்போய் சொல்வேனா? நான் என்னைதான் லூசுனு சொல்லிட்டு இருந்தேன். உன் அப்பாவையே கேளு.”

அவனை கோபத்துடன் பார்த்தவள் தன் தந்தையை நோக்கி “நல்லாருக்கிங்களா அப்பா” என வினவினாள்.

“நல்லாருக்கேன்டா? நீ ஏன்டா இளச்சிட்ட.. நல்லா சாப்பிடறயா? இல்லயா? நீ இப்ப எதுக்கு வேலைக்கு போயி இப்படி உடம்பு கெடுத்துகிற. இனி நீ இங்க அப்பா கூடதான் இருக்கனும், சரியா?..”

“சரிப்பா.”

“செல்லம் எனக்கு இங்கயே டிரான்ஸ்பர் கிடைச்சிடுச்சு. இனி நானும் இங்கதான் இருப்பேன்” என புகழ் கூற..

“அப்ப நான் சென்னை போறேன்.”

“ஏன்டா?..”

“உன் இம்சைய யார் தாங்கறது?..”

“ஏய் நான் உன் வருங்கால கணவன்டீ பார்த்து பேசு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.