(Reading time: 20 - 40 minutes)

விக்ரம். வயது 27. தன் தந்தையின் ஏற்றுமதி&இறக்குமதி businessயை சரிவிலிருந்து தூக்கி நிறுத்தி, வெற்றிகரமாக நடத்தி கொண்டிருப்பவன். இதில் சர்க்கரை, காப்பிக்கொட்டை, தேயிலை, மிளகு, முந்திரிப்பருப்பு ஆகியவை கொள்முதல் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உணவுப்பொருள்கள், எந்திர சாதனங்கள், இரசாயனப் பொருள்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் முதலியவற்றைப் பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விக்ரமைபற்றி கூறவேண்டும் எனில் குடும்பத்தினரிடம் மிகுந்த அன்பு உண்டு, ஆனால் அவன் அத்தை நந்தினி என்றால் அவனுக்கு உயிர். அவர் சொல்லை இதுவரை தட்டியதில்லை, அத்தை என்ன சொன்னாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு செய்வான். அவனுக்கு அவன் குடும்பத்தினரை மிகவும் பிடிக்கும். அவனுக்கு அங்கு சொந்தமாக சில எஸ்டேட்களும் உண்டு. ரொம்பநாள் ஆகிவிட்டது அவன் குடும்பத்தினரை பார்த்து.எனவே மகிழ்ச்சியுடன் நாளை கிளம்ப தயாரானான். பின் மித்ரா வை மொபைலில் அழைத்தான்..

“மித்து என்னடா பண்ற?..”

“நான் என்ன பண்ணா உங்களுக்கு என்ன?, எதுக்கு கால் பண்ணீங்க மிஸ்டர் விக்ரம் வாசுதேவன்?..”

“என்னடா இன்னும் என் மேல் கோபமா? நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன், அதை நினைத்து இன்று வரை வருத்தப்படுரேன்டா, என்னை மன்னிச்சிடுடா!..”

“உங்க வருத்தத்தையும், மன்னிப்பையும் தூக்கி குப்பையில போடுங்க, யாருக்கு வேணும் உங்க மன்னிப்பு.. ஒரு மனசை உடைத்து உயிரோடு கொண்ணுட்டிங்க.. இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?..”

“ப்ளீஸ்டா நான் சொல்றத..”

“இப்ப எதுக்காக கால் பண்ணிங்க?..”

“தாத்தா குலதெய்வ கோவிலுக்கு நம்மை 2பேரையும் வரசொன்னதா அத்தை கால் பண்ணாங்க.”

“நான் வரலை.”

“ப்ளீஸ்டா தாத்தா வருத்தப்படுவாரு. நீயும் வாடா!..”

“சரி தாத்தாவுக்காக போறேன்..”

“இப்பவே கிளம்பறயா? டிக்கெட் புக் பண்றேன்”.

“அது நானே பண்ணிக்கிறேன், எனக்காக யாரும் எதும் செய்ய வேண்டாம், பை.”

மித்ரா கால் கட் செய்து கண்ணீருடன் போனை வெறித்தாள்.. ஊருக்கு செல்ல டிக்கெட் புக் செய்தவள் பேக் செய்ய ஆரம்பித்தாள்.

டுத்தநாள் காலை வாசுதேவன் ரொம்ப நேரமாக வீட்டின் வெளியே நின்றுகொண்டு புகழேந்திக்கு கால் செய்து கொண்டிருந்தார். லைன் கிடைக்கவே இல்லை, கடைசியில் லைன் போகவும் பேசஆரம்பித்தார்.

“புகழ், நீ உடனே இங்க வரனுமே, முடிந்தால் இங்கேயே டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடறயா?..”

“வாவ் மாமா.. நடக்கபோறத எப்படி இவ்வளவு கரெக்ட்ஆ சொல்றீங்க?..”

“என்ன சொல்றப்பா?”

“கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்க,”

“ஹே!.. எப்பப்பா வந்த?..” என கால் கட் செய்தவர் என்கூட வா என காரில் ஏற்றி அழைத்து சென்றார்.

“ஆனா, வீட்டுக்கு உள்ளகூட போகல.. இப்போது எங்க போறோம்?..”

“நான் முக்கியமான விசயம் பேசனும்” என சாலை ஓரத்தில் காரை நிறுத்தினார்.

“சொல்லுங்க மாமா..”

“நந்தினியின் பொண்ணு உயிரோடு தான் இருக்கிறாள், நான் தான் கண்டுபிடித்து கூட்டிக்கொண்டு வந்தேன்” என நடந்ததை கூறினார்.

“என்ன சொல்றீங்க மாமா!...”

“நான் சொல்றத முதலில் முழுதாக கேள், அவள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவள கொல்ல பலமுறை டிரை பண்ணிருக்காங்க, அவள வளர்த்த குடும்பம் ஆக்சிடெண்ட்-ல இறந்துருக்காங்க. ஆனா அவங்க தற்செயலாக இறக்கலை. இட்ஸ் வெல் பிளான்டு மர்டர். அவங்க குடும்பத்தோடு காரில் போயிருந்தபோது அமிர்தாவும் யமுனாவும் காரை விட்டு இறங்கிருக்காங்க. அது தெரியாம கொலைகாரன் அவங்க காரை லாரி ஏத்தி கொண்ணுருக்காங்க. அது அமிர்தாவுக்காக போட்ட பிளான், அவ தப்பிச்சிட்டா.. அவளுக்கு ஆபத்து இருக்கு. அவள யாரு கொல்ல நினைக்கிறாங்கனு கண்டுபிடிக்கனும், ஹெல்ப் பண்ணுப்பா..”

“கண்டிப்பாக மாமா, ஆனா இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?..”

“அந்த கேஸ்சை விசாரித்த இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்துட்டாரு, ஆனா அது யாருனு கண்டுபிடிக்கறதுக்குள்ள அவரை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. அவர் தான் என்கிட்ட சொன்னாரு. இப்போது புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பணம் வாங்கிட்டு ஆக்சிடெண்ட்னு பைலை க்ளோஸ் பண்ணிட்டாரு.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.