(Reading time: 17 - 33 minutes)

“ஏன் அகிலா எங்களுக்கு மட்டும் இப்படி..??”,என்றாள் தியா தேம்பிய வண்ணம்..

“இங்கே நடந்து கொண்டிருப்பது அனைத்தும் நாடகமே தியா..”

“நாடகமா..என்ன சமாதானப் படுத்த சொல்லாதே..பாரு எங்க அம்மா அப்பாவை..”

“இந்த விபத்தில் அந்தக் குழந்தை சுதிக்ஷாவைத் (பப்பு) தவிர யாரும் இறக்கவில்லை..பாரு..”,என்றது சில மணி நேரத்திற்கு முன் அவளைக் கூட்டிச் சென்ற படி..

சில மணி நேரத்திற்கு முன்..

ங்களது காருக்கு வெளியே நின்று இளநீர் குடித்துக்கொண்டிருந்தனர் நரசிம்ஹனும் வேதாவும்..எதிரே இருந்த இளநீர் கடையில் க்ரியா..

இளநீர் கடையிலிருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்தது இரு லாரிகள் நின்று கொண்டிருந்தன..

“சார் சொன்னபடி பார்த்தா இந்நேரம் சுமோ வந்திருக்கணுமே..??”,என்றான் ஒரு லாரியில் உள்ளே அமர்ந்திருந்த முத்து..

“எங்கயாவது ஸ்டாப்பிங் போட்டிருப்பாங்க..”,என்றான் வேந்தன் சோம்பலாக..

தன்னருகே நின்றுகொண்டிருந்த மற்றொரு லாரியைப் டிரைவரைப் பார்த்தவன்,”உங்க சம்பவத்துக்குத் தான் ஆள் வந்திருச்சே ஏன் சும்மா இருக்கீங்க..??”,என்று கேட்டான்..

“அந்த கார் கிளம்பட்டும் அண்ணே..அப்போ தான் இடிச்சுத் தள்ள சவுகரியமா இருக்கும்..”,என்றான் லிங்கம்..

“எலேய்.. மெதுவா இடிக்கனும்டா..வெரசா இடிச்சராதீங்க..அவங்க எல்லாவரும் உசுரோட வேணும்னு சொல்லிருக்காங்க..”,என்றான் மற்றொரு லாரியிருந்த இசக்கி..

“எல்லாம் எங்களுக்கு நியாபகம் இருக்கு..”,என்ற முத்து,,”டேய்..சுமோ வருது..”,என்று தனது லாரியை இயக்கினான்..

அங்கேயும் இங்கேயும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த க்ரியாவின் கண்ணில் பட்டது தாறுமாறாக வந்துகொண்டிருந்த லாரியும் எதிர் வந்து கொண்டிருந்த ஒரு சுமோவும்..

என்னவென்று உணரும் முன் அந்த சுமோவை இடித்துத் தள்ளிய அந்த லாரி நேராக நரசிம்ஹனின் காரையும் ஒரு இடி இடித்துவிட்டு நிற்காமல் சென்றது..

காரின் வெளியில் நின்று இளநீர் குடித்துக்கொண்டிருந்த நரசிம்ஹனும் வேதாவும் இரத்த வெள்ளத்தில் ரோட்டில் விழுந்தனர்.. அதைக் கண்டு பயந்த க்ரியா அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்தாலென்றாள், இளநீர் கடைக்காரரோ தனக்கு ஏதாவது பிரச்சனை வருமென பயந்து இடத்தை காலி செய்தார்..

“என்னடா இவன்..?? இரண்டு சம்பவத்தையும் இவனே பண்ணிட்டுப் போயிட்டான்..”,என்ற இசக்கி,”வா..போய் பிணத்தை மாற்றி வைப்போம்..”,என்றான் தனது லாரியை அவர்களுக்கு அருகில் நிறுத்தியவண்ணம்..

ரத்தவெள்ளத்தில் கிடந்த நரசிம்ஹனையும் வேதவையும் நோக்கிச் சென்றவர்கள் அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கழுட்ட துவங்கினர்..

சற்று தூரத்தில் லாரியை நிறுத்திவிட்டு வந்த முத்துவையும் வேந்தனையும் நோக்கி ஒரு கண்டனப் பார்வை வீசிய இசக்கி,”.நீங்க ரெண்டு பெரும் சுமோல இருக்கறவங்களோட நகைகளை கழட்டி இந்த லாரியில் இருக்கும் பிணங்களுக்கு போட்டுவிடுங்கள்..”,என்றான்..

சரி சரியென தலையசைத்த இருவரும் சுமோவில் உள்ளிருந்தவர்களை வெளியே எடுத்து இசக்கியும் லிங்கமும் செய்துகொண்டிருப்பது போல் அவர்களது ஆபரணங்களைக் கழட்டி தாங்கள் கொண்டுவந்திருந்த பிணங்களில் அணிவித்தவனர்..

பிறகு தாங்கள் கொண்டு வந்திருந்த பிணங்களை கார்களில் ஏற்றினர்..

“டேய்.. இந்த மாட்டை முதலில் பள்ளத்தில் தள்ளிரலாம்..”,என்ற இசக்கியின் பேச்சிற்கு மறுவார்த்தை பேசாது தாங்கள் கொண்டுவந்திருந்த ஒரு பசுவின் சவத்தை முதலில் நால்வரும் பள்ளத்தில் தூக்கி எறிந்தனர்..

“எதுக்குடா இந்தக் கருமத்தை இதுக்குள்ள தள்ள சொன்னாரு சாரு..??”,என்று கேட்டான் முத்து..

“யாருக்குத் தெரியும்..அவரு சொன்ன வேலையைப் பார்த்தோம்மா..கை நெறைய வாங்கிநோமான்னு இருக்கனும்..அதை விட்டுட்டு கேள்வியெல்லாம் கேட்டா நாமும் இந்தப் பள்ளத்தில் கிடக்கவேண்டியதுதான்..”,என்றான் இசக்கி எச்சரிக்கையாக..

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆறு பெரியவர்களையும் ஒரு லாரியில் ஏற்றிய பின் இசக்கி,”நான் இவங்களை நம்ம சார் சொன்ன இடத்துக்கு கொண்டு போறேன்..நீங்க மீதி வேலையை முடிச்சிட்டு வாங்க..”,என்றபடி லிங்கனுடன் சென்றான்..

மீண்டும் தங்களது லாரியை எடுத்துக்கொண்டு வந்த முத்து சுமொவையும் தியாவின் பெற்றோர்கள் கொண்டு வந்த காரையும் பள்ளத்திற்குள் இடித்துத் தள்ளிவிட்டு அதே வேகத்துடன் சென்றான் எல்லா வேலையும் முடித்துவிட்ட மமதையோடு..

தீய செயல் செய்பவர்கள் எப்பொழுதும் ஒரு பிழையை செய்வார்கள் அல்லவா..??

அவர்கள் செய்த தவறு இளநீர் கடையில் மயங்கிக் கிடந்த க்ரியாவையும் ரிக்கி விக்கியின் காரிலிருந்த இறந்துகிடந்த பப்புவையும் கவனிக்காதது..

அதன் விளைவு மூன்று மாதத்திற்கு பிறகு இதே இடத்தில் இவர்கள் பினங்கலாய்..

“அகிலா..எங்க அம்மா அப்பாவும் அப்போ உயிரோட இருக்காங்களா..??”,அகிலனை உலுக்கினாள் தியா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.