(Reading time: 17 - 33 minutes)

18. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

லைகளின் அரசி.. எழில் கொஞ்சும் இளவரசி.. அவளது நெளிவு சுழிவு பாதை மனிதர்களின் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறதோ..??

அது மார்கழி மாதம் என்பதால் கதிரவன் பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் ஊட்டிக்கு டாட்டா சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்..

சுமார் ஐம்பது ஏக்கர் டீ எஸ்டேட்டிற்கு நடுவில் அமைந்திருந்தது அந்தப் பெரிய மாளிகை.. மாளிகையைச் சுற்றிலும் பூந்தோட்டம்.. பூந்தோட்டத்திலுள்ள பூக்களுக்குப் போட்டியாய் ஏதோ யோசனையுடன் பூக்களுக்கு நடுவே அமர்ந்திருந்தாள் தியா..

இரண்டு மணிக்கு தோட்டத்தில் புகுந்தவள் இன்னும் வீட்டுக்குள் வரதாதால் அவளைத் தேடி வந்தார் சகுந்தலா(தியா மற்றும் க்ரியாவின் பாட்டி)...

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளின் தோளில் கைவைத்தவர்,”என்ன கண்ணம்மா.. இந்தப் பனியின் இங்க என்ன பண்றீங்க..”,என்று கேட்டார்..

“ஒன்னும் இல்லை பாட்டி..அப்பா எனக்கு ஒரு வர்க் கொடுத்திருந்தாரு..அதை பற்றி யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..”

“அப்பா சொன்னதைப் பற்றி இங்க இருந்துதான் யோசிக்கணும்னு இல்லை குட்டிப்பொண்ணு.. வீட்டுக்குள்ள போய் பால் குடிச்சிட்டே கூட யோசிக்கலாம்..இங்க இந்த பனியில் இருந்தீங்கன்னா உடம்பிற்கு ஒத்துக்காம போயிடும்..”,என்றபடி அவளை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார்..

பாட்டி தாத்தாக்கு காப்பி இல்லையா..??”,என்று கேட்டாள் தியா சகுந்தலா பாட்டி கொடுத்த பாலை அருந்திய வண்ணம்..

“அவருக்கும் காப்பி ரெடி..நீங்க பால் குடிச்சிட்டு அவருக்கு கொண்டு போய் கொடுத்திருங்க..”,என்றார்..

சரி சரி என்பது போல் தலையாட்டியவலும் அவர் கொடுத்த காப்பியை தனது செல்லத் தாத்தாவாகிய ப்ரணதீசனுக்குக் கொடுக்க அவரது ரூம் நோக்கி சென்றாள்..

“தாத்தா..தாத்தா..”,என்று அவருது ரூம் கதவை தட்டியவளுக்கு எந்த பதிலும் கிடைக்காததால் பக்கவாட்டில் இருந்த பால்கனியை நோக்கி சென்றாள்..

அவள் நினைத்தது போலவே ஊட்டி மலையழகை ரசித்தபடி ஒரு ஈ சி நாற்காலியில் அமர்ந்திருந்தார் ப்ரணதீசன்..

“ஹே ஓல்ட் மேன்..இங்க இந்தாங்க உங்களுக்கு ஸ்பெஷல் காப்பி..”,என்று நீட்டினாள்..

“ஏன் குட்டிமா..என்னைப் பார்த்தால் உனக்கு ஓல்ட் மேன் மாதிரியா தெரியுது..”,மூஞ்சியை அஷ்டகோணலாய் வைத்தபடி அவள் கொண்டு வந்த காப்பியை வாங்கிக்கொண்டார்..

“டை அடிச்சிருக்கறதால் உங்கள நீங்களே யூத்னு வெளில சொல்லிக்ககூடாது ஓல்ட் மேன்..”,என்று கட கடவென சிரிக்கத் துவங்கினாள்..

“கொழுப்பா கழுத உனக்கு..”,என்று விளையாட்டாய் கை ஓங்கியவரிடமிருந்து அவளும் விளையாட்டாய் தப்பித்து மாடி ஏறத் துவங்கினாள்..

னதில் தனது தந்தை கொடுத்த ஓலைச்சுவடியை எங்கு மறைத்து வைப்பது என்ற யோசனையுடன் மாடி ஏறியவளுக்கு பூட்டியிருந்த ஒரு அறை ஈர்த்தது..

உடனே எதையும் யோசிக்காமல் தனது பாட்டியிடம் ஓடிச் சென்றவள்,”பாட்டீ..நம்ம வீட்டு மாடியில் ஒரு ரூம் பூட்டியிருக்குதுள்ள அந்த ரூம் சாவி வேண்டும்..”,என்றாள் மூச்சு வாங்க..

ஒரு நிமிடம் அவள் கூறவது புரியாமல் விழித்தவர் பின்பு,”ஓ.. அந்த ரூமா.. அந்த ரூம் சாவி எதுக்கு குட்டிப்பொண்ணு உனக்கு..??”,என்று கேட்டார்..

“இல்லை பாட்டி அந்த ரூம்ல என்ன இருக்குன்னு பார்க்கணும்..அதுக்குதான் கேட்டேன்..”,என்றாள்..

“அந்த ரூமை திறந்து ரொம்ப நாள் ஆகுது குட்டி..ஒரே தூசா இருக்குமே..”,என்றார்..

“பரவாயில்ல பாட்டீ..நான் ஒரே ஒரு தடவை மட்டும் உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கணுமே..”

“உள்ளே என்ன குட்டி பெருசா இருக்கப் போகுது..எல்லாம் உங்க தாத்தாவோட அப்பாவோட சாமானம் தான்.. எல்லாம் ரொம்ப வருடங்களுக்கு முன் வாங்கிப்போட்டது அத பார்த்து என்ன பண்ண போற நீ..??”

“ப்ளீஸ் பாட்டீ..ஒரே ஒரு வாட்டி..”,என்று கெஞ்சினாள்..

அவளது கெஞ்சலைப் பார்த்து மனம் இளகிய சகுந்தலா,”அந்த ரூம் சாவி எங்க இருக்குன்னு தெரியலை கண்ணம்மா..பாட்டி உனக்கு அப்புறமா தேடி எடுத்துத் தரேன்..”என்றார் சகுந்தலா பாட்டி..

“சூப்பர் பாட்டீ நீ..”,என்று அவரது கன்னத்தில் முத்தமிட்டவள் பூட்டி இருக்கும் ரூமை நோக்கி ஓடினாள் அதன் பூட்டின் ஓட்டை வழியாக அந்த ரூமில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ள..

ன்று காலை முதலே அந்த வீடு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.. ஒரு பக்கம் முறுக்கு சீடை என பலகாரங்கள் மனம் வீசிக்கொண்டிருக்க..மறுபக்கம் இரவுக்கு தேவையான பதார்தங்களுக்கான லிஸ்ட்டை ரெடி செய்து கொண்டிருந்தார் சகுந்தலா.. தனது செல்லப் பெண்ணின் வருகைக்கான ஏற்பாடு இவையெல்லாம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.