(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 20 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

Hi Friends.... எப்படி இருக்கீங்க... இந்தக்கதை கொஞ்சம் track மாறிப்போகுது.... கதை ஆரம்பிக்கும்போது நான் யோசித்தது பயந்த சுபாவமுடைய ஹீரோ எப்படி அதிரடி ஹீரோயினை சமாளிக்கிறார் அப்படின்னுதான்.... ஆனால் நாட்டில் நடக்கும் விஷயங்கள் என் கதைப் போக்கை டோடல்லாக மாற்றி விட்டது... வாராவாரம் வரும் breaking நியூஸ்கள் என்னை அப்டேட் எழுதும்போது தொல்லைப்படுத்தி கதைப் போக்கை மாற்றிவிட்டது... So ராஜா பார்ட் குறைந்து பாரதி, அண்ட் சாரங்கன் பார்ட் அதிக அளவிலாகிவிட்டது.... Very sorry for that..... இனியும் ராஜாவின் பார்ட் கம்மிதான்... so please adjust மாடி....

முதலில் ராணி என்ற பெயரை இன்ஸ்பெக்டர் கூறியவுடன் தனக்குத் தெரிந்த அத்தனை ராணிகளையும் தன் நினைவில் வலம்வரச் செய்த நரேஷ், அவர்களில் யாராகவும்  இருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்தான்.... எனவே மிகத் தைரியமாக தனக்கு அப்படி ஒருவரைத் தெரியாது என்று கூறினான்.... ஆனால் இன்ஸ்பெக்டர் அந்தப்பெண் தேவிகாராணி என்று கூறியவுடன் சிறிது அதிர்ச்சி அடைந்தான்.... இருந்தாலும் தன்னைப் பற்றிய எந்த ஆதாரமும் அவளிடம் இருக்க வாய்ப்பே இல்லை என்ற தைரியத்தில் சிறிது கோவமாகவே பேச ஆரம்பித்தான்.

“என்ன இன்ஸ்பெக்டர் நீங்க.... யாரானும் வந்து ஏதானும் சொன்னா உடனே அதை நம்பிட்டு கேஸ் போட்டுடுவீங்களா..... என்னோட வளர்ச்சியையும், புகழையும் பிடிக்காதவங்க எத்தனையோ பேர் நாட்டுல இருப்பாங்க.... அவங்கள்ல யார் வேணும்னாலும் இப்படி ஆள் செட் பண்ணி பொய்ப்புகார் கொடுத்து இருக்கலாம்.... எதையும் விசாரிக்காம கேஸ் பதிவு பண்ணி எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கீங்க....”

“சார் அப்படி எந்த ஆதாரமும் இல்லாம கேஸ் போட எங்களுக்கு உங்களோட முன்விரோதம் எதானும் இருக்கா என்ன... எல்லா விதமான ஆதாரத்தோடதான் கேஸ் புக் பண்ணி இருக்கோம்.....”

“அப்படி என்ன சார் ஆதாரம் இருக்கு..... சும்மா ஒரு பொண்ணு வந்து சொல்லிடுச்சுன்னு நீங்க இப்படி பேசறது நல்லா இல்லை சார்.....”

“சார் அதை எல்லாம் உங்கக்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது.... எதுவா இருந்தாலும் என்குயரிக்கு வரும்போது  தெரிஞ்சுக்குங்க....”, என்று கூறிய இன்ஸ்பெக்டர் அடுத்து நரேஷ் கேள்வி கேட்பதற்குள் தொலைபேசியை வைத்து விட்டார்....

“ச்சே இந்த சனியன் எங்க இருந்து திடீர்ன்னு வந்து குதிச்சுது..... கொக்கு மாதிரி காத்திருந்து இப்போதான் அரசியல்ல ஒரு இடத்தைப் பிடிக்க பிட்டை போட ஆரம்பிச்சேன்.... அதுக்குள்ள இப்படி ஒரு கேஸ்.... ஏன்யா இந்தக் கேஸ் வெளிய யாருக்கும் தெரியாதே....”

“இல்லைங்க சார்... இன்னும் பேப்பர்ல எதுவும் நியூஸ் வரலை... இந்த இன்ஸ்பெக்டர் கொஞ்சம் நேர்மையானவர்.... அந்த ஸ்டேஷன்ல இருக்கறவங்க தேவையில்லாம நியூஸ் வெளிய கசிய விட்டாங்கன்னு தெரிஞ்சா கொஞ்சம் கடுமையான ஆக்ஷன் எடுப்பார்.... அதுனாலே நியூஸ் எதுவும் லீக் ஆகலை.... அப்பறம் கேஸ் போட்ட பொண்ணும் வெளிய வந்து எதுவும் சொல்லலை போல... அது சரி யாரு சார் இந்த ராணி....”

நரேஷின் திருமண வாழ்க்கைப்பற்றி அவனுடைய தற்போதைய மேனேஜருக்கு எதுவும் தெரியாததால் அவனுக்கு ராணி யார் என்று தெரியவில்லை.

“அது தெரிஞ்சா நான் நேரடியா போய் பார்த்திருக்க மாட்டேனா.... யாருன்னே தெரியலையா.. நீ என்ன பண்ற... நம்ம லோகேஷை வர சொல்லு.... அந்த ராணியைப் பத்தி விசாரிக்க சொல்லணும்.... அப்படியே அவளுக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு பார்க்கணும்....”

“சார் நான் விசாரிச்ச வரைக்கும் அந்த லேடி மட்டும் ஒரு  வக்கீலோட வந்து கம்ப்ளைன்ட் பண்ணினா மாதிரிதான் சொன்னாங்க.... அவங்க குடும்ப உறுப்பினர் மாதிரி யாரும் கூட வரலைன்னு சொன்னாங்க....”

“ஏன்யா லூஸு மாதிரி பேசற.... எனக்கெதிரா வேலை செய்யறவன் தைரியமா முன்னாடி வந்தா வேலை பார்ப்பான்... எல்லாம் பின்பக்கமாத்தான் முதுகுல குத்துவானுங்க.... ரெண்டு நாள் முன்னால அந்தக் கட்சித் தலைவரை பார்த்து பேசினேன் இல்லை அந்தக் காண்டுல கூட எவனானும் இழுத்து விட்டிருக்கலாம்....”

“நீங்க சொல்றதும் சரிதான் சார்.... நான் லோகேஷை வர சொல்றேன்....”

“நீ அவனை இன்னும் அரை மணி நேரத்துல இங்கயே வர சொல்லிடு... அவசரம்ன்னு சொல்லு.... வெளில விஷயம் கசியறதுக்குள்ள நாம இதை முடிக்கணும்....”

அதன்படியே அடுத்த அரைமணியில் அந்த லோகேஷ் நரேஷைப் பார்க்க  வந்தான்.

“என்னாத் தலைவா.... எதுனாச்சும் பிரச்சனையா.... அவசரமா வர சொன்ன....”

“ஹ்ம்ம் லோகேஷ், கொஞ்சம் பெரிய பிரச்சனைதான்.....”,என்று கூறிய நரேஷ் தன் மேனேஜரை வெளியில் இருக்கச் சொல்லி அறைக்கதவை சாற்றிவிட்டு ராணியைப்பற்றி ஆதியோடந்தமாக சொல்லி முடித்தான்.  நரேஷ் சொல்வதைக் கேட்ட பின்னர் ஆழ்ந்த யோசனைக்கு சென்றான் லோகேஷ்.

“தலைவா நீங்க சொல்றதைப் பார்த்தா அந்த ராணிக்கு ஏதோ ஆதாரம் இப்போ கிடைச்சிருக்கணும்.... இல்லைன்னா இப்படி திடீர்ன்னு கம்ப்ளைன்ட் கொடுக்க வாய்ப்பே இல்லை... அந்த ராணி எல்லா ஆதாரத்தையும் உங்கக்கிட்ட கொடுத்துடுச்சா”

“நான் அவளை விட்டு வரும்போதே எல்லாத்தையும் அழிச்சுட்டேன் லோகேஷ்.... அப்படியும் எப்படியோ ஒரு ஃபோட்டோ மட்டும் விட்டுப்போச்சு.... அதை வச்சுத்த்தான் என்னை கடைசியா மிரட்டினா... அதையும் அவக்கிட்ட இருந்து வாங்கிட்டேன்... அதுனால எங்க கல்யாணம் தொடர்பா எந்த ஆதாரமும் அவக்கிட்ட கிடையாது...”

“இந்தக் வழக்குமே நீங்க அவளுக்கு பாலியல் தொந்தரவு தந்திருக்கீங்கன்னுதான் போட்டிருக்கு.... உங்க கல்யாணத்தைப் பத்தி இல்லை.... நீங்க சமீபத்துல அவளைப் பார்த்தீங்களா...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.