(Reading time: 13 - 25 minutes)

“அவளை நான் பார்த்து வருஷக்கணக்காகுது.... கடைசியா அவக்கிட்ட இருந்த  ஆதாரத்தைக்கூட எனக்குத் தெரிஞ்ச நம்பிக்கையான ஒரு ஆள்தான் போய் வாங்கிட்டு வந்தான்”

“ஆனா நீங்க சொல்ற இன்ஸ்பெக்டர் ரொம்ப நியாயமான ஆள் தலைவா... சும்மானாச்சும் பொய் வழக்கெல்லாம் போட வாய்ப்பே இல்லை... ஏதோ விஷயம் அவக்கிட்ட மாட்டி இருக்கணும்.... சரி எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க... நான் முழு விவரம் தெரிஞ்சுட்டு வந்து உங்களைப் பார்க்கறேன்.... அதும் பின்னாடி என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.....”,என்று கூறிய லோகேஷ் நரேஷிடம் இருந்து விடை பெற்று சென்றான்.... நரேஷ் அடுத்து ராணியை எப்படி கையாள்வது என்று யோசிக்கத் தொடங்கினான்.

ங்கு மயூரியின் வீட்டில், சாரங்கன் கிளம்பிய பிறகு கதவைத் தாழிட்ட மயூரி தன் அன்னை அழுது கொண்டிருப்பதைப் பார்த்து மனம் வருந்தினாள்....

“வருத்தப்படாதீங்கம்மா அதுதான் அவங்களை அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்களே.... இனி உங்களுக்கு அவனுங்களால தொல்லை இருக்காது.....”

“நான் பயப்படல்லாம் இல்லை பாரதி.... ஆனா அவங்க பேசின பேச்சைத்தான் தாங்க முடியலை...  எப்படி காது கூசற அளவுக்கு பேசிட்டாங்க....”

“பெண்களுக்கு இந்த மாதிரி ஆளுங்க கொடுக்கற முதல் தொந்தரவே verbal abuse தான்ம்மா.... கண்ட மாதிரி பேசியே அவங்களை மன ரீதியா பலவீனப்படுத்தறது.....”

“இன்னைக்கு நீ வந்ததால சரியாப்போச்சும்மா.... இல்லைனா எங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு....முதல்ல வந்த போலீஸும் அவனுங்க சொல்றதைத்தான் கேட்டாரு.....  பாதுகாப்பு அப்படிங்கறது சாமானிய ஆளுங்களுக்கு இல்லவே இல்லை போல....”

“சில நேரங்கள்ல அப்படித்தான் ஆகிடுதும்மா.... ஆனா எல்லா நேரமுமே போலிசே நம்ம துணைக்கு வரணும்ன்னு எதிர்பார்க்கிறதும் தப்பு.... இன்னைக்கு இங்க நடந்த விஷயத்தையே எடுத்துக்குவோமே.... அந்த ரௌடிங்க வந்து கலாட்டா செய்ய ஆரம்பிச்சபோது அக்கம்பக்கம் வீட்டு ஜன்னல்ல அத்தனை தலை தெரிஞ்சுது.... ரெண்டே நிமிஷம் எல்லாரும் கதவை சாத்திட்டு உள்ள போய்ட்டாங்க..... அவங்க எல்லாரும் வெளிய வந்து சத்தம் போட்டு இருந்தாலே அந்த ரௌடிங்க ஓடி இருப்பானுங்க....”

“ஹ்ம்ம் என்ன பண்ணம்மா.... எல்லாருக்கும் பயம்... அந்த ரௌடிங்க அவங்களை ஏதானும் பண்ணிடுவாங்களோன்னு.... இத்தனைக்கும் இங்கதான் நாங்க பல வருஷமா குடியிருக்கோம்.... இந்தத் தெருவுல இருக்கறவங்க அத்தனை பேரையுமே எங்களுக்கு நல்லாத் தெரியும்.... அதுவும் என் பொண்ணு வேலை செய்யற ஸ்கூல்ல இந்தத் தெருவுல இருக்கற நிறைய குழந்தைங்க படிக்குது.... அப்படி இருந்துமே இந்த நிலை....”

“காலம் அப்படி ஆகிப்போச்சும்மா... முன்னாடிலாம் ஒரு விபத்தையோ இல்லை குற்றத்தையோ பார்த்தா ஃபோன் எடுத்து காவல்துறையையோ, இல்லை ஆம்புலன்சையோ கூப்பிடுவோம்... ஆனா இப்போ selfie எடுத்து watsappலயும், facebookலயும் பதிவு போடற வேலையைத்தானே செய்யறோம்.... இதோ இன்னைக்கு நடந்ததே நாளைக்கு ஏதானும் ஒரு குரூப்பில் உலா வரும் பாருங்க... ஆபத்து சமயத்துல உதவிக்கு வராத இதே மக்கள் நாளைக்கு சமூக வலைத்தளத்துல எப்படி பொங்கி பொங்கி எழுவாங்க பாருங்க....”

“ஐயோ என்னம்மா சொல்ற... நாளைக்கு எத்தனை பேர் அதைப் பார்ப்பாங்களோ.... ஊர் முழுக்க எங்க மானம் போகப்போகுது... எப்படி எல்லார் முகத்துலையும் முழிக்கப் போகிறோம்...”

“எதுக்கும்மா உங்க மானம் போகணும்.... உங்களுக்கு உதவிக்கு வராதவங்க மானம்தான் போகணும்.... நீங்க எதைப்பத்தியும் கவலைப்படாம எப்பையும் எப்படி இருக்கீங்களோ அப்படியே இருங்க.... யார் என்ன பேசினாலும் காதுல வாங்கிக்காதீங்க.... ஏன் இன்னைக்கு ரௌடிங்களை அனுப்பின அந்த நாராயணனே நாளைக்கு இன்னும் கொஞ்சம் ஆளுங்களை விட்டு உங்களுக்கு தொந்தரவு தரலாம்.... எல்லாத்துக்கும் தயாரா நீங்க இருக்கணும்.... அதுக்கு தைரியம்தான் முக்கியம்....”

“சில நேரம் இந்த மாதிரி தொந்தரவெல்லாம் பார்க்கும்போது பேசாம அவங்கக்கிட்ட இந்த வீட்டை விட்டுட்டு போய்டலாம் போல இருக்கும்மா.... அதுவும் மயூரியை அவங்க ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு நினைக்கும்போது இன்னுமே பதறுது....”

“அவங்க இப்படி உங்களை தொந்தரவு பண்ணுறதோட நோக்கமே நீங்க வீட்டை அவங்கட்ட கொடுக்கணும் அப்படின்றதுதான்..... அதனால நீங்க எதுக்கும் பயப்படாம இருங்க.... உங்களுக்கு பக்க பலமா நாங்க இருக்கோம்.... மதி சார் இருக்கார்... இன்னைக்குப் பிறகு அந்த நாராயணன் நேரடியா வீட்டுக்கு வந்து தொந்தரவு தர மாட்டான்னு நினைக்கறேன்... பார்ப்போம் அடுத்து என்ன செய்யலாம்ன்னு.....”

“சரிம்மா ரொம்ப நேரம் ஆயிடுச்சு... பாவம் உங்களைத்தான் ரொம்பத் தொல்லை செஞ்சுட்டோம்.... எங்களால உங்க தூக்கமும் போச்சு.... இங்க ரெண்டு ரூம்தான் இருக்கு.... உன்னால மயூரிக்கூட அவ ரூம்ல படுத்துக்கறியாம்மா...”

“ஒண்ணும் பிரச்சனை இல்லைம்மா..... தாராளமா மயூரிக்கூடவே படுக்கறேன்... அப்பறம் எங்க தூக்கம் பத்திக் கவலைப்படாதீங்க... சில நேரம் கேஸ் விஷயமா அலையும்போது முழு ராத்திரிக்கூட நானும், சாரங்கனும் தூங்காம இருந்து இருக்கோம்.... நீங்களும் போய் படுங்கம்மா...”,என்று மயூரியின் தாயை அனுப்பிய பாரதி மயூரியுடன் அவள் அறைக்கு சென்று படுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.