(Reading time: 16 - 32 minutes)

“இப்போ எதுக்கு அவன் மூஞ்சிய தொங்கப்போட்டுட்டு போறான்... ஐயையோ... அப்போ அவன் மனசுக்குள்ளயும் அந்த பொண்ணு இருக்காளா..?! தேவுடா.. அப்படிலாம் எதுவும் இருக்கக் கூடாது... அப்படியே இருந்தாலும் அவனுக்கு ஞாபக மறதி தந்து, அவளை மறக்க வெச்சிடு.. ப்ளீஸ்... “என்று புலம்பியப்படி அவன் பின்னே சென்றான், உதய்யின் உற்ற தோழன்..!!!(?) அவனை ஒரு ஜோடி கண்கள் விநோதமாக நோக்குவதை அறியாமல்.!

நகர்ந்துப் போன உதய், நீச்சல்குளத்தின் அருகே நின்றுக்கொண்டு வயிறு குலுங்க சிரித்துக்கொண்டே ககனை நோக்கினான். அவனின் மனநிலையை ஓரளவிற்கு புரிந்துக்கொண்டதால்.

அருகே வந்த ககனின் தோளில் கை போட்டுக்கொண்டவன், “டியூட்... கவலைபடாத.. நீ வண்டி ஓட்டின பொண்ணுக்கு ரூட் போட்டுக்கோ... நான் பின்னாடி ஒட்காந்து கிண்டல் பண்ணின பொண்ணுக்கு போட்டுக்கறேன்.. சரியா...?!”என்று வேண்டுமென்றே வெறுப்பேத்தினான்.

அதன் பிறகு சிறிது நேரம் அவர்களுக்குள் விவாதமும் வாக்குவாதமும் நடந்து, ஒரு வழியாக உதய் அவனின் கிண்டலை ஒத்துக்கொள்ள, ககனும் நிம்மதி அடைந்தான்.! சிறு பிள்ளைத் தனமான அவனின் கோபத்திற்கும், பொறாமைக்கும் காரணம் அறியாமலேயே..!!

“ககன்... கவலைபடாத... போனா போகுது.. நான் உனக்கு அந்த பொண்ணை விட்டுத்தறேன்... ஆனா என் மனசு ஒடஞ்சு போச்சுடா... ஒடஞ்சு போச்சு..!! அதை  ஓட்ட வைக்க, நீ இன்னிக்கு எனக்கு ட்ரீட் வெச்சிடு...” என்று பேரம் பேச...

“டேய்... நான் உன்னை எதுக்கு அவ்வளோ அவசரமா வெளில கூட்டிட்டு வந்தேன்... நீ என்னடானா அவளையும் இவளையும் பத்தி பேசி என்னை டிஸ்ட்ராக்ட் பண்ற... யூ......”என்று தொடங்க, உதய்யின் பார்வையில் டன் கணக்கில் வழிந்தது, கிண்டல். ககனின் ‘அவள், இவள்’ என்ற அடைமொழிக்காக.

“சரி சரி.. அதவிடு.. இப்போ ஒரு முக்கியமான விஷயம் கேள்விபட்டேன்.. அதான் உடனேயே உன் கூட எங்கயாவது எஸ்கேப் ஆகிடலாம்ன்னு பார்த்தேன்...”

“அப்படி என்ன விஷயம்...?! எனிதிங் சீரியஸ்??” என்று உதய் அக்கறையுடன் கேட்க...

“ஆமாம் டியூட்.... என் வீட்டு பெரியவங்க என் வாழ்கையவே அழிக்க பிளான் போடறாங்க...”என்றான் ககன், கவலையுடன்.

“இரு இரு... ஹா.. ஹா.. ஹா... புரிஞ்சிடுச்சு...!! ‘உன்னை கல்யாணம் என்னும், முடியாப் பாதையில் சிக்கவைக்க முயலுகிரார்களா...?! கூற வேண்டியது தானே அவர்களிடம்... நீங்கள் முயலவே வேண்டாம்.. நானே சிக்கி விட்டேன்’ என்று...”என்று வசனம் பேச...

“போதும்டா உதி... நானே செம கடுப்புல இருக்கேன்... நீயும் வெறுப்பேத்தாத.. ப்ளீஸ்.. அவங்க என்னை ஒரே ஒரு ஜந்துக்கிட்ட மட்டும் சிக்கவைக்க பிளான் பண்ணல... ஒரு ஜூ(zoo)குள்ளயே அனுப்ப பார்கறாங்க...! அதுவும் சிங்கிளா!!!”

“நீ சொல்லறதெல்லாம் வெச்சி பார்த்தா......... டேய்........... என்ன டா சொல்லற.... அந்த... அந்த.... அந்த.... டாலிக்கிட்டயா உன்னை பலி கொடுக்க பிளான் போடறாங்க.....!!”  என்று உதய் திக்கித்திணறி சொல்லி முடிப்பதற்குள், அவன் மீதும் ககன் மீதும் ஸ்பூன், போர்க், டிஷ்யூ பேப்பர்கள், வாட்டர் பாட்டில்கள் என்று  ஹோட்டலில் இருக்க வேண்டிய அத்தனை பொருட்களும் வந்து விழ ஆரம்பிக்க...

உதய்யின் கையை பிடித்த ககன், “வாடா... அடுத்து கத்தி வரதுக்குள்ள ஓடிடலாம்....” என்று அவனையும் இழுத்துக்கொண்டு தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான்.!!!

பெரிய ஆபத்திலிருந்து தப்பித்த உணர்வுடன் காரில் சென்றுகொண்டிருந்தனர் நண்பர்கள் இருவரும். ககன் காரை செலுத்த, பக்கத்தில் அமர்ந்து உதய் சிரித்து சிரித்து, ககனின் அன்பான சாபத்திற்கு ஆளாகிக்கொண்டிருந்தான்.(?!)

“என் நிலைமையைக் கண்டு சிரிக்கிறாய் அல்லவா மகனே... இதோ என் சாபம்..!!! எதிர் காலத்தில் உன் மனைவியாக வரப்போகும் பெண் என்னும் பேயால் (சாரி காவ்யா), நீ தினமும் பலரின் சிரிப்பிற்கு ஆளாகி, சிறந்த மகிழ்விப்பாளர் பட்டம் பெறுவாய்.!!” என்று.

நவுடான்கி—கல்லி (Nautanki-Galli)

ஹைதராபாத்தின் ஹை-டெக் சிட்டியில் அமைந்துள்ள புதிய விதமான உணவகம். சினிமா படப்பிடிப்பு நடக்கும் ஸ்டுடியோபோல அமைப்பு, சுவற்றில் பழைய சினிமா போஸ்டர் வரைபடங்கள், அலங்கரிக்கப்பட்ட அந்தக் கால ஆட்டோக்கள், கார்கள் போன்றவைகள்... ஆட்டம் பாட்டம் என்று  நம்மை 1980-90 கால கட்டத்திற்கு அழைத்துசெல்லும். நாமே சினிமா உலகில் இருப்பது போன்ற உணர்வை தருவதே நிர்வாகத்தின் நோக்கம். அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, ஹோட்டலின் உள்ளே நுழைந்த ககனும் உதய்யும் நுழைவு வாயிலில் வரவேற்ற பெண்ணின் அழகில் மயங்கி ‘ஆ’ என்று பார்வை பார்த்துவிட்டு, பின்னர் உள்ளே நகர்ந்தனர். நுழைந்தவுடன் ஒரு சிறிய மேடையில் இசை கலைஞர்கள் அமர்ந்து, விருந்தினர்கள் கேட்கும் பாடல்களை இசைத்துக்கொண்டிருந்தனர்

அப்பொழுது ஒலித்த, ஹிந்திப் பாடல் ‘நாகின்’னுக்கு கிட்டத்தட்ட அனைவருமே ஆடிக்கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தில் இவர்களும் ஐக்கியமாயினர். சுற்றி சுற்றிஆடிய ஆட்டத்தின் வேகத்தில் ககனுக்கு லேசாக தலை சுற்றுவதுப்போல் இருக்க, சிறிது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனின் கவனத்தை ஈர்த்தாள் ஒரு பெண். இன்னொரு பெண்ணுடன் ஆடிக்கொண்டிருந்தவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.