(Reading time: 9 - 17 minutes)

“சார் அது.... அது..... சும்மா ஜாலியா இருந்துட்டு போக இங்க அப்போ அப்போ வருவோம் சார்.....”, மறுபடி அந்த ரௌடி வாயை விட இந்த முறை மதியின் கை அவனின் கன்னத்தில் இறங்கியது. மதி இப்பொழுது அவனின் சகாக்களை பார்க்க அவர்கள் அனைவரும் வாயை மூடிக்கொண்டார்கள்.

“இவங்க எதுக்கு இங்க வந்தோம்ன்னு சொன்னாங்கம்மா....”, மதி மயூரியின் அம்மாவைப் பார்த்து கேட்க, அவரும் அந்த ரௌடிகள் வந்ததில் ஆரம்பித்து தற்பொழுது நடந்தது வரை ஒன்றுவிடாமல் சொன்னார்.

“அந்தத் துணிக்கடை முதலாளிக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்... நீங்க எதுக்காக அவர் சார்பா இவங்களை வந்து மிரட்டறீங்க....”

“சார் சார்... எங்களுக்கு அவர் யாருன்னே தெரியாது சார்... அந்தம்மா சொல்றாங்கன்னு நீங்களும் நம்பறீங்களே.... நாங்க கேஸ் பத்தி எல்லாம் எதுவுமே பேசலை சார்... இவங்களே ஏதோ இட்டுக்கட்டி சொல்றாங்க...”, இத்தனை களேபரங்கள் நடக்கும்போதும் பாரதி அறையை விட்டு வராமல் தன் ரெகார்டிங் வேலையை மட்டும் தொடர்ந்தாள்.

“அப்படியா, சாரங்கன் நீங்க உள்ளதானே இருந்தீங்க.... இதுல யார் சொல்றது உண்மை.....”

“சார் அந்தாள், அந்தம்மோட மாப்பிள்ளை... அப்போ அவங்க சொல்றதைத்தானே உண்மைன்னு சொல்லுவான்....”,என்று சொல்ல ‘மாப்பிள்ளையா’, என்று அதிர்ச்சியுடன் மதி சாரங்கனைப் பார்க்க, அவன் மதியைப் பார்த்து சிரித்தபடியே கண்ணடித்தான்....

“ஓ அப்போ இதுக்கு நீ என்ன சொல்ற என்று அங்கு நடந்ததில் ஒரு பகுதியை மதி தனது வாட்ஸ்அப்பில் வீடியோவாக காட்ட இப்பொழுது அந்த ரௌடிக்கு வேர்க்க ஆரம்பித்தது......

“கான்ஸ்டபிள் இந்த நாலு நாலு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணி நான் வந்த ஜீப்ல ஏத்துங்க.... ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்கலாம்....”, என்று கூற அவர் வேறு வழியில்லாமல் அவர்களை மதியின் வண்டியில் ஏற்றினார்..... மதி சாரங்கனிடம் பிறகு ஃபோன் செய்வதாகக் கூறி அவர்களுடன் கிளம்பினான்.

அனைவரும் கிளம்பியதும் வாசல் கதவைப் பூட்டிய சாரங்கன் பாரதியை வெளியில் வர சொன்னான்.... அவளும் வெளியில் வந்து தான் அதுவரை ரெகார்ட் செய்ததை சாரங்கனிடம் காட்டினாள்.

“என்ன பாரதி.... நமக்கு இந்தக் கேஸ்ல பெரிய அளவுல வேலையே இருக்காது போல இருக்கே... இப்படி அவனுங்களே வந்து வாக்குமூலம் கொடுத்து மாட்டிக்கிட்டாங்க....”

“இல்லை சாரங்கா.... அத்தனை ஈஸியா நாம இதை எடுக்க முடியாது..... இதை எப்படி வேணும்னாலும் அவங்க மாத்துவாங்க.... இவனுங்க யாருன்னே தெரியாதுன்னு சொல்லலாம்.... இல்லைனா பிசினஸ் எதிரிதான் இந்த ஆளுங்களை செட் பண்ணி அனுப்பி இருக்காங்கன்னு சொல்லலாம்..... இப்படி நிறைய வாய்ப்புகள் இருக்கு....”

“நீ சொல்றது சரிதான்..... அடுத்து என்ன பண்ணலாம் சொல்லு....”

“நான் இவங்களோட இன்னைக்கு நைட் இருந்துட்டு காலைல வரேன்.... நீ வீட்டுக்கு கிளம்பு சாரங்கா... நாளைக்கு காலைல நாம சீனியர் சார் பார்த்துட்டு அடுத்து என்ன பண்ணலாம்ன்னு முடிவு பண்ணலாம்....”, பாரதி சொல்ல சாரங்கன் அங்கிருந்து கிளம்பினான்.

சாரங்கன் கிளம்ப வாயிற்கதவை சாத்த வந்த மயூரியிடம், “மயிலு மாமாவ நினைச்சுட்டே தூங்காம உடம்பை கெடுத்துக்காத.... நல்லா ரெஸ்ட் ஏடு ஓகேவா..... நாளைக்கு பார்க்கலாம்....”, என்று கூற மயூரி அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள்.  அவளின் அதிர்ந்த தோற்றத்தைப் பார்த்து சிரித்தபடியே சாரங்கன் அவளுக்கு கையசைத்துக் கிளம்பினான்.

தே நேரத்தில் நடிகரின் பண்ணை வீட்டில்......

“யோவ் எந்த ...................... எனக்கு எதிரா கேஸ் போட்டு இருக்கறது.... எனக்கு விவரம் தெரிஞ்சாகணும்.....”

“சார் அது நீங்க இப்போ சமீபத்துல எந்தப் பொண்ணு மேலயானும் கை வச்சீங்களா......”

“ஏன்யா வாரத்துக்க நாலு பேர் மேல வைக்கறேன்... இதுல எவளைன்னு சொல்ல....”, இந்தத் திமிருக்கே இந்தாளை மிதிச்சுக் கொல்லனும்.... என்று மனதிற்குள் நினைத்தாலும் வெளியில் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் நின்றான் நரேஷின் மேனேஜர்.

“எந்த ஏரியாலையா கம்ப்ளைன்ட் ஆகி இருக்கு....”,என்று கேட்க மேனேஜரும் ஏரியா பெயரை சொல்ல அங்கிருக்கும் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டான் நரேஷ்.

“இன்ஸ்பெக்டர் சார்.... யாரோ எனக்கு இருக்கற நல்ல பேரை சிதைக்கணும் அப்படிங்கறதுக்காக இப்படி பொய் கேஸ் போட்டு இருக்காங்க.... நீங்க அவங்க பேர் மட்டும் சொல்லுங்க....”

“உங்களுக்கு வந்த நோட்டீஸ்லையே எல்லா விவரமும் இருக்குமே சார்.....”

“ஆமாம் சார் ஏதோ ராணின்னு பேரு போட்டு இருந்தது.... அப்படி யாரையுமே எனக்குத் தெரியாதே...”,என்று நரேஷ் கூற, ‘அடப்பாவி எனக்குத் தெரிந்தே ஒரு மூணு ராணியை இவன் வச்சிருந்தான்... இப்படி புளுகரானே’, என்று பார்த்தான் நரேஷின் மேனேஜர்.

“தேவிகாராணின்னு ஒருத்தங்கதான் உங்க மேல புகார் கொடுத்திருக்காங்க..... கொஞ்ச நாள் முன்னாடி சின்ன சின்ன வேடங்கள்ல நடிச்சுட்டு இருந்தாங்க.... ”,இன்ஸ்பெக்டர் கூற, ராணியா என்று என்று அதிர்ந்தான் நரேஷ்.

தொடரும்

Episode 18

Episode 20

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.