(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 18 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

Hello friends,  எல்லாரும் எப்படி இருக்கீங்க.... கிருஷ்ணஜெயந்தில ஆரம்பிச்சது.... வரிசையா கேப்பே இல்லாம பண்டிகைகள் வச்சு வாங்குது.... நவராத்திரி முடிந்தது நிஜமாகவே ஒரு ரோலர் கோஸ்டர் போன effect.... Full Back காலி.... கொலு முழுக்க pack செய்தவுடன் நேரே சென்று நின்றது டாக்டர் வீட்டு வாசலில்தான்.... அவரும் எப்பொழுதும் போல் ஊசியைப் போட்டு ஆடாமல், அசங்காமல் ஒரே இடமாகப் படு என்று கட்டளை பிறப்பித்து விட்டார்.  நாம எங்கிருந்து அப்படி இருக்க.... வீடு கிளீனிங்.... அடுத்து தீபாவளி purchase என்று ஆரம்பித்தாகி விட்டது.... கிடைச்ச கேப்பில் டைப் அடிக்க முயற்சித்து முடிந்தது ஐந்து பக்கங்கள்தான்.... அதற்குள் முதுகு செம்மத்தியாக வலிக்க ஆரம்பித்து விட்டது... ஸோ இந்த அப்டேட் அண்ட் அடுத்த அப்டேட் ரெண்டும் சிறியதாகத்தான் இருக்கும்... அட்ஜஸ்ட் மாடி.... எனக்கே ஜவ்வு மாதிரி இழுப்பது போர் அடிக்கிறது... but what to do.... No choice.... சிறிய அப்டேட் கொடுத்தற்கு ரொம்ப சாரி....

பாரதியின் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த நால்வரும் மிகத் தைரியமாக வாசல் வழியாகவே உள் நுழைந்தனர்..... வந்ததில் ஒருவனின் முகம் கூட நாகரிகமாக இல்லை.... மயூரியின் அம்மாவிற்கு மறுபடி ஒருமுறை தைரியம் சொல்லி பாரதியும், சாரங்கனும் அடுத்த அறையினுள் நுழைய, வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டது....

இரண்டு நிமிடம் தாமதப்படுத்தி மயூரியின் அன்னை சென்று கதவைத் திறந்தார்.... கிரில் கேட் சாத்தியே இருக்க, அதற்கு பின் நிற்பவர்களைப் பார்த்து உள்ளுக்குள் அவருக்கு உதறல் எடுக்கத் துவங்கியது...

“ஏம்மா பெல் அடிச்சா உடனே வந்து திறக்கத் தெரியாதா.... ஆடி அசைஞ்சு வர்றீங்க....  அடுத்து இந்த கேட்டைத் திறக்க எத்தனை நேரம் பண்ணுவீங்க.... சீக்கிரம் திறங்க.....”

“நீங்கள்லாம் யாருங்க.... எதுக்காக கதவைத் திறக்க சொல்றீங்க....”

“ஹ்ம்ம் நாங்கள்லாம் இன்னைக்கு ஒருநாள் உனக்கு மாப்பிள்ளையா இருக்க வந்தவனுங்க.... சும்மா பேசாம கதவைத் திறம்மா....”

“ஹே என்ன பேசறப்பா.... ராத்திரி நேரத்துல வந்து கலாட்டா பண்ணிட்டு இருக்கீங்க.... நீங்க இப்போ கிளம்பலைன்னா நான் போலீஸ்க்கு போன் பண்ண வேண்டி வரும்”

“ஐயோ ரொம்ப பயமா இருக்கும்மா.... சும்மா காமெடி பண்ணாம கதவைத் திற.... நீயே திறந்தா சேதாரம் கம்மி.... நாங்களா உடைச்சுட்டு வந்தா ஆவப்போற சேதாரத்துக்கு நாங்க பொறுப்பில்லை....”, இங்கு அந்த ரௌடி  பேசப்பேச உள்ளே சாரங்கனுக்கு கொதித்துக் கொண்டு வந்தது.... அவனை அடக்கி அறைக்குள்ளேயே இருக்க வைப்பதற்குள் பாரதியின் பாடு திண்டாட்டமாகியது....

மயூரியின் அன்னை மேலும் அவர்களுடன் கதவைத் திறக்க முடியாது என்று வாதாட, அவர்கள் அந்த கிரில் கேட்டை பிடித்து இழுத்து சத்தம் எழுப்ப ஆரம்பித்தார்கள்.... அந்த நள்ளிரவு வேளையில் மிக நாராசமாக அந்த சத்தம் கேட்க ஆரம்பித்தது....  அக்கம் பக்க வீடுகளில் விளக்கு ஏறிய ஆரம்பிக்க, அவர்களில் யாரேனும் உதவிக்கு வருவார்களா என்பதுபோல் பார்த்தார் மயூரியின் அன்னை.... வாசலில் நின்றிந்தவர்களின் தோற்றத்தைப் பார்த்த அடுத்த நொடி விளக்குகள் அணைக்கப்பட்டு ஜன்னல்கள் இழுத்து சாத்தப்பட்டது.... கேட்டைப் பிடித்திருந்த ரௌடி நக்கலாக மயூரியின் அன்னையைப் பார்த்து சிரிக்க, தன் விதியை நொந்தபடியே கேட்டைத் திறந்தார்...

“ஒரு கேட் திறக்க எம்மா நேரம் பண்ற நீ... மாபிள்ளைன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்குதா.... அதுவும் ஒண்ணுக்கு நாலு மாப்பிள்ளைங்க வந்திருக்கோம்....”

“மாப்பிள்ளையா இருக்கறத விட உனக்கு மாமனாரா இருக்க கூட ஓகே மச்சான்.... பொண்ணை விட அம்மா தள தளன்னு இருக்காங்க....”,அருகில் நின்றவன் இன்னும் தரம் தாழ்ந்து பேச, மயூரியின் அன்னையின் கண்ணிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.... மயூரியாலும் அழுகையை அடக்க முடியவில்லை.... சாரங்கன் அவர்களை அடித்து நொறுக்க கிளம்ப பாரதி அவனைத் தடுத்து அங்கு நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்...

பாரதியின் கையிலிருந்த ஹான்டிகாமில் அந்த நால்வரும் வந்ததிலிருந்து அனைத்தும் பதிவாகிக்கொண்டிருந்தது....

“எதுக்கு இந்த ராத்திரி நேரத்துல வந்து இப்படி கண்டபடி பேசிட்டு இருக்கீங்க...”,மயூரியின் அம்மா அழுதபடியே கேட்க...

“ஒழுங்கா நாளைக்கு காலைல மொதோ வேலையாப் போயி போட்ட கேசை வாபஸ் வாங்கு.... அது வரைக்கும் நாங்கள்லாம் இங்கதான் இருப்போம்.... நாளைக்கு காலைல நீ மட்டும், நம்ம ஆளு ஒருத்தனோட  போலீஸ் ஸ்டேஷன் போற.... நீ திரும்ப வர்ற வரைக்கும் இந்த வீட்டுல இருக்க மத்தவங்க எங்க கஸ்டடில இருப்பாங்க.... இதுல எதாச்சும் கொஞ்சம் மாறினாலும் அப்பறம் நடக்கறதுக்கு நாங்க பொறுப்பில்லை....”

“என்ன சும்மா மிரட்டறீங்களா.... அப்படி எல்லாம் கேஸ் வாபஸ் வாங்க முடியாது...”, என்று அவர்களிடம் சண்டையிட்ட மயூரி கைபேசியில் அருகிலிருந்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அங்கு அந்த ரௌடிகள் வந்து மிரட்டுவதாகக் கூற, அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி காலை கட் செய்ய,

“என்ன உடனே வந்து எங்களை எல்லாம் அர்ரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போயிடறோம்.... கவலைப்படாம இரு பாப்பான்னு போலீஸ் மாமா சொன்னாரா பாப்பா.... போலீஸ் வந்தாலும் பிரச்சனை இல்லை.... நீதான் எங்களை இந்த நேரத்துக்கு வர சொல்லி இருக்கேன்னு சொல்லிடுவோம்.... நாங்க ரெகுலரா வந்து போற நேரம்தான்னு சொல்லுவோம்... யாரு சொல்றதை நம்புறாங்கன்னு பார்க்கலாம் ”, படு நாராசமாக அந்த ரௌடி பேச, மயூரி அதைக் கேட்க முடியாமல் காதை  மூடிக்கொண்டாள்.

“இங்க பாருடா, பாப்பா காதை மூடுது.... இங்க பாருங்க ரெண்டு பேரும் ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்றபடி கேட்டு நடங்க.... இப்படி வந்து மிரட்டறோம்ன்னா யோசிக்க வேண்டாம்.... எந்த போலீஸும் எங்களை ஒண்ணும் பண்ண முடியாதுன்னு.... இப்போ என்னா பண்ற நாங்க எல்லாம் சரக்கடிக்கணும்.... அதுக்கு கார சாரமா எதுனா சைடு டிஷ் பண்ணி எடுத்துட்டு வா.... பாப்பா எங்களுக்கு பொழுது போவணும், பாட்டோ, டான்ஸோ உனக்கு எது வருமோ அதைப் பண்ணு பார்ப்போம்”,படு நக்கலாக அங்கிருந்த ரவுடி மயூரியின்  அன்னையையும், அவளையும் பார்த்துக் கூற, மறுபடி இருவரும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்கள்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.