(Reading time: 17 - 33 minutes)

அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தியா அனைவரும் தங்களது வேலையில் மூழ்கியிருப்பது கண்டு தனது பாட்டீ காலையில் கொடுத்த அந்த ரூம் சாவியை எடுத்துக்கொண்டு மேலே ஏறினாள்..

தனது அறைக்கு சென்று தனது தந்தை கொடுத்த ஓலைச்சுவடியை ஒரு துணியில் சுற்றி சிறு பித்தளை பெட்டியில் வைத்தவள் அதனை யாரும் அறிந்து கொள்ளா வண்ணம் மறைத்து பிடித்தபடி பூட்டியிருந்த ரூமை அடைந்தாள்..

சுற்றியும் ஒரு தடவைப் பார்த்து விட்டு சாவியால் அந்த ரூமை திறந்து உள்ளே பிரவேசித்தாள்..

சகுந்தலா சொன்னது போல் உள்ளே தூசும் குப்பையுமாய் சேர்ந்து கிடந்தது..அதையும் தாண்டி அந்த ரூம் பல வண்ண சித்திரங்கள் சிலைகள் என கலைநயம் வாய்ந்திருந்தது..

அந்த ரூமை பார்த்தவளுக்கு ஏனோ முதல் நாள் தான் கண்ட நார்னியா படத்தில் வரும் வியிட் விட்சின் அரண்மனை கண்முன் வந்தது..

“வியிட் விட்சின் அரண்மனையிலும் இது போல் தானே பல சிலைகளைக் இருக்கும்..”என வாய்விட்டு சொல்லியவள்,அந்தப் படத்தில் ஏதோ ஒரு காட்சியை நினைவு கூர்ந்தவளாக அந்த ரூமில் அமைந்திருந்த சிலைகளில் ஒரு சிலையின் அருகில் சென்று அதனை ஊதினாள்..

“ஹஹ்.. ஹஹ்.. ஹா..”,அந்த சிலைக்குப் பின்னே கேட்ட கொடூர சிரிப்பில் ஒரு அடி பின் நகர்ந்தாள்..

நடுங்கிய குரலில்,”யா..யார் நீங்க..??”,என்று கேட்டாள் தியா..

“ஹஹ்.. ஹஹ்.. ஹா..”,மீண்டும் அதே சிரிப்பு மட்டும் பதிலாய்..

வேகமாய் பின்னே இருந்த கதவை நோக்கி ஓடியவளுக்கு பூட்டிய கதவே வரவேற்பளித்தது..

முகம் முழுவதும் வேர்வையில் நனைய தான் பத்திரபடுத்தவென எடுத்து வந்திருந்த ஓலைச்சுவடி பெட்டியை கீழே நழுவ விட்டாள்..

அறையின் கதவு மூடியிருந்ததால் அறைமுழுதும் காரிருள் சூழ்ந்து அவளுக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது..

அடுத்து என்னவென யோசிக்க அவளது சுறுசுறுப்பு மூளை செயலிழந்து சம்பித்தது போனது..

சில நொடிகளுக்குள் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து கத்த வாய் திறப்பதற்கும் அந்த ரூமின் விளக்குகள் ஒளி பெறுவதற்கும் செரியாக இருந்தது..

தீப ஒளியால் அந்த அறை ஏதோ மியூசியம் போல் தியாவின் கண்களுக்குப் புலப்பட்டது..

வெளிச்சத்தால் சற்று தைரியம் பெற்றவள்,”யாராவது உள்ளே இருக்கீங்களா..??”,என்று கேட்டாள் சத்தமாக..

அவளுக்கு விடையளிப்பது போல் அங்கு ஒரு அணிலுடன் அன்னப்பறவை வந்து சேர்ந்தது ..

மரண பீதியில் இருந்த தியாவிற்கு அணிலைக் கண்டவுடன் மனதில் உற்சாகம் பிறக்க,”ஹை..அணில் குட்டி..”,என்றபடி அதன் அருகில் சென்றாள்..

“ஏய் பொண்ணு..நான் அணில் குட்டி எல்லாம் இல்லை..என் பெயர் அகிலன்..”,என்றது அந்த அணில்..

அணில் பேசுவது கண்டு திகைத்த தியா ஒரு நிமிடம் திடிக்கிட்டாலும் தான் நேற்று கண்ட அந்த படத்தின் தாக்கத்தால் தைரியமாக அகிலனிடம் திரும்பி,”உன் பெயர் அகிலனா..?? நல்லா இருக்கு..என் பெயர் தியா ஷ்ரனு..”,என்று தன்னை அறிமுகப் படுதிக்கொண்டு அன்னப்பறவையிடம் திரும்பி,”உங்க பெயர் என்ன..??”,என்று கேட்டாள்..

“எனது பெயர் அன்னம்..”,என்றது அந்த அன்னப் பறவை சிரித்தபடியே..

“நீங்க இந்த ரூம்ல என்ன பண்றீங்க..??”,என்று கேட்டாள்..

“உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம்..”,என்றது அகிலன்..

“எனக்காகவா எதுக்கு..”,என்று அவர்களிடம் கேட்டவளுக்கு கீழே தனது தாத்தா,”ஐயோ..எல்லாம் போச்சே..”,என்று கத்தும் சத்தத்தில் பயந்து கதவை நோக்கி பாய்ந்தாள்..

மூடிய கதவு இப்பொழுது அவளுக்காய் திறந்திருந்தது..அதன் வழியே அவள் வெளியே சென்றதும் தானாக மூடிக்கொண்டது தியாவின் மனதில் ஓலைச்சுவடி பற்றிய நியாபகங்களை மூடியபடியே..

வ்வளவவு வேகமாக வாகனத்தை விரட்டினாலும் அந்த இடத்தை அடைய மாலை மணி ஆறானது..

ப்ரணதீசனின் அருகில் அமர்ந்திருந்த சுபேந்தருக்கு அவரின் நிலை காணும் பொழுது ஏனோ நெஞ்சு பிசைந்தது..எவ்வள்ளவு கம்பீரமான மனிதர்..

ஒரு போன் கால் அவரது கம்பீரத்தை குறைத்துவிட்டதே என்பது போல் கவலையாக பார்த்தார்..

காரின் பின் சீட்டில் தாய் மடி தேடும் பிள்ளையாய் தனது பாட்டியின் மடியில் அமர்ந்து தேம்பிக் கொண்டிருக்கும் தியாவைக் கண்டதும் நெஞ்சில் உதிரம் கொட்டாத நிலை தான்..தாய் தந்தையரை இழக்கும் வயதா இவளுக்கு..??

கார் நின்ற பின்னும் சிலையாக அமர்ந்திருந்தவர்களை என்ன செய்வதென தெரியாமல் ப்ரணதீசனின் தோளைத் தொட்டார் சுபேந்தர்..

கனவிலிருந்து விழிப்பது போல் விழித்தவரிடம்,”சித்தப்பா.. வந்துட்டோம்..”,என்றார்..

காருக்கு முன்னால் தெரிந்த ஆம்புலன்ஸ் பையர் செர்விஸ் வாகனம் போலீஸ் வாகனம் அனைத்தையும் கண்ட ப்ரணதீசனின் இதயம் பாரம் தாங்காது இறுக்கிக் கொண்டது அவரை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.