(Reading time: 13 - 25 minutes)

ருவரும் படுத்த பின்பும் மயூரி தயங்கித் தயங்கி பாரதியின் முகம் பார்க்க, ‘டேய் சப்பாணி, உன் மயிலு உன்னைய விட்டுட்டு என்னைய சைட் அடிக்கறாடா...’,என்று மனசுக்குள் கலாய்த்தபடியே மயூரியிடம் திரும்பி, “என்கிட்ட ஏதானும் சொல்லணுமா மயூரி... ஏன் தயங்கித் தயங்கி நிக்கறீங்க....”

“அது.... அது வந்து மேடம்.... அது.... உங்ககூட ஒருத்தர் வந்தாரே... அவர் ஏன் அப்படி எல்லாம் பேசினாரு.....”

“எப்படி எல்லாம் பேசினாரு....”

“அது... அது... மாப்பிள்ளை அப்படின்னு.......”

“அதை நீங்க அவர்கிட்டதான் கேக்கணும்.... எனக்கு எப்படித் தெரியும்.... அந்த நேரத்துல அந்த ரௌடிங்க வாயை அடக்க சொல்லி இருக்கலாம்... இல்லை நிஜமாவே உங்களை பார்த்த உடன காதல் கடல்ல தொபுக்கடீர்ன்னு விழுந்து அப்படி சொல்லி இருக்கலாம்.... ஏன் மயூரி அவர் அப்படி அப்படி பேசினதுல உங்களுக்கு ஏதாவது feeling ஆகிடுச்சா.... ”,என்று சிரித்தபடியே கேட்க.... மயூரி இப்பொழுது டென்ஷன் ஆகிவிட்டாள்.

“அச்சோ மேடம், அப்படி எல்லாம் இல்லை.... அவர் பார்த்தா கொஞ்சம் விளயாட்டுப்புள்ள மாதிரி இருந்தாரா (‘என்னே கொடுமை சப்பாணி இது... நீ விளையாட்டுப்புள்ளையா’, பாரதியின் மைன்ட் வாய்ஸ்) அதுதான் அவர் நிஜமா சொன்னாரா இல்லை விளையாட்டுக்கு சொன்னாரான்னு கேட்டேன்....”

“நாளைக்கு அந்த விளையாட்டுப்புள்ளை இங்க வரும்.... அப்போ கேட்டு சொல்றேன்... இப்போ படுப்போமா....”, என்று கேட்க மயூரியும் தலையசைத்தபடியே குழப்பம் தீராமல் படுக்க சென்றாள். 

காலையில் எழுந்து சுத்த பத்தமாகக் குளித்து சிவகடாட்சமாக பூஜையறையில் பூஜையில் ஈடுபட்டிருந்த நாராயணனைப் பார்க்க அவரின் துணிக்கடை மேனேஜர் வந்து சேர்ந்தார்.... அவர் பூஜை முடித்து ஆரத்தி காட்டும் வரை அந்த வீடே அமைதியாக இருந்தது..... தீபாராதனையை அனைவருக்கும் காட்டிவிட்டு, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தார்...

“என்னைய்யா காலைலேயே வந்திருக்க... மூஞ்சி வேற அழுது வடியுது....”

“சார்... சார்.... நேத்து நம்ம ஆளுங்க நாலு பேரை அனுப்பி அந்த வீட்டு ஆளுங்களை மிரட்ட சொன்னோமே, அவனுங்களை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிடுச்சாம் சார்....”

“என்னைய்யா சொல்ற... எந்த ஏரியா போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிச்சாம்....”

“நம்ம ஏரியா கான்ஸ்டபிள்தான் அர்ரெஸ்ட் பண்ணி இருக்கார் சார்.... இன்னைக்கு விடியக்காலைல ஒரு மூணு மணிக்கு எனக்கு ஃபோன் பண்ணி சொன்னாரு.... நான்தான் அந்த நேரத்துல உங்களை வந்து தொல்லை பண்ண வேண்டான்னு காலைல வந்தேன்....”

“ஏன்யா அவனுங்களுக்கு மாசாமாசம் எவ்ளோ மாமூல் அழுவுறோம்... அப்படியும் நம்ம ஆளுங்க மேல கைய வச்சிருக்காங்க... நீ உடனே அந்த ஸ்டேஷன்க்கு ஃபோனைப் போடு நான் பேசறேன்.... அந்த ஆள்கிட்ட....”

“இந்த விஷயத்துல அவர்மேல தப்பு இல்லை சார்.... அவரு நமக்கு சாதகமா இருக்கணும் நினைச்சுட்டுதான் அங்க போய் இருக்காரு.... அதே மாதிரி அந்த வீட்டுல இருக்கறவங்களை இவர் கேட்டுட்டு இருக்கும்போது கரெக்டா அங்க ACP மதி வந்துட்டாரு போல.... அவர் வந்த பிறகு இவரால எதுவும் செய்ய முடியாம போச்சு.... அவர் சொன்னபடிதான் கைது செய்து கூட்டிட்டு போய் இருக்கார்...”

“ஐயோ அவனா..... அவன் சரியான இம்சை புடிச்சவன் ஆச்சேய்யா... ஓவரா ரூல்ஸ் பேசுவானே.... நேர்மை, நாணயம்ன்னு பேசியே மனுஷனை சாவடிப்பான்.... இப்போ என்னய்யா பண்றது......”

“சார் இதுல இன்னொரு விஷயம் வேற.... இவனுங்க அந்த பொம்பளையை கேஸ் வாபஸ் வாங்க சொல்லி மிரட்டி இருக்கற வீடியோவை அந்த மதி நம்ம கான்ஸ்டபிள்க்கிட்ட காட்டி இருக்காரு...”

“என்னய்யா சொல்ற.... அந்த வீட்டுல இருக்கறவங்க அவ்ளோ தைரியசாலியா தெரியலையே.... அதுவும் அந்த வீட்டு ஆள் கால் இல்லாம வீட்டோட வீடா இருக்கான்.... அது தவிர அந்த அம்மாவும், பொண்ணும்தான் எங்க இருந்து அதுங்களுக்கு இம்புட்டு தைரியம் வந்துச்சு...”

“இல்லை சார், அந்த வீட்டுல வாட்ட சாட்டமா ஒரு ஆள் கூட இருந்தான் போல.... அவன்தான் நம்ம ஆளுங்களை அடிக்க வேற செஞ்சு இருக்கான்.... அவன் ஒரு வக்கீல் அப்படின்னு நம்ம கான்ஸ்டபிள் சொன்னாரு.....”

“யோவ்.... மொதல்ல நம்ம ஏரியா இன்ஸ்க்கு ஃபோனைப் போடு... நம்மக்கிட்ட துட்டை வாங்கிட்டு நம்ம ஆளுங்களையே உள்ள போடுவானா.... மொதல்ல அவனுங்களை வெளிய எடுத்துட்டு அடுத்து என்ன பண்ணலாம்ன்னு பார்க்கலாம்.....”

போலீசையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு நாராயணனும், நரேஷும் ஆடப்போகும் ஆட்டத்தை எப்படி பாரதியும், சாரங்கனும் எதிர்கொள்ளப் போகிறார்கள்..... அடுத்த அத்தியாயத்திலிருந்து பார்க்கலாம்.

தொடரும்

Episode 19

Episode 21

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.