(Reading time: 17 - 33 minutes)

நடுங்கும் கைகளைக் கட்டுப்படுத்தி டோரில் கை வைத்துத் திறந்து சோர்வாக நடந்து சென்றார் போலிஸ் ஜீப்பின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டரை நோக்கி..

ப்ரணதீசனைக் கண்டதும்,“நீங்க யார்..??”,என வினவினார் அந்த இன்ஸ்..

“நான் வேதக்ரிபாவின் தந்தை..”,என்றார் சோர்வாக..

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்..இன்னும் கிரேன் வரல..கிரேன் வந்ததுக்கு அப்புறம் தான் எல்லா பாடிகளையும் மேல எடுக்க முடியும்..”,என்றார்..

பாடிகள் என்ற வார்த்தையில் சம்பித்தவர் அருகில் இருந்து தியா அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை கவனிக்காமல் விட்டார்..

“சா..சார்..க்..க்ரியா க்ரியாக்கு ஒ..ஒன்னும் இல்..இல்லையே..??”,திக்கித் திணறி விழுந்தது தியாவின் குரல்..

அப்பொழுது தான் தியாவை கவனித்த ப்ரணதீசன்,”பப்பு..நீ ஏன் மா இங்க வந்த..??”,என அவளைக் கட்டிக் கொண்டு அழத் துவங்கினார் துக்கம் தாளாமல்..

இவர்களின் பிணைப்பைக் கண்டு இரும்பு உள்ளம் கலங்கினாலும்,“யார் பாப்பா க்ரியா..??”,என்று கேட்டார்..

“எ..என் சி..சிஸ்டர் சார்ர்ர்..”

“அவங்க எப்படி இருப்பாங்க..??அடையாளம் ஏதாவது..??”

“அவளும் நானும் டிவின்ஸ்..ஒரே போல் இருப்போம்..”

ஏதோ யோசனையுடன் ப்ரணதீசனை கண்டவர்,”பள்ளத்தில் விழுந்திருப்பவர்களில் ஒரு பெண் குழந்தையைத் தவிர மற்ற அனைவரும் பெரியவர்களே..அந்தக் குழந்தையுடைய பாடி Mr. அண்ட் Mrs. சக்ரவர்த்தியின் காரில் உள்ளது..சோ இந்தப் பெண் சொல்லும் க்ரியா..க்ரியா..”,என்று சற்று இழுத்தவர் அவர்களது முகத்தைப் பார்த்துவிட்டு,”உயிரோடு இருக்கலாம்..நான் தேடிப் பார்க்க சொல்றேன்..”,என்று விறு விறுவென சென்றார் தனது சகாக்களை நோக்கி..

குழந்தைகளின் ஓலக் குரலும் அழுகை குரல் மட்டுமே அதிகமாக கேட்டுக்கொண்டிருந்தது அந்த இடத்தில்..

ஒரு பக்கம் தியாவின் குடும்பம் என்றால் மற்றொரு பக்கம் விக்கி மற்றும் ரிக்கியின் குடும்பம்..

“விக்கி.. அழாதே.. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒன்னும் ஆகியிருக்காது..”,மனதில் பயமிருந்தாலும் அழுதுகொண்டிரிந்த விக்கியை சமாதனப்படுத்த முயன்றான்..

“எனக்கென்னமோ ரொம்ப பயமாயிருக்கு டா..நம்மளும் அவங்க கூடவே வந்திருக்கணும்..”,கதறல் குரலில் மொழிந்தான்..

“கவலைப்படாதே டா.. ஒன்னும் இல்லை..”,என்ற ரிக்கிக்கு அப்பொழுது தான் பப்புவின் ஞாபகம் வந்துது..

“வி..விக்கி..விக்கி..பப்பு நம்ம கார்..”,என்பதற்கு மேல் வார்த்தை வராமல் கண்களில் நீர் சுரந்தது ரிக்கிக்கு..

அப்பொழுது தான் விக்கிக்கும் அவளது நியாபகம் வந்தது..ரிக்கியிடம்,”பெரியப்பாவிற்கு தெரியாது டா..அவ அந்த கார்ல வந்ததைப் பற்றி..”,என்றான் திணறலாக..பப்புவை மறந்துவிட்டோமே என்ற குற்றவுணர்வும்..

இனி என்ன என்பதறியாதவர்களாய் இருவரும் அங்கேயே நின்று கொண்டிருந்தனர் தேம்பியபடியே..

இருவரையும் அந்நிலையில் கண்ட தேவவ்ரத ஆச்சார்யாவிற்கும் குமார ஆச்சார்யாவிற்கும் என்னவென்று வெளியே ஓலமிட்டு அழ இயலா நிலை..

சார்..இங்க ஒரு பெண் குழந்தை மயங்கிக் கிடக்குது..”,என்ற ஒரு போலிஸ் கான்ஸ்டபிளின் குரல் கேட்டு தனது தாத்தா பாட்டியுடன் அங்கு சென்றாள் தியா..

மயங்கிக் கிடந்த அந்த குழந்தையைக் கண்டதும் நெஞ்சில் ஏதோ ஒரு வகை உவகை ப்ரனதீசனிடம்..தனது ரதத்தின் ரத்தமாவது உயிருடன் இருப்பதாலோ..??

ஆம்புலன்சின் அபாய சத்தமும் மனிதர்களின் கதறல்களும் மயக்கத்திலிருந்து விழிக்கவைத்தது க்ரியாவை..

தன் தாய் வழித் தாத்தா ப்ரனதீசன் தன்னை அனைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு,”தாத்தா.. அப்பா.. அம்மா..”,என்றபடி அழ ஆரம்பித்தாள்..

“குட்டிமா.. அழக்கூடாது.. ஒண்ணுமில்லை..”,என்று அவளை வருடிக் கொண்டுக்கத் தொடங்கினார் ப்ரனதீசன்..

கதறல் சற்று குறைந்து கேவலக மாறியபொழுது அவள் எதிரில் ஒரு பசுவின் உடலையும் ஏழு மனித உடல்களையும் பள்ளத்திலிருந்து கிரேன் மூலம் தூக்கப்பட்டது.. அந்த கொடூரக் காட்சியைக் கண்டு ரிக்கி விக்கியுடன் சேர்ந்து சிலர் கதறுவதை கண்ட க்ரியா மீண்டும் மயங்கி சரிந்தாள்..

“ரியா..ரியூ..இங்க பாரு..”,தனது பெற்றவர்களின் பிணத்தைப் பார்த்துபடியே க்ரியாவை உலுக்கிய தியாவிற்கு க்ரியாவின் சீரான மூச்சே பதிலாய்..

தான் கண்டக் காட்சிகளைக் காண சகிக்காமல் நிஜத்திலும் அழுது கொண்டிருந்தாள் அகிலனை பிடித்தவண்ணம்..

“தியா..அழாதே ஒன்னும் இல்லை..”,என்று அவளை சமாதன படுத்த முயன்றது அகிலன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.